2016 வடகிழக்குப் பருவமழைக் காலம்
இந்தியாவில் 2016 ஆம் ஆண்டுக்கான வடகிழக்குப் பருவமழைக் காலம் அக்டோபர் 30 அன்று தொடங்கியது.
![]() | இந்த கட்டுரை விக்கித்தரவில் சேர்க்கப்படவில்லை அல்லது சரியான விக்கித்தரவில் சேர்க்கப்படவில்லை. சரியான விக்கித்தரவில் அல்லது ஏற்கெனவே உள்ள விக்கித்தரவில் சேர்த்து உதவுங்கள். |
இம்முறை சற்று தாமதமாக ஆரம்பித்தாலும், இயல்பான மழையளவு இருக்கும் என வானிலை ஆராய்ச்சி நடுவம் அறிவித்தது.[1][2] எனினும் நவம்பர் 30 வரை குறிப்பிடத்தக்க அளவில் மழை பெய்யவில்லை.[3]
மழையளவில் பற்றாக்குறை
- வங்காள விரிகுடாக் கடலில் உருவான நாடா எனும் புயலின் காரணமாக பெய்த மழையால், தமிழ்நாடு மாநில மழையளவுப் பற்றாக்குறை 71% என்பதிலிருந்து 68% என்றானது.[4]
- அடுத்து உருவான வர்தா புயலினால் ஏற்பட்ட மழைப்பொழிவினை அடுத்து, தமிழ்நாடு மாநில மழையளவுப் பற்றாக்குறை 61% என்றானது (டிசம்பர் 13 அன்று காலை 8.30 மணி நிலவரப்படி)[5].
உருவான புயல்கள்
இந்தப் பருவமழைக் காலத்தில், இரண்டு புயல் சின்னங்கள் வங்காள விரிகுடாக் கடலில் உருவாகின.
நாடா புயல்

வங்கக் கடலில் நிலைகொண்ட காற்றழுத்தத் தாழ்வுநிலை, கரையைக் கடக்கும்போது கனமழை பெய்யும் என சென்னை வட்டார புயல் எச்சரிக்கை நடுவம் அறிவித்தது.[6][7] இதனையடுத்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகை, கடலூர் மாவட்டங்களிலுள்ள பள்ளிகளுக்கு டிசம்பர் 1, டிசம்பர் 2 ஆகிய இரண்டு நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. சென்னை, கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசியப் பேரிடர் கவனிப்புப் படைகள் அனுப்பப்பட்டன.
மாநிலத்திற்கு நல்ல மழைப்பொழிவினை தரும் என எதிர்பார்க்கப்பட்ட நாடா புயல், குறிப்பிடத்தக்களவில் மழையைக் கொண்டுவரவில்லை.
வர்தா புயல்
- சென்னையில் டிசம்பர் 11 அன்று இரவில் தொடங்கிய மழை, டிசம்பர் 12 அன்று காலை 8.30 மணிவரை 5.8 சென்டிமீட்டர் எனும் அளவாக பதிவாகியது.
- டிசம்பர் 12 அன்று காலை 8.30 மணி முதல் டிசம்பர் 13 அன்று காலை 8.30 மணி வரையிலான 24 மணிநேரத்தில் சென்னை, அதனைச் சார்ந்த பகுதிகளில் பதிவான மழையளவுகள்[8]:
- சத்யபாமா பல்கலைக்கழகம் (சோழிங்கநல்லூர்) - 38 சென்டிமீட்டர்
- காட்டுக்குப்பம் (காஞ்சிபுரம் மாவட்டம்) - 34 சென்டிமீட்டர்
- மீனம்பாக்கம் - 20 சென்டிமீட்டர்
- நுங்கம்பாக்கம் - 12 சென்டிமீட்டர்
- புயலின்போது பெய்த மழையால் வேலூர் மாவட்டத்து நீர்நிலைகளில் நீர் கொள்ளளவு அதிகரித்தது. ஆற்காடு, நெமிலி ஆகிய இடங்களிலுள்ள 3 பெருங்குளங்கள் நிரம்பின.[9]
மாவட்டவாரியாக மழையளவுகள்
அக்டோபர், நவம்பர், டிசம்பர் என 3 மாதங்களுக்கு பெய்யும் வடகிழக்குப் பருவ மழை, இவ்வாண்டில் நவம்பர் இறுதிநாள் வரை மிகக் குறைந்தளவே பெய்திருந்தது.
