ஜேம்ஸ் புகேனன்
ஜேம்ஸ் புகேனன், ஜுனியர். (ஏப்ரல் 23, 1791 - ஜுன் 1, 1868) 1857–1861 இல் அமெரிக்காவின் 15 வது அதிபராக பதவி வகித்தவர் என்பதோடு பதினெட்டாம் நூற்றாண்டில் பிறந்த கடைசியானவருமாவார். இன்றுவரை பென்சில்வேனியா மாகாணத்தைச் சேர்ந்த ஒரே அதிபராகவும் பிரம்மச்சாரியாகவே வாழ்ந்த ஒரே அதிபராகவும் இருக்கிறார்.
James Buchanan | |
---|---|
![]() | |
15th President of the United States | |
பதவியில் March 4, 1857 – March 4, 1861 | |
துணை குடியரசுத் தலைவர் | John C. Breckinridge |
முன்னவர் | Franklin Pierce |
பின்வந்தவர் | Abraham Lincoln |
17th United States Secretary of State | |
பதவியில் March 10, 1845 – March 7, 1849 | |
குடியரசுத் தலைவர் | James K. Polk |
முன்னவர் | John C. Calhoun |
பின்வந்தவர் | John M. Clayton |
United States Senator from Pennsylvania | |
பதவியில் December 6, 1834 – March 5, 1845 | |
முன்னவர் | William Wilkins |
பின்வந்தவர் | Simon Cameron |
9th United States Minister to Russia | |
பதவியில் January 4, 1832 – August 5, 1833 | |
குடியரசுத் தலைவர் | Andrew Jackson |
முன்னவர் | John Randolph |
பின்வந்தவர் | Mahlon Dickerson |
14th United States Minister Plenipotentiary to the Court of St. James's | |
பதவியில் 1853–1856 | |
குடியரசுத் தலைவர் | Franklin Pierce |
முன்னவர் | Joseph R. Ingersoll |
பின்வந்தவர் | George M. Dallas |
Member of the U.S. House of Representatives from Pennsylvania's 4th district | |
பதவியில் March 4, 1823 – March 3, 1831 Alongside: Samuel Edwards, Isaac Wayne, Charles Miner, Samuel Anderson, Joshua Evans, Jr. and George G. Leiper | |
முன்னவர் | James S. Mitchell |
பின்வந்தவர் | William Hiester David Potts, Jr. Joshua Evans, Jr. |
Member of the U.S. House of Representatives from Pennsylvania's 3rd district | |
பதவியில் March 4, 1821 – March 3, 1823 Alongside: John Phillips | |
முன்னவர் | Jacob Hibshman James M. Wallace |
பின்வந்தவர் | Daniel H. Miller |
Chairman of the House Committee on the Judiciary | |
பதவியில் March 4, 1829 – March 3, 1831 | |
முன்னவர் | Philip P. Barbour |
பின்வந்தவர் | Warren R. Davis |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | James Buchanan, Jr. ஏப்ரல் 23, 1791 Mercersburg, Pennsylvania |
இறப்பு | சூன் 1, 1868 77) Lancaster, Pennsylvania | (அகவை
அரசியல் கட்சி | Democratic |
வாழ்க்கை துணைவர்(கள்) | None (Bachelor) |
படித்த கல்வி நிறுவனங்கள் | Dickinson College |
பணி | Lawyer, Diplomat |
சமயம் | Presbyterian |
கையொப்பம் | ![]() |
படைத்துறைப் பணி | |
கிளை | Volunteer |
சமர்கள்/போர்கள் | War of 1812 |
இவர் அதிபர் பதவிக்கு வருவதற்கு முன்பு பிரபலமானவராகவும் அனுபவமிக்க அரசியல்வாதியாகவும் இருந்ததார். புகேனன் பிரதிநிதிகள் சபையிலும் பின்னாளில் செனட்மேலவையிலும் பென்சில்வேனியாவை பிரதிநிதித்துவம் செய்தவர் என்பதோடு அதிபர் ஜேம்ஸ் கே. போல்க்கின் கீழ் அரசு செயலாளராகவும் பணியாற்றியிருக்கிறார். உச்சநீதிமன்றப் பதவியை ஏற்க மறுத்த பின்னர் அதிபர் ஃபிராங்க்ளின் பியர்ஸின் கீழ் இங்கிலாந்துக்கான அமைச்சராகவும் பணியாற்றியிருக்கிறார், இதன் மூலம் அவர் கியூபாவை ஸ்பெயின் விற்க மறுத்தால் அமெரிக்கா போர் தொடுக்க வேண்டும் என்பதைத் பரிந்துரைத்த உணர்ச்சியைத் தூண்டச்செய்யும் ஆஸ்டென்ட் பிரகடனத்தை வரைவதற்கு உதவிகரமானவராக இருந்தார். இந்த ஆஸ்டெண்ட் பிரகடனம் செயல்படுத்தப்படவில்லை என்பதோடு பியர்ஸின் நிர்வாகத்தையும் பெருமவுளக்கு சேதப்படுத்தியது.
1844, 1848, மற்றும் 1852 ஆம் ஆண்டுகளில் ஜனநாயகக் கட்சி அதிபர் பதவி பரிந்துரைப்பு வெற்றிகரமாக அமையாவிட்டாலும், அடிமைத்தளை விவகாரத்தின் இரண்டு பக்கங்களையும் சமரசம் செய்யும் விதமாக 1856 ஆம் ஆண்டு தேர்தலில் புகேனன் பரிந்துரைக்கப்பட்டார்; அவர் தொழிலில் இருந்து விலகிய நேரத்தில் இது நடந்தது. அவருடைய அடுத்தடுத்த தேர்தல் மேலும் அதிகமாக பிரிவுற்ற எதிர்ப்பு நிலைகளின் காரணமாக ஏற்பட்டதாகவே இருந்தது. ஒரு அதிபராக அவர் யாராலும் சுலபமாக வளைத்துவிடக்கூடியவராக இருந்தார், ஜனநாயகக் கட்சியை கட்டுப்படுத்துவதற்கான போட்டியில் ஸ்டீபன் ஏ. டக்ளஸ் உடன் போட்டியிட்ட தெற்கத்திய அனுதாபம் உள்ள ஒரு வடக்கத்தியவராக இருந்தார். வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையிலான அமைதியைத் தக்கவைப்பதற்கான புகேனனின் முயற்சிகள் இருதரப்பினரையும் பிரித்துவிடக்கூடியதாக இருந்தது, அத்துடன் அமெரிக்க உள்நாட்டுப் போரை முன்னெடுப்பதில் தெற்கத்திய மாகாணங்கள் தங்களுடைய விலகலை அறிவித்தபோது இந்த விலகல் சட்டத்திற்கு புறம்பானது என்பதே புகேனனின் அபிப்பிராயமாக இருந்தது, ஆனால் இதை நிறுத்தப் போர்புரிவதும் சட்டத்திற்குப் புறம்பானதாக இருந்தது; இதனால் அவர் இதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர் அலுவலகத்தை விட்டு விலகிய நேரத்தில் மக்கள் அபிப்பிராயம் அவருக்கு எதிராகத் திரும்பியது, ஜனநாயகக் கட்சி இரண்டாக உடைந்தது. புகேனன் ஒருகாலத்தில் தன்னுடைய அதிபர் பதவி ஜார்ஜ் வாஷிங்டனுடையதைப் போன்று வரலாற்றில் இடம்பெறும் என்று நம்பினார்.[1] இருப்பினும், உள்நாட்டுப் போருக்கு முன்பிருந்த பிரச்சினைகளை அவர் கையாண்ட விதம் அவரை மோசமான அதிபர்களுள் ஒருவராக வரலாற்றாசிரியர்களால் குறிப்பிடப்படுவதற்கு காரணமாக அமைந்தது.
