புந்துலாந்து

புந்திலாந்து (அரபு மொழி: أرض البنط) சோமாலியா நாட்டின் வடகிழக்கில் கரோவ் மற்றும் நுகால் பகுதிகளை சுற்றியுள்ள நிலப்பகுதியாகும். சோமாலியாவின் மூன்றில் ஒரு பகுதி மக்கள் இம்மாநிலத்தில் வாழ்கின்றனர்,[2][3] மற்றும் நிலப்பரப்பிலும் மூன்றில் ஒருபகுதி கொண்டது.[4] இதன் தலைவர்கள் 1998ஆம் ஆண்டு புன்ட்லாந்து தன்னாட்சி பெற்ற மாநிலமாக அறிவித்தனர்,ஆனால் அண்டையிலுள்ள சோமாலிலாந்து போல் சோமாலியாவிடமிருந்து முழு விடுதலை அறிவிக்கவில்லை.[5] எகிப்தின் தொன்மையான மூலங்களில் குறிப்பிடப்படும் புன்ட்டின் நாடு என்பதைக் கொண்டே இம்மாநிலப் பெயர் எழுந்தது என்றாலும் இங்குதான் குறிப்பிடப்பட்ட புன்ட்டின் நாடு அமைந்திருந்ததா என்று சர்ச்சைகள் நடப்பில் உள்ளன.[6][7][8]

புன்ட்லாந்து,சோமாலியா மாநிலம்
أرض البنط
கொடி சின்னம்
Location of புன்ட்லாந்து
தலைநகரம்கரோவ்
8°24′N 48°29′E
பெரிய நகர் போசாசோ (வணிக தலைநகர்)
ஆட்சி மொழி(கள்) சோமாலி மொழி மற்றும் அரபு
Government
   தலைவர் அப்திரஹ்மான் மொகமது ஃபரோல்
   துணைத்தலைவர் அப்திசமது அலி சிரே
தன்னாட்சி சோமாலியாவில்
   அறிவித்துக் கொண்டது 1998 
   ஏற்கப்பட்டது ஏற்கப்படவில்லை 
பரப்பு
   மொத்தம் 2,12,510 கிமீ2
82,051 சதுர மைல்
   நீர் (%) மிகக் குறைவு.
மக்கள் தொகை
   2009 கணக்கெடுப்பு 3,900,000[1]
   அடர்த்தி 18/km2
46.6/sq mi
நாணயம் சோமாலி சில்லிங் (SOS)
நேர வலயம் EAT (ஒ.அ.நே+3)
   கோடை (ப.சே) கடைபிடிப்பதில்லை (ஒ.அ.நே+3)
அழைப்புக்குறி 252 (சோமாலியா)
இணையக் குறி .so
ஏற்கப்படாத நடப்பில் உண்மையான நாடாகையால் தரவரிசைகள் கிடைப்பதில்லை.

மேற்கோள்கள்

  1. Ministry of Planning and International Corporation
  2. Society for International Development Forum
  3. Puntland Information Minister assassinatedPress TV
  4. Puntland Facts & Figures 2003
  5. Range Resources – Puntland
  6. Dan Richardson, Egypt, (Rough Guides: 2003), p.404
  7. Ian McMahan, Secrets of the Pharaohs, (HarperCollins: 1998), p.92
  8. David B. O'Connor, Stephen Quirke, Quir O'Connor, Mysterious lands, (UCL Press: 2003), p.64

வெளி யிணைப்புகள்

செய்திகள்

அரசியல்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.