வரிசை எண் | மாவட்டம் | இயல்பான மழையளவு (மில்லி மீட்டர்) | 1 அக்டோபர் முதல் 30 நவம்பர் வரை பதிவான மழையளவு (மில்லி மீட்டர்)[10] | % வேறுபாடு |
---|---|---|---|---|
1 | அரியலூர் மாவட்டம் | 398.6 | 92.1 | -77 |
2 | இராமநாதபுரம் மாவட்டம் | 369.6 | 140.8 | -62 |
3 | ஈரோடு மாவட்டம் | 269.4 | 48.1 | -82 |
4 | கடலூர் மாவட்டம் | 515.5 | 92.8 | -82 |
5 | கரூர் மாவட்டம் | 263.7 | 38.2 | -86 |
6 | கன்னியாகுமரி மாவட்டம் | 434.9 | 139.4 | -68 |
7 | காஞ்சிபுரம் மாவட்டம் | 508.8 | 54.8 | -89 |
8 | கிருஷ்ணகிரி மாவட்டம் | 254.8 | 43.2 | -83 |
9 | கோயம்புத்தூர் மாவட்டம் | 281.5 | 97.2 | -65 |
10 | சிவகங்கை மாவட்டம் | 335.6 | 86.8 | -74 |
11 | சென்னை மாவட்டம் | 634.3 | 94.9 | -85 |
12 | சேலம் மாவட்டம் | 314.7 | 42.1 | -87 |
13 | தஞ்சாவூர் மாவட்டம் | 403 | 137.2 | -66 |
14 | தர்மபுரி மாவட்டம் | 283.8 | 53 | -81 |
15 | திண்டுக்கல் மாவட்டம் | 347.1 | 177.6 | -49 |
16 | திருச்சிராப்பள்ளி மாவட்டம் | 313.1 | 104.9 | -66 |
17 | திருநெல்வேலி மாவட்டம் | 367.6 | 152.6 | -58 |
18 | திருப்பூர் மாவட்டம் | 267.7 | 176.1 | -34 |
19 | திருவண்ணாமலை மாவட்டம் | 364.4 | 70.9 | -81 |
20 | திருவள்ளூர் மாவட்டம் | 472.3 | 33.4 | -93 |
21 | திருவாரூர் மாவட்டம் | 504.3 | 158.1 | -69 |
22 | தூத்துக்குடி மாவட்டம் | 336.7 | 145.4 | -57 |
23 | தேனி மாவட்டம் | 306.7 | 125.4 | -59 |
24 | நாகப்பட்டினம் மாவட்டம் | 652.9 | 191.3 | -71 |
25 | நாமக்கல் மாவட்டம் | 255.6 | 31.6 | -88 |
26 | நீலகிரி மாவட்டம் | 399.1 | 135.6 | -66 |
27 | புதுக்கோட்டை மாவட்டம் | 305.1 | 102.1 | -67 |
28 | பெரம்பலூர் மாவட்டம் | 346 | 92.8 | -73 |
29 | மதுரை மாவட்டம் | 357.5 | 171.9 | -52 |
30 | விருதுநகர் மாவட்டம் | 353.4 | 115.4 | -67 |
31 | விழுப்புரம் மாவட்டம் | 381.6 | 100.6 | -74 |
32 | வேலூர் மாவட்டம் | 290.4 | 38.1 | -87 |
மேற்கோள்கள்
- "தமிழகத்தில் தொடங்கியது வடகிழக்கு பருவமழை: வானிலை ஆய்வு மையம்". தினமணி (30 அக்டோபர் 2016). பார்த்த நாள் 30 அக்டோபர் 2016.
- "Northeast monsoon sets in TN". தி இந்து (30 அக்டோபர் 2016). பார்த்த நாள் 30 அக்டோபர் 2016.
- "This monsoon may present a stark contrast to the last one". தி இந்து (27 நவம்பர்2016). பார்த்த நாள் 30 நவம்பர் 2016.
- "காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவானது: தமிழ்நாடு வெதர்மேன்". தி இந்து (3 டிசம்பர் 2016). பார்த்த நாள் 3 டிசம்பர் 2016.
- "Districtwise Rainfall Status". Regional Meteorological Centre, Chennai (13 டிசம்பர் 2016). பார்த்த நாள் 13 டிசம்பர் 2016.
- "சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை: தமிழக அரசு". தி இந்து (தமிழ்) (30 நவம்பர்2016). பார்த்த நாள் 30 நவம்பர் 2016.
- "காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவானது: தமிழ்நாடு வெதர்மேன்". தி இந்து (தமிழ்) (30 நவம்பர் 2016). பார்த்த நாள் 30 நவம்பர் 2016.
- "T.N. grapples with cyclone havoc". தி இந்து (14 டிசம்பர் 2016). பார்த்த நாள் 14 டிசம்பர் 2016.
- "Water level in reservoirs rises; Palar gets a lifeline". தி இந்து (14 டிசம்பர் 2016). பார்த்த நாள் 14 டிசம்பர் 2016.
- "Districtwise Rainfall Status". Regional Meteorological Centre, Chennai (30 நவம்பர்2016). பார்த்த நாள் 30 நவம்பர் 2016.