ஆரம்பகால வாழ்க்கை
ஜேம்ஸ் புகேனன் ஜுனியர் ஜேம்ஸ் புகேனன் சீனியர் (1761–1833), மற்றும் எலிசபெத் ஸ்பீர் (1767–1833) ஆகியோருக்கு ஏப்ரல் 23, 1791 இல் பென்சில்வேனியா, ஃபிராங்க்ளின் கவுண்டியில் உள்ள ஹாரிஸ்பர்க்கிற்கு (தற்போது ஜேம்ஸ் புகேனன் பிறப்பிட மாகாணப் பூங்கா எனப்படுவது) அருகாமையில் உள்ள காவ் கேப்பில் உள்ள ஒரு மரக் கொட்டகையில் பிறந்தார். அவருடைய பெற்றோர்கள் இருவரும் ஸ்காட்ச்-ஐரிஷ் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள், அவருடைய 1783 இல் வடக்கு அயர்லாந்திலிருந்து புலம்பெயர்ந்தவர். அவர் பதினோரு குழந்தைகளில் இரண்டாவமவராவர், அவர்களில் மூன்றுபேர் குழந்தைப்பருவத்திலேயே இறந்துவிட்டனர். புகேனனுக்கு ஆறு சகோதரிகளும் நான்கு சகோதரர்களும் இருந்தனர், ஒருவர் மட்டுமே 1840 வரை வாழ்ந்தார்.[2]
அவர் தன்னுடைய குழந்தைப்பருவத்தை ஜேம்ஸ் புகேனன் ஹோட்டலில் கழித்தார்.[3]
புகேனன் கிராமப்புற கல்விச்சாலையிலும் பின்னர் பென்சில்வேனியா கார்லிஸிலில் உள்ள டிக்கின்சன் கல்லூரியிலும் சேர்ந்தார். மோசமான நடத்தை என்பதற்காக வெளியேற்றப்பட்ட அவர் இரண்டாவது முறை வாய்ப்பைப் பெற்று 1809 ஆம் ஆண்டு செப்டம்பர் 19 இல் ஹானர்ஸ் உடன் பட்டம் பெற்றார்.[4] அந்த ஆண்டின் இறுதியிலேயே, அவர் லங்காஸ்டருக்கு இடம்பெயர்ந்தார், அங்கே அவர் சட்டம் பயின்று 1812 ஆம் ஆண்டில் வழக்கறிஞராக சேர்த்துக்கொள்ளப்பட்டார். ஒரு அர்ப்பணிப்புள்ள கூட்டரசுக் கோட்பாட்டாளர் என்பதோடு தேவையில்லாத போர் என்ற காரணத்தின் அடிப்படையில் அவர் 1812 ஆம் ஆண்டு போரை எதிர்த்தார். இருந்தபோதிலும், பிரிட்டிஷார் அருகாமையிலிருந்த மேரிலேண்டில் ஊடுருவியபோது அவர் தன்னார்வ குதிரைப்படைப் பிரிவில் சேர்ந்தார் என்பதோடு பால்டிமோர் பாதுகாப்பு சேவையில் பணிபுரிந்திருக்கிறார்.[5]
ஒரு செயல்படு ஃப்ரீமேஸனாக அவருடைய வாழ்நாளில் பென்சில்வேனியா லங்காஸ்டரில் அவர் மாஸ்டர் ஆஃப் மஸோனிக் லாட்ஜ் #43 இருந்தார் என்பதோடு பென்சில்வேனியா கிராண்ட் லாட்ஜின் மாவட்ட துணை கிராண்ட் மாஸ்டராகவும் இருந்திருக்கிறார்.[6]
அரசியல் வாழ்க்கை
புகேனன் தன்னுடைய அரசியல் வாழ்க்கையை 1814–1816 இல் பென்சில்வேனியா பிரதிநிதிகள் சபையில் தொடங்கினார், ஒரு கூட்டரசு கோட்பாட்டாளராக பணிபுரிந்தார்.[7] அவர் 17 வது அமெரிக்க் காங்கிரஸிற்கும் அடுத்தடுத்து வந்த நான்கு காங்கிரஸிற்கும் தேர்ந்தெடுக்கப்பட்டு (மார்ச் 4, 1821 – மார்ச் 4, 1831) 21 வது அமெரிக்க காங்கிரஸில் நீதிமன்றங்களுக்கான அமெரிக்க மாளிகை ஆணையத்தின் தலைவராக பணியாற்றினார். பின்னாளில் நிரபராதி எனறு விடுவிக்கப்பட்ட மிசோரி மாவட்டத்தின் அமெரிக்க மாவட்ட நீதிமன்ற நீதிபதியான ஜேம்ஸ் ஹெச். பெக் என்பவருக்கு எதிரான தவறான நடத்தை குறித்த நடவடிக்கைகளை கையாளுவதற்காக அமைக்கப்பட்ட உறுப்பினர்களில் அவரும் ஒருவராக இருந்தார்.[8] புகேனன் மறு தேர்தலைக் கோரவில்லை என்பதோடு 1832 முதல் 1834 வரை அவர் ரஷ்யாவிற்கான தூதராக பணியாற்றினார்.
கூட்டரசுக் கட்சி நீண்டகாலம் செயல்படாமல் இருந்ததால் காலியிடத்தை நிரப்பவும் டிசம்பர் 1834 இல் இருந்து செயல்படவும் அவர் ஒரு ஜனநாயகவாதியாக அமெரிக்க நாடாளுமன்ற மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்; அவர் 1837 மற்றும் 1843 இல் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு 1845 இல் பதவியைத் துறந்தார். அவர் வெளிநாட்டு உறவுகளுக்கான ஆணையத்தின் தலைவராக இருந்தார் (24 வது காங்கிரஸிலிருந்து 26 வது காங்கிரஸ் வரை).
1844 இல் உச்சநீதிமன்ற நீதிபதியான ஹென்றி பால்ட்வின் மரணத்திற்குப் பின்னர் அவர் அதிபர் போல்க்கால் உச்சநீதிமன்ற நீதிபதியாக பணிபுரிய நியமிக்கப்பட்டார். அவர் அந்தப் பரிந்துரையை மறுத்தார் என்பதோடு அந்த இடம் ராபர்ட் கூப்பர் கிரைர் என்பவரால் நிரப்பப்பட்டது.
புகேனனின் போட்டியாளரான துணை அதிபர் ஜார்ஜ் டல்லாஸ் ஆட்சேபம் தெரிவித்தபோதிலும் 1845 முதல் 1849 வரை ஜேம்ஸ் கே. போல்க்கின்கீழ் அரசு செயலாளராக பணியாற்றினார்.[9] இந்த செயல்திறனைக் கொண்டு அவர் மேற்கத்திய அமெரிக்காவின் வடக்கு எல்லையாக 49வது இணைகோட்டை நிறுவிக்கொள்ளும் 1846 ஆம் ஆண்டு ஒரேகான் ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைக்கு உதவினார்.[10] ஜேம்ஸ் புகேனனுக்குப் பிறகு எந்த அரசு செயலாளரும் அதிபராகவில்லை, இருப்பினும் 27வது அமெரிக்க அதிபரான வில்லியம் ஹோவார்ட் டாஃப்ட் தியோடர் ரூஸ்வெல்ட் காலத்தில் தொடர்ந்து செயல்படு செயலாளராக இருந்திருக்கிறார்.
1852 இல் புகேனன் அவருடைய சொந்த ஊரான லங்காஸ்டரில் இருக்கும் ஃபிராங்க்ளின் அண்ட் மார்ஷல் கல்லூரியின் அறங்காவலர்கள் சபையின் தலைவராக பரிந்துரைக்கப்பட்டார் என்பதோடு அவர் பதவீநீக்கம் செய்யப்பட்டார் என்ற தவறான தகவல் இருந்தபோதிலும் இந்தப் பதவில் அவர் 1866 ஆம் ஆண்டு வரை[11] நீடித்தார்.[12]
அடிமைத்தளையை நீடிக்கும் விதமாக ஸ்பெயினிடமிருந்து கியூபாவை வாங்குவதற்கு முன்மொழியப்பட்ட ஆஸ்டெண்ட் பிரகடனத்தை வரைவதற்கு அவர் உதவிய காலகட்டத்தில் 1853 இல் இருந்து 1856 ஆம் ஆண்டுவரை செயிண்ட் ஜேம்ஸ் அவையின் அமைச்சராக (பிரிட்டன்) பணியாற்றினார். இந்தப் பிரகடனம் பியர்ஸ் நிர்வாகத்தின் பெரும் தவறாக இருந்தது என்பதுடன் மேனிஃபெஸ்ட் டெஸ்டினிக்கான ஆதரவை பெருமளவிற்கு பலவீனப்படுத்தியது.
