வர்தா புயல்

அதி தீவிர வர்தா புயலானது வடக்கு இந்தியப் பெருங்கடலின் மேலாக 2016ல் நிகழ்ந்த ஒரு வெப்ப மண்டலச் சூறாவளி ஆகும். திசம்பர் 12ஆம் தேதி சென்னைக்கு அருகே கரையைக் கடந்த இப்புயலானது, திசம்பர் 13 ஆம் கர்நாடக மாநில நிலப் பரப்பைத் தாண்டி அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வலுவிழந்தது.[1][2]. இது 2016 வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் நிகழும் நான்காவது புயலாகும்.

அதி தீவிரப் புயல் வர்தா
மிகவும் கடுமையான சுழல் புயல் (இ.வா.து. அளவு)
Category 1 (சபிர்-சிம்ப்சன் அளவு)
உச்சபட்ச பலத்துடன் 11 திசம்பர் அன்று வர்தா
தொடக்கம்6 திசம்பர் 2016
மறைவு13 திசம்பர் 2016
உயர் காற்று3-நிமிட நீடிப்பு: 130 கிமீ/ம (80 mph)
1-நிமிட நீடிப்பு: 140 கிமீ/ம (85 mph)
தாழ் அமுக்கம்982 hPa (பார்); 29 inHg
இறப்புகள்மொத்தம் 38
சேதம்$2 பில்லியன் (2016 US$)
பாதிப்புப் பகுதிகள்தாய்லாந்து, சுமத்ரா, மலேசியா, அந்தமான் நிக்கோபார் தீவுகள், தென்னிந்தியா
2016 வடகிழக்குப் பருவமழைக் காலம்-இன் ஒரு பகுதி

திசம்பர் 3ஆம் தேதி மலேசியத் தீபகற்பத்தின் அருகே குறைந்த காற்றழுத்த மண்டலமாக உருவாகிய இப்புயலனது, திசம்பர் 6ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறியது. தொடர்ந்து அடுத்த நாள் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிய இது, திசம்பர் 8ஆம் தேதி அந்தமான் நிக்கோபார் தீவுகளைத் தாண்டி புயலாக வலுப்பெற்றது. தொடர்ந்து மேற்கு நோக்கி நகர்ந்து வந்த இப்புயலானது திசம்பர் 9ஆம் தேதி தீவிர புயலாக மாறியது. 11 திசம்பர் அன்று அதி தீவிர புயலாக மாறும் முன் காற்றின் வேகம் 130 km/h (81 mph) ஆகவும், மத்திய அழுத்தம் 982 hPa (29.0 inHg) ஆகவும் இருந்தது. தீவிர புயலாக வலுவிழந்த இப்புயலானது சென்னைக்கு அருகே திசம்பர் 12 ஆம் தேதி கரையைக் கடந்தது.

இப்புயலுக்கு சிவப்பு ரோஜா எனப் பொருள்படும் வர்தா என்ற பெயர் பாகிஸ்தானால் பரிந்துரைக்கப்பட்டது.[3]

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.