அசென்சன் தீவு

7°56′S 14°22′W

அசென்சன் தீவு
கொடி சின்னம்
நாட்டுப்பண்: God Save the Queen
Location of அசென்சன் தீவின்
தலைநகரம்ஜார்ஜ் டவுன்
பெரிய நகர் தலைநகரம்
ஆட்சி மொழி(கள்) ஆங்கிலம்
அரசாங்கம் செயிண்ட் எலனாவில் தங்கி்யுள்ள பகுதி
   நிர்வாகி மைக்கல் இள்
உருவாக்கம்
   முதல் குடியிறுப்புகள் 1815 
பரப்பு
   மொத்தம் 91 கிமீ2 (222வது)
35 சதுர மைல்
   நீர் (%) 0
மக்கள் தொகை
   கணக்கெடுப்பு 1,100 (n/a)
நாணயம் செயிண்ட். எலனா பவுண்ட்
(அமெரிக்க டாலர் ஏற்றுக் கொள்ளப்படும்) (n/a)
நேர வலயம் ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம் (ஒ.அ.நே+0)
அழைப்புக்குறி 247
இணையக் குறி .ac

அசென்சன் தீவு தெற்கு அட்லாண்டிக் கடலில் ஆபிரிக்காவின் மேற்குக் கரையிலிருந்து சுமார் 1000 மைல் (1600 கி.மீ.) தொலைவில் அமைந்துள்ள ஒரு தீவாகும். இது பிரித்தானிய கடல் கடந்த ஆட்புலமான செயிண்ட் எலனா, அசென்சன் மற்றும் டிரிசுதான் டா குன்ஃகாவைச் சார்ந்த பகுதியாகும். இது செயிண்ட். எலனாவில் இருந்து வடமேற்குத் திசையில் 800 மைல் தொலைவில் அமைந்துள்ளது. இத்தீவு இயேசு கிறிஸ்துவின் விண்ணேற்பு (Ascension) திருவிழா நாளில் கண்டுபிடிக்கப்பட்டதனால் இத்தீவிற்கு இப்பெயர் வழங்கிற்று.

இத்தீவில் அமெரிக்க பிரித்தானிய வான்படைகளின் கூட்டுத்தளமான வைடவேக் வான்படைத்தளம் அமைந்துள்ளது. போக்லாந்து போரின் போது பிரித்தானிய இராணுவத்தால் இத்தீவு பெருவாரியாக பயன்படுத்தப்பட்டது. உலக அமைவிட முறைமைக்கான (GPS) மூன்று நில அண்டனாக்களில் ஒன்று இங்கு அமைந்துள்ளது.

அசெசன் தீவு தனக்கான ஒரு சின்னத்தையோ கொடியையோ கொண்டிருக்கவில்லை, இங்கு பிரித்தானிய கொடியும் சின்னமும் பயன்படுத்தப்படுகிறது.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.