1856 ஆம் ஆண்டு தேர்தல்

ஜனநாயகவாதிகள் 1856 இல் புகேனனை பரிந்துரை செய்தனர், இதற்கான பேரளவு காரணம் கன்சாஸ்-நெப்ராஸ்கா விவாதத்தின்போது அவர் இங்கிலாந்தில் இருந்தார் என்பதோடு பிரச்சினையின் இரு தரப்பினராலும் கறைபடுத்தப்படாதவராக இருந்தார். அவர் 17வது வாக்கெடுப்பில் பரிந்துரைக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டார், இருப்பினும் அவர் செயல்பட விரும்பவில்லை.
முன்னாள் அதிபரான மில்லார்ட் ஃபில்மோரின் "நோ-நத்திங்" விண்ணப்பம் 1856 இல் அதிபர் பதவிக்கான முதல் குடியரசுக் கட்சி வேட்பாளரான ஜான் சி. ஃப்ரமண்ட்டை தோற்கடிக்க புக்கேனனுக்கு உதவியது என்பதுடன் அவர் மார்ச் 4, 1857, முதல் மார்ச் 4, 1861 வரை பதவியில் இருந்தார். தன்னுடைய சொந்த உரிமையின்கீழ் சக ஜனநாயகவாதியை அதிபராக்குவதற்கு புகேனன் மிகச் சமீபத்திய இரண்டு ஜனநாயகவாதிகளுள் (மற்றொருவர் மார்டின் வான் புரேன்) ஒருவராக இருந்தார்.
நாட்டில் வளர்ந்துகொண்டிருந்த பிரிவினைவாதத்தால் அதிபராக தேர்வுசெய்யப்பட்ட புகேனன் தன்னுடைய பதவியமர்த்தல்களில் பிரிவுவாத சமநிலையைத் தக்கவைத்துக்கொண்டதன் மூலம் அவர் அதிலிருந்து தள்ளியிருக்கவே விரும்பினார் என்பதோடு உச்சநீதிமன்றம் விளக்கியபடி அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்றுக்கொள்ளும்படியும் மக்களைத் தூண்டினார். இந்தப் பிரதேசங்களில் அடிமைத்தளையை தடுப்பதன் சட்டப்பூர்வ சாத்தியத்தை நீதிமன்றம் பரிசீலித்து வந்தது என்பதுடன் இரண்டு நீதிபதிகள் முடிவு என்னவாக இருக்கும் என்பது குறித்த குறிப்பை புகேனனுக்கு அளித்தனர்.
அதிபர் பதவி 1857-1861

டிரெட் ஸ்காட் வழக்கு
தன்னுடைய தொடக்க உரையில், மீண்டும் செயல்படுத்தப் போவதில்லை என்று உறுதியளித்தபோதிலும் புகேனன் இந்த பிரதேசவாத கேள்வியை, உச்சநீதிமன்றம் "விரைவாகவும் இறுதியாகவும்" தீர்க்கவிருக்கும் நேரத்தில் "மகிழ்ச்சியாக, ஒரு விஷயமாக ஆனால் நடைமுறை முக்கியத்துவம் உள்ளதாக" என்பது குறித்த கேள்வியைக் குறிப்பிட்டார். இரண்டு நாட்களுக்குப் பின்னர், முதன்மை நீதிபதியான ரோஜர் பி. தானே (டிக்கன்ஸ் கல்லூரியில் உடன் பயின்ற சக முன்னாள் மாணவர்) டிரெட் ஸ்காட் தீர்ப்பை வழங்கினார், இது இந்தப் பிரதேசங்களில் அடிமைத்தளையை நீக்குவதற்கான அரசியலமைப்பு அதிகாரம் காங்கிரஸிற்கு இல்லை என்பதை வலியுறுத்தியது. தானேயின் பெரும்பாலான எழுதப்பட்ட தீர்ப்பு பரவலாக போகிறபோக்கில் சொல்லப்பட்டதாகவே விளக்கமளிக்கப்பட்டது - வழக்கிற்கு சம்பந்தமில்லாத விஷயங்களை நீதிபதி கூறுவது, ஆனால் இந்த நிகழ்வில் வடக்கில் பதட்டத்தை உருவாக்கிய அதேசமயத்தில் அவை தெற்கத்தியவர்களை மகிழ்ச்சிப்படுத்துவதாக இருந்தது. இந்தத் தீர்ப்பில் புகேனன் தனிப்பட்ட முறையில் சம்பந்தப்பட்டிருந்ததாகவே கருதப்பட்டது, பல வடக்கத்தியவர்களும் தொடக்கநாளின்போது புகேனனின் காதில் தானே கிசுகிசுத்ததை நினைவுகூர்ந்தனர். புக்கேனன் இந்தப் பிரதேசவாத கேள்வி உச்சநீதிமன்றத்தால் தீர்க்கப்பட வேண்டும் என்று விரும்பினார். மேற்கொண்டு, அடிமைத்தள சொத்துக்களை சொந்தமாகக் கொண்டிருப்பதற்கான உரிமையை ஆதரிப்பதற்கு பெரும்பான்மையினருடன் ஓட்டளிக்கும்படி சக பென்சில்வேனிய நீதிபதி ராபர்ட் கூப்பர் கிரையரை அவர் தூண்டியிருந்தார். ஆப்ரஹாம் லிங்கன் அவரை அடிமை அதிகாரத்தின் கூட்டாளி என்று கண்டித்தார், லிங்கன் இதனை அடிமைத்தள உரிமைதாரர்கள் உள்நாட்டு அரசாங்கத்தின் மீதான கட்டுப்பாட்டை எடுத்துக்கொள்வதாகவும், அடிமைத்தளையை தேசியமயமாக்குவதுமான சதியாக கண்டார்.
இரத்தம் சிந்தும் கன்சாஸ்
இருப்பினும், புகேனன் பிரதேசவாத கேள்வியினால் மேற்கொண்டு பிரச்சினைக்கு ஆளானார். கன்சாஸை அடிமைத்தள மாகாணக்கக்கூடிய லெகாம்ப்டன் அரசியலமைப்பை கன்சாஸில் ஏற்றுக்கொள்ள காங்கிரஸிற்கு பின்னாலிருந்த தன்னுடைய நிர்வாகத்தின் கௌரவத்தை அவர் விட்டெறித்தார், ஆதரவளிப்பவர்களைப் பதவியில் அமர்த்தினார் என்பதோடு வாக்குகளுக்காக அவர் லஞ்சப் பணம்கூட அளித்தார். லெகாம்ப்டன் அரசாங்கம் அடிமைகளை உரிமையாகக் கொள்ளாதவர்களின் உரிமைகளைக் குறைப்பதற்கான சட்டமியற்றும் அடிமைகளை உரிமைதாரர்களாக கொண்டவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்ததால் வடக்கத்தியவர்களிடையே பிரபலமாகவில்லை. கன்சாஸ் ஓட்டுக்கள் லெகாம்ப்டன் அரசியலமைப்பை ஏற்க மறுத்தாலும் புகேனன் இந்த மசோதாவை அவையின் மூலமாக நிறைவேற்றினார், ஆனால் இது ஸ்டீபன் ஏ. டக்ளஸால் வழிநடத்தப்பட்ட வடக்கத்தியவர்களால் மேலவையில் தடுத்து நிறுத்தப்பட்டது. முடிவில், காங்கிரஸ் லெகாம்ப்டன் அரசியலமைப்பின் மீதான புதிய வாக்கெடுப்பிற்கு அழைப்பு விடுக்க காங்கிரஸ் வாக்களித்தது, இது தெற்கத்தியவர்களை கோபம்கொள்ளச் செய்தது. புகேனனும் டக்ளஸூம் 1859–60 இல் கட்சியின் மீதான கட்டுப்பாட்டைப் பெற எல்லாவிதமான போட்டியிலும் இறங்கினர், புகேனன் தனது ஆதரவாளர் அதிகாரத்தைப் பயன்படுத்தினார், டக்ளஸ் சாமானியர்களை ஒன்றுதிரட்டினார். புகேனன் பெருமளவிற்கு பலவீனமடைந்த கட்சியின் மீது தனது கட்டுப்பாட்டை இழந்தார்.
