மாசிடோனிய தெனார்

மாசிடோனிய தெனார் அல்லது மாக்கடோனிய தெனார் (ஆங்கிலம்: Macedonian denar; சின்னம்: ден; குறியீடு: MKD) மாசிடோனிய குடியரசின் நாணயம். 1992 வ்ரை மாசிடோனியக் குடியரசு யுகோஸ்லாவியாவின் ஒரு பகுதியாக இருந்தது. அப்போது யுகோஸ்லாவிய தினாரே மாசிடோனியாவின் நாணயமாக இருந்தது. 1990களில் யுகோஸ்லாவியா சிதறியதால் பிரிந்து போன ஒவ்வொரு நாடும் தனியே நாணய முறைகளை அறிமுகப்படுத்திக் கொண்டன. 1993ல் மாசிடோனியா மாசிடோனிய தெனார் நாணய முறையை அறிமுகப்படுத்தியது. ஒரு தெனாரில் 100 தெனிக்கள் உள்ளன. தெனார் என்ற சொல்லின் பன்மை வடிவம் “தெனாரி”.

மாசிடோனிய தெனார்
Македонски денар
Makedonski denar
ஐ.எசு.ஓ 4217
குறிMKD
வகைப்பாடுகள்
சிற்றலகு
1/100தெனி
பன்மைதெனாரி
குறியீடுден
வங்கிப் பணமுறிகள்10, 50, 100, 500, 1000, 5000 தெனாரி
Coins50 தெனி, 1, 2, 5, 10, 50 தெனாரி
மக்கள்தொகையியல்
User(s)மாசிடோனியக் குடியரசு
Issuance
நடுவண் வங்கிமாசிடோனியக் குடியரசின் மத்திய வங்கி
Websitewww.nbrm.gov.mk
Valuation
Inflation8.4%
SourceThe World Factbook, 2008 கணிப்பு
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.