தீபா வெங்கட்

தீபா வெங்கட் என்பவர் தமிழ் நடிகையும், வானொலி தொகுப்பாளினியும் மற்றும் குரல் நடிகையும் ஆவார். இவர் சித்தி, அண்ணாமலை, சாரதா, கோலங்கள் போன்ற பல தொலைக்காட்சி தொடர்களிலும் முக்கிய கதாப்பாத்திரமாகவும், தில், உள்ளம் கொள்ளை போகுதே, கண்டேன் காதலை போன்ற சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவரது சிறந்த நடிப்பிற்காக 2007 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு இவருக்கு கலைமாமணி விருது வழங்கிச் சிறப்பித்தது[1]

தீபா வெங்கட்
பிறப்பு11 சூன் 1975 (1975-06-11)
இருப்பிடம்சென்னை, தமிழ்நாடு
பணிநடிகை, குரல் நடிகை, வானொலி தொகுப்பாளினி
செயல்பட்ட 
ஆண்டுகள்
1994 – இன்று வரை
வாழ்க்கைத்
துணை
ராஜகோபால்
(இன்று வரை)

இவர் 2000ஆம் ஆண்டிலிருந்து தேவயானி, சினேகா, சிம்ரன், நயன்தாரா, சங்கீதா, தன்சிகா போன்ற பல தமிழ் திரைப்பட நடிகைகளுக்கு குரல் கொடுத்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆரம்பகால வாழ்க்கை

தீபா வெங்கட் 11 சூன் 1975 ஆம் ஆண்டு மும்பை மகாராட்டினத்தில் தமிழ் குடும்பத்தில் பிறந்தார். இவர் சிறு வயதில் இருக்கும் போது சென்னை தமிழ் நாட்டுக்கு குடிபெயர்ந்தார்.

திரைப்பட வாழ்கை

1994ஆம் ஆண்டில் பாச மலர்கள் என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தமிழில் அறிமுகமானார். இந்த திரைப்படத்தை சுரேஷ் சந்திர மேனன் இயக்க அரவிந்த்சாமி, ரேவதி, அஜீத் குமார் போன்ற பலர் நடித்துள்ளார்கள். அதை தொடர்ந்து 1997இல் அஜித் குமார், விக்ரம் மற்றும் மகேஷ்வரி நடித்த உல்லாசம் என்ற திரைப்படத்தில் விக்கிரமின் தோழியாக அதிதி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். அதை தொடர்ந்து 1998 இல் தினம்தோறும் என்ற திரைப்படத்திலும் 2001 இல் மாதவன், சிம்ரன், ஸ்னேகா நடித்த பார்த்தாலே பரவசம் என்ற திரைபபடத்திலும் மற்றும் விக்ரம், லைலா நடித்த தில் என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் விக்ரமின் தங்கையாக அமலா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். இதே ஆண்டில் சுந்தர் சி இயக்கத்தில் பிரபுதேவா, கார்த்திக் மற்றும் அஞ்சலா ஜவேரி நடித்த உள்ளம் கொள்ளை போகுதே என்ற திரைபபடத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

2002 இல் ரஜினிகாந்த் நடித்த பாபா என்ற திரைப்படத்திலும், 2003 இல் ராமச்சந்திரா மற்றும் 2009 இல் கண்டேன் காதலை போன்ற பல திரைப்படங்களில் சிறு கதாபாத்திரங்கள் அல்லது துணைக்கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

சின்னத்திரை வாழ்க்கை

இவர் 1997 களில் கே.பாலசந்தர் இயக்கிய மின் மினி தொடர்கள் மற்றும் நாகாவின் ரமணி விஷ் ரமணி என்ற தொடர்களில் நடித்தார். அதை தொடர்ந்து இப்படிக்கு தென்றல் என்ற தொடரில் நடித்தார். 1999 இல் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சித்தி என்ற தொடரில் விஜி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அதை தொடர்ந்து 2002 இல் அண்ணாமலை என்ற தொடரிலும் 2003 இல் திருச்செல்வம் இயக்கிய கோலங்கள் என்ற தொடரில் உஷா என்ற முன்னணி கதாபாத்திரத்தில் நடிகை தேவயானியுடன் நடித்துள்ளார். இந்த தொடர் இவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. இந்த தொடர் மே 26, 2003 முதல் டிசம்பர் 4, 2009 வரை சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. அதை தொடர்ந்து ரோஜா என்ற தொடரிலும் விஜய் தொலைக்காட்சியில் பயணம், ஜெயா தொலைக்காட்சியில் அக்னி பிரவேசம் தொடரிலும் நடித்துள்ளார்.

2005 இல் சன் தொலைக்காட்சியில் சூர்யா என்ற தொடரில் நடித்தார் அதை தொடர்ந்து 2006 இல் ராஜ் தொலைக்காட்சியில் சாரதா என்ற தொடரிலும் 2008 இல் ஏவிஎம் இன் கீதாஞ்சலி என்ற தொடரிலும் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர் கடைசியாக நடித்த தொடர் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லட்சியம் என்ற தொடர் ஆகும். இந்த தொடர் 2008 முதல் 2010 வரை ஒளிபரப்பானது. இவர் இதுவரைக்கும் 70 மேட்பட்ட தொடர்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

குரல் நடிகை

இவர் மெயின் ஹூன் ரகவாலா என்ற ஹிந்தி திரைப்படத்தில் குரல் கொடுக்கும் குழந்தை நட்சத்திரமாக குரல் நடிகையாக அறிமுகமானார். அதை தொடர்ந்து பல சிறுவர் வரகதை தொடர்களுக்கு குரல் கொடுத்து வந்தார்.