புகேனனின் தனிப்பட்ட கண்ணோட்டங்கள்

புகேனன் தனிப்பட்ட முறையில் அடிமை உரிமைதாரர்களின் உரிமைகளுக்கு ஆதரவானவராக இருந்தார் என்பதோடு கியூபா மீது பேரார்வம் கொண்ட அடிமை-விரிவாக்கவாதிகள் மீது அனுதாபம் கொண்டிருந்தார். புகேனன் அழித்தல்வாதிகள் மற்றும் சுதந்திர-மண் குடியரசுவாதிகள் ஆகிய இருவரையுமே ஒன்றாக வெறுத்தார். அவர் அடிமைத்தளை அதிகாரத்திற்கு எதிரானவர்களோடு போட்டியிட்டார். தன்னுடைய மூன்றாவது வருடாந்திர செய்தியில் "அடிமைகள் பண்போடும் மனிதத் தன்மையோடும் நடத்தப்பட வேண்டும்.... இரக்க மனப்பான்மை மற்றும் எஜமானரின் சுய-விருப்பம் ஆகிய இரண்டுமே இந்த மனிதநேயத்தை ஒன்றிணைத்து உருவாக்க வேண்டும்" என்று கருதினார்.[13]. வரலாற்றாசிரியர் கென்னத் ஸ்டேம்ப் இவ்வாறு எழுதினார்:
Shortly after his election, he assured a southern Senator that the "great object" of his administration would be "to arrest, if possible, the agitation of the Slavery question in the North and to destroy sectional parties. Should a kind Providence enable me to succeed in my efforts to restore harmony to the Union, I shall feel that I have not lived in vain." In short, in the northern anti-slavery idiom of his day Buchanan was the consummate "doughface," a northern man with southern principles.[14]
அவருடைய செயல்பாடாதநிலை மிகவும் பெரியது, அதிக கல்லூரிகளை உருவாக்குவதற்கு காங்கிரஸ் நிறைவேற்றிய மசோதாக்களில்கூட அவர் கையெழுத்திட்டார், "ஏற்கனவே கற்றறிந்த மக்கள் நிறையபேர் இருக்கிறார்கள்" என்பதே அவர் நம்பிக்கை.[15]
1857 ஆம் ஆண்டு பேரச்சம்
1857 ஆம் ஆண்டு பரவிய பேரச்சத்தின் காரணமாக பொருளாதாரப் பிரச்சினைகளும் புகேனனின் நிர்வாகத்தை பெருமளவிற்கு சீர்குலைத்தது. அரசாங்கம் திடீரென்று வருவாய்ப் பற்றாக்குறையை எதிர்கொள்ள வேண்டியிருந்தது, இதன் பகுதியளவு காரணம் வரிவிதிப்பைக் குறைக்கக் கட்டாயப்படுத்தியதில் குடியரசுக் கட்சியினர் பெற்ற வெற்றியாக இருந்தது. கருவூலச் செயலாளர் ஹோவல் கோபின் உத்தரவில் புகேனின் நிர்வாகம் அரசாங்கத்திற்கான பற்றாக்குறை நிதியளிப்பை வெளியிடத் தொடங்கியது, இந்த நடவடிக்கை மேம்படுத்தல் பணக் கொள்கைகளுக்கான ஜனநாயகக் கட்சி ஆதரவினுடைய இருபதாண்டுகளைப் பெற்றுத்தந்தது என்பதுடன் புகேனனின் தவறான நிதி நிர்வாகம் குறித்து குடியரசுக் கட்சியினர் குற்றம்சாட்டுவதற்கும் உதவியது.
யுடா போர்
1857 ஆம் ஆண்டு மார்ச்சில் மார்மன் ஆளுநரான பிரிகாம் யங் யுடா பிரதேசத்தை ஆக்கிரமித்து கிளர்ச்சிக்குத் திட்டமிடுகிறார் என்ற தவறான தகவலை புகேனன் பெற்றார். அந்த ஆண்டு நவம்பரில் அந்தச் செய்திகளை உறுதிப்படுத்தாமலும் யங்கிங்கு அவருடைய மாற்றம் குறித்து தெரிவிக்காமலும் மார்மன் அல்லாத ஆல்ஃபிரட் கம்மிங் என்ற ஆளுநரை யங்கிற்கு பதிலாக நியமிக்க புகேனன் ராணுவத்தை அனுப்பினார். வாஷிங்டனில் பல வருடங்கள் நீடித்த எதிர்-மார்மன் பகட்டு ஆரவாரமானது. பலதார மணம் மார்மன் நடைமுறை மற்றும் கிழக்கத்திய செய்தித்தாள்களில் அதிபர் மற்றும் ராணுவத்தின் நோக்கங்கள் ஆகிய இரண்டையும் குறித்த கண்டனங்களும் பகட்டு விளக்கங்களும் மார்மன்கள் மோசமான ஒன்றை எதிர்நோக்குவதற்கு இட்டுச்சென்றது. யங் இந்தப் பிரதேசத்தை பாதுகாக்க ஆயிரக்கணக்கானோரை உள்ளடக்கிய படையைத் திரட்டினார் என்பதோடு ராணுவம் உள்ளே நுழைவதைத் தாமதப்படுத்தவும் அலைக்கழிக்கவும் ஒரு சிறிய படைப்பிரிவையும் அனுப்பி வைத்தார். நல்ல வேளையாக குளிர்காலம் முன்பே தொடங்கிவிட்டதால் ராணுவத்தை தற்போதைய வியோமிங்கில் முகாமிடும்படிச் செய்தது, இது பிரதேசத்திற்கும் உள்நாட்டு அரசாங்கத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளுக்கு உதவியது. மோசமான திட்டமிடல், ராணுவத்தின் பற்றாக்குறை மற்றும் கலகம் குறித்த செய்திகளைத் தர அதிபர் தவறியது மற்றும் தனது நோக்கங்களால் பிரதேச அராசாங்கத்தை எச்சரித்தது ஆகியவை இந்தப் போர் "புகேனனின் பெருந்தவறு" என்று முத்திரையிட்டது. காங்கிரஸ் மற்றும் பத்திரிக்கையாளர்களிடமிருந்து பரவலான கண்டனங்களைப் பெற்றது. கம்மிங்கை பதிலீடு செய்துகொள்ளவும், ராணுவம் யுடா பிரதேசத்தில் நுழைந்து முகாமிட்டுக்கொள்ளவும் யங் உடன்பட்டபோது புகேனன் தன்னுடைய பெயரை காப்பாற்றிக்கொள்ளும் முயற்சியாக "கலகக்காரர்களை" தனது கருணையால் மன்னிப்பதாக தெரிவிக்கும் பிரகடனத்தை வெளியிட்டார். இது காங்கிரஸிடமும் யுடா குடியேறிகளிடமும் மோசமான விமர்சனங்களைப் பெற்றது. உள்நாட்டுப் போர் வெடித்தால் எந்த நேரத்திலும் படையினர் கிழக்குப்பகுதிக்கு அழைத்துக்கொள்ளப்படுபவர்களாக இருந்தனர்.
பிரிவு
குடியரசுக் கட்சியினர் 1858 இல் மேலவையில் பெரும்பான்மையை வென்றதும் அவர்கள் நிறைவேற்றும் ஒவ்வொரு குறி்ப்பிடத் தகுந்த மசோதாவும் செனட் அல்லது அதிபரின் வீட்டோ அதிகாரத்தில் தெற்கத்திய வாக்குகளுக்கு முன்பாக கடுமையானதாக இருந்தது. அரசாங்கம் முட்டுக்கட்டையான நிலையை எட்டியது. குடியரசுக் கட்சியினருக்கும் தெற்கத்திய ஜனநாயகவாதிகளுக்கும் இடையிலான கசப்பான பகைமை காங்கிரஸ் சபையில் மேலோங்கியது.

விஷயங்களை மோசமாக்கும் விதமாக புகேனன் ஒருபக்கச்சார்பான கோவாட் ஆணையத்தாலும் வீழ்த்தப்பட்டார், இந்த ஆணையம் குறைகாணக்கூடிய குற்றங்களுக்காக நிர்வாகத்தை விசாரித்தது.
ஜனநாயகக் கட்சி பிரிந்த 1860 இல் இதேபோன்ற நிலையில் பிரிவினைவாத போராட்டமும் மூண்டது. தேசிய உடன்படிக்கையின்போது தெற்கு கரோலினா, சார்ல்ஸ்டனில் நடந்த கூட்டத்தில் புகேனன் ஒரு சிறிதளவு மட்டுமே பங்காற்றினார். தெற்கத்திய கிளை உடன்படிக்கையிலிருந்து வெளியேறியது என்பதுடன் அதிபர் பதவிக்கு தங்களைச் சேர்ந்த ஒருவரும், புகேனன் ஆதரிக்க மறுத்தவருமான ஜான் சி. பிரெக்கின்ரிட்ஜை வேட்பாளராக நிறுத்தினர். கட்சியின் மீதமிருந்தவர்கள் இறுதியில் புகேனனின் பிரதான எதிரியான டக்ளஸை பரிந்துரைத்துனர். இதன் விளைவாக, குடியரசுக் கட்சியினர் ஆப்ரஹாம் லிங்கனை பரிந்துரைத்தபோது அவருடைய பெயர் சுதந்திர மாகாணங்கள், மற்றும் டெலாவேரிலும் மட்டுமே பரவியிருந்தாலும், பிற எல்லைப்புற மாகாணங்களில் நிறைய ஓட்டுக்களைப் பெற்றிருந்தார். எனவே அவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்பது 1860 நவம்பர் 6 இல் முன்பே தீர்மானிக்கப்பட்டுவிட்ட ஒன்றாக இருந்தது.
காங்கிரஸிற்கான புகேனனின் செய்தியில் (டிசம்பர் 3, 1860) கூட்டரசிலிருந்து மாகாணங்கள் பிரிவதற்குள்ள சட்டப்பூர்வ உரிமையை மறுத்தார், ஆனால் உள்நாட்டு அரசாங்கள் அவற்றைத் தடுக்கவும் முடியாது என்றும் குறிப்பிட்டிருந்தார். அவர் சமரத்திற்கு நம்பிக்கையுடனிருந்தார், ஆனால் பிரிவினைவாதத் தலைவர்கள் அதை விரும்பவில்லை. அவர் தெற்கு கரோலினா டிசம்பர் 20 இல் பிரிந்ததை அமைதியாகப் பார்த்துக்கொண்டிருந்தார், இதைத் தொடர்ந்து பிற ஆறு பருத்தி மாகாணங்கள் பிரிந்தன என்பதோடு பிப்ரவரியில் அவர்கள் அமெரிக்க மாகாணங்கள் கூட்டமைப்பாக உருவாக்கினர். எட்டு அடிமைத்தளை மாகாணங்கள் இணைவதற்கு மறுத்தன.
டிசம்பர் பிற்பகுதியில் தொடங்கி புகேனன் தன்னுடைய அமைச்சரவையை மறு ஒழுங்கமைப்பு செய்தார், அனுதாபிகளை வெளியேற்றி கடுமையான தேசியவாதிகளான ஜெர்மயா எஸ். பிளாக், எட்வின் எம். ஸ்டாண்டன், ஜோசப் ஹோல்ட் மற்றும் ஜான் ஏ. டிக்ஸ் போன்றவர்களை நியமித்தார். இந்தப் பழமைவாத ஜனநாயகவாதிகள் அமெரிக்க தேசியவாதத்தில் தீவிர நம்பிக்கை வைத்திருந்தனர் என்பதோடு பிரிவினைவாதத்தை மறுத்தனர். ஒருகட்டத்தில், கருவூலச் செயலாளரான டிக்ஸ் நியூ ஆர்லியன்ஸில் உள்ள கருவூல முகவர்களிடம் "யாரேனும் அமெரிக்கக் கொடியை கீழே இறக்கினால் அவர்களை பார்த்த இடத்திலேயே சுடவும்" என்று உத்தரவு பிறப்பித்தார்.
புகேனன் அலுவலகத்தை விட்டு வெளியேறும் முன்னர் பிரிவினைவாத மாகாணங்களின் படைக்கலங்கள் மற்றும் துறைமுகங்களை இழக்க நேரிட்டது (சம்டர் துறைமுகம் மற்றும் மூன்று புளோரிடா தீவு புறக்காவல் நிலையங்கள் தவிர்த்து), அத்துடன் நான்காவது உள்நாட்டு வீரர்கள் டெக்ஸாஸ் படையினரிடம் சரணடைந்தனர். அரசாங்கள் சம்டர் துறைமுகத்தின் மீதான கட்டுப்பாட்டைத் தக்கவைத்துக்கொண்டது, இது கூட்டமைப்பில் உள்ள தெளிவாகப் பார்க்கப்படக்கூடிய சார்ல்ஸ்டனில் உள்ள இடமாகும். ஜனவரி 5 இல், புகேனன் ஸ்டார் ஆஃப் தி வெஸ்ட் என்ற பொது நீராவிக் கப்பலை சம்டர் துறைமுகத்தை படையினரையும் உணவுப்பொருள்களையும் ஏற்றிவர அனுப்பினார். 1861 ஜனவரி 9 இல், தெற்கு கரோலினா மாகாண மாற்றுப் படையினர் ஸ்டார் ஆஃப் த வெஸ்ட் டின் மீது தாக்குதல் நடத்தினர், அது நியூயார்க்கிற்குத் திரும்பியது. உறைந்துபோன புகேனன் போருக்கு மேற்கொண்டு எந்த ஆயத்தமும் செய்யவில்லை.