இவர் 2000 ஆண்டில் அப்பு என்ற திரைப்படத்திற்க்காக நடிகை தேவயானிக்கு குரல் கொடுத்தார். அதை தொடர்ந்து சினேகா, சிம்ரன், நயன்தாரா, சங்கீதா, தன்சிகா, அனுசுக்கா செட்டி, ஜோதிகா, காஜல் அகர்வால் போன்ற பல முன்னணி நடிகைகளுக்கு குரல் கொடுத்துள்ளார். இவர் 2011 இல் மயக்கம் என்ன என்ற திரைப்படத்திற்கு ரிச்சா கங்கோபாத்யாய் என்பவருக்கு குரல் கொடுத்ததற்க்காக நோர்வே தமிழ்த் திரைப்பட விழாவில் சிறந்த குரல் நடிககைக்கான விருதை வென்றுள்ளார்[2].

வானொலி தொகுப்பாளினி

இவர் ஹலோ எப். எம் என்ற வானொலியில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக உள்ளார். இந்த பண்பலையில் மூன்றாம் பார்வை என்ற நிகழ்ச்சியை நிகழ்த்துகிறார்.

பின்குரல்

ஆண்டுதிரைப்படம்இவருக்கு பின்குரல்
2000அப்புதேவயானி
2001ஆனந்தம்சினேகா
2002கன்னத்தில் முத்தமிட்டால்சிம்ரன்
2002ஏழுமலைசிம்ரன்
2002123ஜோதிகா
2002ரமணாசிம்ரன்
2003ஒற்றன்சிம்ரன்
2007தவம்வந்தனா
2008சந்தோசு சுப்பிரமணியம்கவுசல்யா
2008பாண்டிசினேகா
2008வாரணம் ஆயிரம்சிம்ரன்
2008ராமன் தேடிய சீதைநவ்யா நாயர்
2009தநா 07 ஏ எல் 4777சிம்ரன்
2011தெய்வத் திருமகள்அனுசுக்கா செட்டி
வெடிபூனம் கவுர்
மயக்கம் என்னரிச்சா கங்கோபத்தியாயா
2012நண்பன்அனுயா பகவத்
காதலில் சொதப்புவது எப்படிஅமலா பால்
ஒரு கல் ஒரு கண்ணாடிசினேகா
தாண்டவம்அனுசுக்கா செட்டி
நீர்ப்பறவைசுனைனா
முரட்டுக்காளைசிந்து துலானி
2013உதயம் என்.எச் 4மனோஜ் மேனனின் மனைவி
சேட்டைஅஞ்சலி
ராஜா ராணிநயன்தாரா
வணக்கம் சென்னைசங்கீதா
க்ரிஷ் 3கங்கனா ரனாவத் (தமிழ் பதிப்பில்)
தூம் 3கத்ரீனா கைஃப் (தமிழ் பதிப்பிலும் தெலுங்கு பதிப்பிலும்)
டேவிட்தபு
பரதேசிதன்சிகா
கல்யாண சமையல் சாதம்லேகா வாஷிங்டன்
2014ஆஹா கல்யாணம்சிம்ரன்
ஜில்லாகாஜல் அகர்வால்
நான் சிகப்பு மனிதன்லட்சுமி மேனன்
தெனாலிராமன்மீனாக்சி தீக்சித்

நடிப்பு

ஆண்டுதிரைப்படம்கதாப்பாத்திரம்
1994பாச மலர்கள்குழந்தை
2001உள்ளம் கொள்ளை போகுதேஅன்புவின் அக்கா
2001தில்கனகவேலின் சகோதரி
2001பார்த்தாலே பரவசம்சிமியின் தோழி
2002பாபாமனிசாவின் தோழி
2008சரோஜாசரோஜா
2008ஜெயங்கொண்டான்அருணா
2009கண்டேன் காதலைஅஞ்சலியின் அண்ணி

நாடகங்கள்

  • ரமணி விஷ் ரமணி
  • பயணம்
  • ரோஜா
  • சித்தி
  • அண்ணாமலை
  • இப்படிக்கு தென்றல்
  • அக்னி பிரவேசம்
  • கோலங்கள்
  • கீதாஞ்சலி
  • சாரதா
  • சூர்யா
  • லட்சியம்

பெற்ற விருதுகள்

2012: நோர்வே தமிழ்த் திரைப்பட விழா

மேற்கோள்கள்

  1. "Kalaimamani awards announced". Chennai365 (11 May 2007). பார்த்த நாள் 23 October 2018.
  2. "Vishal, Sasikumar, Richa & VSV win at Norway Film Festival 2012". IndiaGlitz (30 April 2012). பார்த்த நாள் 8 May 2012.

புற இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.