அதிபராக புகேனனின் கடைசி நாளான மார்ச் 4, 1861 இல் அவர் அதிபராக பதவியேற்கும் லிங்கனைக் குறிப்பிட்டு "நான் வீட்லேண்டிற்கு திரும்புகையில் நீங்கள் ஒயிட் ஹவுஸில் நுழைவதற்காக மகிழ்ச்சியடைகிறீர்கள் என்றால் நீங்கள் மகிழ்ச்சியானவரே" என்றார்.[16]
அதிபர் புகேனனின் அமைச்சரவை
The Buchanan Cabinet | ||
---|---|---|
Office | Name | Term |
President | James Buchanan | 1857–1861 |
Vice President | John C. Breckinridge | 1857–1861 |
Secretary of State | Lewis Cass | 1857–1860 |
Jeremiah S. Black | 1860–1861 | |
Secretary of Treasury | Howell Cobb | 1857–1860 |
Philip Francis Thomas | 1860–1861 | |
John Adams Dix | 1861 | |
Secretary of War | John B. Floyd | 1857–1860 |
Joseph Holt | 1860–1861 | |
Attorney General | Jeremiah S. Black | 1857–1860 |
Edwin M. Stanton | 1860–1861 | |
Postmaster General | Aaron V. Brown | 1857–1859 |
Joseph Holt | 1859–1860 | |
Horatio King | 1861 | |
Secretary of the Navy | Isaac Toucey | 1857–1861 |
Secretary of the Interior | Jacob Thompson | 1857–1861 |
நீதித்துறை பதவிகள்

உச்சநீதிமன்றம்
புகேனன் பின்வரும் நீதிபதிகளை அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமித்திருந்தார்:
நீதிபதி | இடம் | மாகாணம் | சேவையாற்றத் தொடங்கியது |
சேவை முடிவுற்றது |
நாதன் கிளிஃபோர்ட் | இடம் 2 | மேய்ன் | 18580112 ஜனவரி 12, 1858 | 18810725 ஜுலை 25, 1881 |
பிற நீதிமன்றங்கள்
புகேனன் ஏழு பிற உள்நாட்டு நீதிபதிகளை மட்டுமே நியமித்தார், அனைத்தும் அமெரிக்க மாவட்ட நீதிமன்றங்களுக்கானவை:
நீதிபதி | நீதிமன்றம் | சேவையாற்றத் தொடங்கியது |
சேவை முடிவுற்றது |
அஸா பிக்ஸ் | டி.என்.சி. | மே 13, 1858 | ஏப்ரல் 3, 1861 |
ஜான் கட்வலாடர் | இ.டி.பிஏ. | ஏப்ரல் 24, 1858 | சனவரி 26, 1879 |
மாத்யூ டெடி | டி. ஓஆர். | மார்ச்சு 9, 1859 | மார்ச்சு 24, 1893 |
வில்லியம் கில்ஸ் ஜோன்ஸ் | என்.டி. ஏஎல்ஏ. எஸ்.டி. ஏஎல்ஏ. |
செப்டம்பர் 29, 1859[17] | சனவரி 12, 1861 |
வில்சன் மெக்காண்டல்ஸ் | டபிள்யு.டி. பிஏ. | பெப்ரவரி 8, 1859 | சூலை 24, 1876 |
ரென்செலேர் ரஸல் நெல்சன் | டி. மின். | மே 20, 1858 | மே 16, 1896 |
வில்லியம் டேவிஸ் ஷிப்மன் | டி. கான். | மார்ச்சு 12, 1860 | ஏப்ரல் 16, 1873 |
அமெரிக்க இழப்பீடுகள் நீதிமன்றம்
நீதிபதி | சேவையாற்றத் தொடங்கியது |
சேவை முடிவுற்றது |
---|---|---|
John James Gilchrist | 1855 | 1858 |
George Parker Scarburgh | 1855 | 1861 |
யூனியனோடு சேர்த்துக்கொள்ளப்பட்ட மாகாணங்கள்
- மினோசட்டா &nbsபக்.– மே 11, 1858
- ஒரேகான் &nbsபக்.– பிப்ரவரி 14, 1859
- கன்சாஸ் &nbsபக்.– ஜனவரி 29, 1861
சொந்த உறவுகள்

1819 இல், பணக்கார இரும்பு உற்பத்தி தொழிலதிபரின் மகளும், பிரதிநிதிகள் சபையில் இருந்து தன்னுடன் சக தோழராக இருக்கும் பிலடெல்பியா நீதிபதி ஜோசப் ஹெம்பில்லின் ஒன்றுவிட்ட சகோதரியும் ஆன ஆன் கரோலின் கோல்மன் உடன் புகேனனுக்கு முதலில் திருமண நிச்சயம் ஆனது. இருப்பினும், புகேனன் அவருடன் தன்னுடைய காதல் காலத்தில் சிறிது காலம் மட்டுமே செலவிட்டார். அவர் தன்னுடைய சட்ட நிறுவனம் மற்றும் அரசியல் திட்டங்களில் 1819 ஆம் ஆண்டு திகில் காலத்தின்போது பரபரப்பாக இருந்தார், கோல்மனுடன் அந்த நேரத்தில் பல வாரங்களுக்கு பேச இயலவில்லை. அவருடைய குடும்பம் குறைவான அளவிற்கே செல்வம் படைத்தவர்களாக இருப்பதால் பணத்திற்காகவே அவரைத் திருமணம் செய்துகொள்கிறார் என்றோ, அல்லது அவர் வேறு பெண்ணுடன் தொடர்புகொண்டிருக்கிறார் என்பதையோ முரண்பாடான வதந்திகள் தெரிவித்தன. புகேனன் தன்னுடைய பக்கத்தில் தன்னுடைய நோக்கங்கள் அல்லது உணர்வுகள் குறித்து பொதுவிடத்தில் பேசியதில்லை, ஆனால் ஆன்னிடமிருந்து வந்த கடிதங்கள் இந்த வதந்திகளை அதிகப்படுத்துபவையாக இருந்தன. புகேனன் தன்னுடைய மனைவியின் நண்பரை சென்று பார்த்துவந்த பின்னர் ஆன் அந்த திருமண நிச்சயத்தை முறித்துக்கொண்டார்; அதன்பிறகு விரைவிலேயே ஆன் டிசம்பர் 9, 1819 இல் மரணமடைந்தார். ஆனை அவருடைய கடைசி நேரங்களில் கவனித்துக்கொண்டவரும், அவர் மரணமைடந்த சற்று நேரத்தில் "நான் பார்த்ததிலேயே ஹிஸ்டிரீயா மரணத்தை ஏற்படுத்தியது இது ஒன்றுதான்" என்று கூறியவருமான டாக்டர்.சாப்மனின் பதிவுகள், அவர் அந்தப் பெண்ணின் மரணத்தை லாடனம் என்ற ஓபியத்தின் செறிவூட்டப்பட்ட கரைசலின் அதிகப்படியான மருந்தளவினால் ஏற்பட்டது என்று கருதியதாக தெரிவிக்கின்றன.[18] தன்னுடைய மணமகளின் மரணம் புகேனனை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியது. திறக்கப்படாமலேயே திரும்பி வந்த தன்னுடைய தந்தைக்கு – எழுதிய கடிதத்தில் புகேனன் "இது குறி்த்து விளக்கமளிக்கும் நேரமல்ல இது, ஆனால் அவளும், நானும் ரொம்பவே தூற்றப்பட்டிருக்கிறோம் என்பது தெரிகின்ற காலம் வரும். இதற்கு காரணமானவர்களை கடவுள் மன்னிப்பாராக.... நான் அவளுடைய மரணத்தால் ஏற்பட்ட அதிர்ச்சியிலிருந்து மீண்டுவிடலாம், ஆனால் என்னுடைய மகிழ்ச்சி என்றென்றைக்குமாக என்னிடமிருந்து போய்விட்டதை நான் உணர்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.[18] கோலமன் குடும்பத்தினர் புகேனன் மீது கசப்பு கொண்டதோடு ஆன்னின் இறுதி ஊர்வலத்தில் அவர் கலந்துகொள்ள மறுத்துவிட்டனர்.[19] அவர் தொடர்ந்து உணர்ச்சிபூர்வமாக தூண்டப்பட்டார் என்றாலும் புகேனன் தான் மீண்டும் திருமணம் செய்துகொள்வதில்லை என்று உறுதிகொண்டார், சிலர் அவரை திருமணம் செய்துகொள்ளும்படி கட்டாயப்படுத்தினர். அதற்கு பதிலளித்து அவர் கூறுகையில், "அவனால் திருமணம் செய்துகொள்ள முடியாது, அவனுடைய அன்பு கல்லறையில் புதைக்கப்பட்டுவிட்டது." அவர் ஆன் கோல்மனின் கடிதங்களை பாதுகாத்து வைத்திருந்தார், தன்னுடைய வாழ்நாள் முழுவதும் அவர் தன்னுடன் வைத்திருந்தார் என்பதோடு அவருடைய வேண்டுகோளுக்கேற்ப அவை அவருடனே புதைக்கப்பட்டன.[18]
அதிபர் பதவிக்கு முன்பு வாஷிங்டன் டி.சி. இல் 15 வருடங்கள் வாழ்ந்த புகேனன் தன்னுடைய நெருங்கிய நண்பரும் அலபாமா செனட்டருமான வில்லியம் பஃபுஸ் கிங் என்பவருடனே வசித்தார்.[20][21] ஃபிராங்க்ளின் பியர்ஸின் கீழ் கிங் துணை அதிபராக இருந்தார். அவர் உடல்நலக்குறைவோடு இருந்தார் என்பதோடு பியர்ஸ் பதவியேற்றதற்கும் கொஞ்ச நாளிலேயே, புகேனன் அதிபராவதற்கு நான்கே வருடங்களுக்கும் முன்பு மரணமடைந்தார். புகேனன் மற்றும் கிங்ஸின் நெருங்கிய உறவு, ஆரன் வி. பிரௌன் இவர்கள் இருவரையும் பற்றிப் பேசும்போது "புகேனனும் அவருடைய மனைவியும்" என்று குறிப்பிட்டதை அடுத்து ஆண்ட்ரு ஜாக்சன் கிங்கை "மிஸ் நான்சி" மற்றும் "ஆண்ட் ஃபேண்ஸி" என்று குறிப்பிட்டார்.[22] மேலும், சில தற்கால பத்திரிக்கைகள் புகேனன் மற்றும் கிங்ஸின் உறவு குறித்து யூகங்களை வெளியிட்டன. புகேனன் மற்றும் கிங்ஸின் உடன்பிறந்தாரின் பிறப்புக்கள் தங்களுடைய அங்கிளுடனான உறவை முறித்துக்கொண்டதோடு, இவர்கள் இருவருக்குமிடையிலான உறவு எப்படிப்பட்டது என்ற கேள்வியையும் விட்டுச்சென்றனர், ஆனால் இப்போது இருந்துவரும் கடிதங்களின் நீளம் மற்றும் நெருக்கம் "பிரத்யேக நட்பின் பாசம்"[22] என்று குறிப்பிடுவதோடு புகேனன் தன்னுடைய உடன் வசிப்பவருடன் இணைந்து தன்னுடைய "கூட்டாண்மை" குறித்து எழுதினார்.[23] இருப்பினும் இதுபோன்ற வெளிப்பாடு அந்த நேரத்தில் ஆண்களிடையே அவசியம் வழக்கத்திற்கு மாறான ஒன்றாக இருக்கவில்லை. புகேனன் மற்றும் கிங்ஸின் உணர்ச்சிப்பெருக்கான உறவைச் சுற்றியுள்ள சூழ்நிலைகள் புகேனன் ஒரு ஓரினப்புணர்ச்சியாளர் என்ற யூகத்திற்கு இட்டுச்சென்றது.[22] லைஸ் அக்ராஸ் அமெரிக்கா என்ற தன்னுடைய புத்தகத்தில் ஜேம்ஸ் டபிள்யு. லோவின் 1844 மேயில் கிங்ஸ் பிரான்சிற்கான அமைச்சராக நியமிக்கப்பட்டதன் காரணமாக புகேனன் மற்றும் கிங்ஸின் உறவில் எழுந்த குறுக்கீட்டின்போது புகேனன் திருமதி. ரூஸ்வெல்டிற்கு தன்னுடைய சமூக வாழ்க்கை குறித்து எழுதுகையில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தாக சுட்டிக்காட்டுகிறார், " நான் இப்போது 'தனித்தும் தனிமையிலும்' இருக்கிறேன், இந்த வீட்டின் என்னுடன் வசிப்பவர் யாருமில்லை. நான் சில கோமான்களுடன் காதல் உறவுகொள்ள முயற்சித்தேன், ஆனால் அவர்கள் யாருடனும் இது வெற்றிபெறவில்லை. ஒரு ஆண் தனித்திருப்பது நல்லதல்ல என்று நான் நினைக்கிறேன், அத்துடன் [நான்] எனக்கு உடல்நிலை சரியில்லாதபோது என்னைப் பராமரித்துக்கொண்ட, எனக்கு உடல்நிலை சரியானதும் நல்ல இரவு உணவுகளை எனக்கு வழங்கிய பணியாளருடன் என்னைத் திருமணமானவனாக காண்பதும், மிகவும் ஆர்வமிக்க அல்லது காதல் பாசத்தை என்னிடமிருந்து எதிர்பார்க்காததும் ஆச்சரியப்படும்படி இல்லை."[24][25][26] திருமணமே செய்துகொள்ளாத ஒரே அதிபரான புகேனன், ஆதரவற்றவரானவரை முன்பு அவர் தத்தெடுத்துக்கொண்ட ஹாரியட் லேனை தன்னுடைய முதல் பெண்மணியாக நடந்துகொள்ளச் செய்தார்.
பாரம்பரியம்

1866 இல் மிஸ்டர் புகேனனன்ஸ் அட்மின்ஸ்ட்ரேஷன் ஆன் தி ஈவ் ஆஃப் தி ரெபெல்லியன் என்ற முதல் அதிபர் நினைவுத்தொகுப்பாக பதிப்பிக்கப்பட்ட புகேனனின் புத்தகத்தில் அவர் தன்னுடைய நடவடிக்கைகளை தற்காத்துக்கொள்கிறார்; தன்னுடைய இறப்பிற்கு முதல் நாள் "வரலாறு தன்னுடைய நினைவை நியாயப்படுத்தும்" என்று முன்னூகித்திருந்தார்.[27] புகேனன் 1868 ஜுன் 1 இல் தனது 77 வயதில் தன்னுடைய வீட்லேண்ட் வீட்டில் மரணமடைந்தார், அவர் லங்காஸ்டரில் உள்ள வுட்வார்ட் ஹில் கல்லறையில் புதைக்கப்பட்டார்.

இருந்தபோதிலும் வரலாற்றிசிரியர்கள் பிரிவினை வாதத்திற்கு முன்னால் செயல்படுவதற்கு அவருக்கு இருந்த விருப்பமின்மை அல்லது திறனின்மையை தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். 2006 மற்றும் 2009ஐச் சேர்ந்த வரலாற்றாசிரியர்கள் பிரிவினையோடு அவர் சரியான முறையில் நடந்துகொள்ளத் தவறியது ஒரு அதிபர் செய்த மிக மோசமான தவறாகிவிட்டது என்பதற்கே வாக்களித்திருந்தனர்.[28] அதிபரின் சாதனைகள், தலைமைத்துவ பண்புகள், தோல்விகள் மற்றும் தவறுகளை கவனத்தில் கொள்ளும் ஆய்வாளர்களால் செய்யப்பட்ட அமெரிக்க அதிபர்களின் வரலாற்றுத் தரவரிசைகளில் புகேனனை மோசமான அதிபர்களுள் ஒருவராகவே குறிப்பிடுகின்றனர், இல்லையென்றால் அமெரிக்க வரலாற்றில் மிகவும் மோசமான அதிபர் என்று குறிப்பிடுகின்றனர்.[29][30]
வாஷிங்டன் டி.சி.யின் மெரிடின் ஹில் பார்க்கினுடைய தென்கிழக்கு மூலைக்கு அருகாமையில் அமைந்திருக்கும் வெண்கல மற்றும் கிரானைட் நினைவகம் கட்டிடக்கலை நிபுணர் வில்லியம் கார்டன்-பீச்சரால் வடிவமைக்கப்பட்டது. சிற்பமானது ஹன்ஸ் ஷுலர் என்ற மேரிலேண்ட் கலைஞரால் செதுக்கப்பட்டது. 1916 இல் அங்கீகரிக்கப்பட்டு, 1918 வரை அமெரிக்க காங்கிரஸால் ஏற்கப்படாத மற்றும் ஜுன் 26, 1930 வரை முடிக்கப்பட்டு திறக்கப்படாத இந்த நினைவகம் சட்டம் மற்றும் ராஜதந்திரத்தைக் குறிக்கும் ஆண் மற்றும் பெண் உருவங்களால் புகேனனின் சிலை தாங்கிக்கொள்ளப்பட்டிருப்பதுபோல் அமைக்கப்பட்டிருக்கிறது, அதில் பொறிக்கப்பட்டுள்ள பின்வரும் வாசகம் புகேனனின் கேபினட் உறுப்பினரான ஜெர்மையா எஸ். பிளாக்கின் மேற்கோளாகும்: "குற்றம்சாட்ட முடியாத அரசியல்வாதியின் சட்டத்தின் மலைத்தொடர்கள் மீதான நடை". தேசத்தின் தலைநகரத்தில் உள்ள நினைவகம் முந்தையகால நினைவகமாக கட்டி முடிக்க்பட்டது, 1907–08 இல் கட்டப்பட்டு 1911 இல் அளிக்கப்பட்டதாகும், இது புகேனனின் பிறப்பிடமான பென்சில்வேனியா, ஸ்டோனி பாட்டரை நோக்கி அமைந்திருக்கிறது. 18.5-ஏக்கர் (75,000 m2) நினைவகத் தளத்தின் ஒரு பகுதியாக உள்ள முந்தைய நினைவகம் சொந்த ஊரின் கற்கூளம் மற்றும் கூழின் அசல் மேல்தளத்தைக் காட்டும்விதமாக 250-டன் பிரமிட் கட்டமைப்பைக் கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
மூன்று மாகாண சபைகளுக்கு (கவுண்டி) மரியாதை நிமித்தமாக அவர் பெயர் இடப்பட்டிருக்கின்றன: அவை லோவா, மிஸோரி, மற்றும் வர்ஜினியாவில் உள்ள புகேனன் கவுண்டி. டெக்ஸாலில் உள்ள மற்றொரு கவுண்டிக்கு 1858 இல் அவர் பெயரிடபப்ட்டது, ஆனால் 1861 இல் அமெரிக்க கூட்டமைப்பு மாகாணங்களின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட துணை அதிபர் அலெக்ஸாண்டர் ஸ்டீபன்ஸின் நினைவாக அதற்கு ஸ்டீபன்ஸ் கவுண்டி என்று மறுபெயரிடப்பட்டது.[31]
ஆதார நூற்பட்டியல்
- Baker, Jean H. (2004). James Buchanan. New York: Times Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0805069461.
- புகேனன், ஜேம்ஸ். மிஸ்டர் புகேனன்ஸ் அட்மினிஸ்ட்ரேஷன் ஆன் தி ஈவ் ஆஃப் தி ரிபெல்லியன் (1866)
- Curtis, George Ticknor (1883). Life of James Buchanan. Harper & Brothers. http://books.google.com/books?id=32wFAAAAQAAJ. பார்த்த நாள்: 2009-04-15.
- John Seigenthaler, Sr. (2004). James K. Polk. New York: Times Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0805069429.
- Klein, Philip S. (1962). President James Buchanan: A Biography (1995 ). Newtown, CT: American Political Biography Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0945707118.
- ஸ்டேம்ப், கென்னத் எம். அமெரிக்கா இன் 1857: எ நேஷன் ஆன் தி பிரின்க் (1990). ISBN 0-19-503902-5 ஆன்லைன் பதிப்பு
குறிப்புதவிகள்
- கிளைன் (1962), பக். xviii.
- 6.5
- கிளைன் (1962), பக். 9-12.
- பேக்கர் (2004), பக். 18.
- கிளைன் (1962), பக். 27.
- கர்டிஸ் (1883), பக். 22.
- கர்டிஸ் (1883), பக்.. 107-109.
- சைகன்டேலர் (2004), பக்.. 107-108.
- கிளைன்(1962), பக்.. 181-183.
- கிளைன்(1962), பக். 210.
- கிளைன்(1962), பக். 415.
- http.//millercenter.org/scripps/archive/speeches/detail/3734
- Stampp (1990) p. 48
- ஹகிம், ஜோய். தி நியூ நேஷன்: 1789-1850 எ ஹிஸ்டரி ஆஃப் யுஎஸ் புக் 4
- பேக்கர் (2004), பக். 140.
- ஒதுக்கீட்டு பதவியமர்த்தல்; முன்னதாக ஜனவரி 23, 1860, இல் அமர்த்தப்பட்டு அமெரிக்க செனட்டால் ஜனவரி 30, 1860, இல் உறுதிப்படுத்தப்பட்டது, 30, 1860 இல் அங்கீகரிக்கப்பட்டது.
- Klein, Philip Shriver (December 1955). "The Lost Love of a Bachelor President". American Heritage Magazine 7 (1). http://www.americanheritage.com/articles/magazine/ah/1955/1/1955_1_20.shtml. பார்த்த நாள்: 2007-06-18.
- வர்ஜினியா பல்கலைக்கழகம்: பொது விவகாரங்களுக்கான மில்லர் மையம்: ஜேம்ஸ் புகேனன்: அதிபர் பதவிக்கு முந்தைய வாழ்க்கை.
- கிளைன்(1962), பக். 111.
- Katz, Jonathan (1976). Gay American History: Lesbians and Gay Men in the U.S.A. : A Documentary. Crowell. பக். 647. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780690011654. http://books.google.com/books?id=ixJoAAAAIAAJ.
- பேக்கர் (2004), பக். 75.
- ஸ்டீவ் டேலி தன்னுடைய பிளாண்ட் ஆம்பிஷன்: ஃப்ரம் ஆடம்ஸ் டு குவாயேல்--தி கிரான்க்ஸ், கிரிமினல்ஸ், டேக்ஸ் சீட்ஸ், அண்ட் கால்ஃபர்ஸ் ஹு மேட் இட் டு வைஸ் பிரசிடண்ட்ஸ் என்ற புத்தகத்தில் கிங் மற்றும் புக்கேனன் உறவை மிகவும் விரிவாக விவரிக்கிறார்.
- ஜேம்ஸ் டபிள்யு. லாவின். லைஸ் அக்ராஸ் அமெரிக்கா . பக்கம் 196. தி நியூ பிரஸ். 1999
- கிளைன்(1962), பக். 156.
- கர்டிஸ் (1883), பக்.. 188, 519.
- "Buchanan's Birthplace State Park". Pennsylvania State Parks. Pennsylvania Department of Conservation and Natural Resources. பார்த்த நாள் 2009-03-28.
- "U.S. historians pick top 10 presidential errors". Associated Press (CTV). 2006-02-18. http://www.ctv.ca/servlet/ArticleNews/story/CTVNews/20060218/presidential_errors_060218/20060218?hub=World.
- Tolson, Jay (2007-02-16). "The 10 Worst Presidents". U.S. News & World Report. பார்த்த நாள் 2009-03-26.
- Hines, Nico (2008-10-28). "The 10 worst presidents to have held office". London: The Times. பார்த்த நாள் 2009-03-26.
- Beatty, Michael A. (2001). County Name Origins of the United States. Jefferson, N.C.: McFarland. பக். 310. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0786410256.
மேலும் படிக்க
- பைண்டர், ஃபிரடெரிக் மூர். "ஜேம்ஸ் புகேனன்: ஜாக்ஸோனியன் எக்ஸ்பான்ஷனிஸ்ட்" ஹிஸ்டோரியன் 1992 55(1): 69–84. Issn: 0018-2370 முழு உரை: எப்ஸ்கோவில்
- பைண்டர், ஃபிரடெரிக் மூர். ஜேம்ஸ் புகேனன் அண்ட் தி அமெரிக்கன் எம்பயர். சுஸ்குவென்ச்சா யு. பிரஸ், 1994. 318 பக்.
- பிர்க்னர், மைக்கேல் ஜே., பதிப்பு. ஜேம்ஸ் புக்கேனன் அண்ட் தி பொலிட்டிகல் கிரிஸிஸ் ஆஃப் தி 1850ஸ். சுஸ்குவென்ச்சா யு. பிரஸ், 1996. 215 பக்.
- மீர்ஸ், டேவிட். "புகேனன், தி பேட்ரனேஜ், அண்ட் தி லிகாம்ப்டன் கான்ஸ்ட்டியூஷன்: எ கேஸ் ஸ்டடி" சிவில் வார் ஹிஸ்டரி 1995 41(4): 291–312. Issn: 0009-8078
- நெவின்ஸ், ஆலன். தி எமர்ஜன்ஸ் ஆஃப் லிங்கன் 2 தொகுப்புகள். (1960) அவருடைய அதிபர் பதவி பற்றிய விவரமான விளக்கம்
- நிக்கோலஸ், ராய் ஃபிராங்க்ளின்; தி டெமாக்ரடிக் மெஷின், 1850–1854 (1923), விவரமான சித்தரிப்பு; ஆன்லைன்
- பாட்டர், டேவிட் மாரிஸ். தி இம்பெண்டிங் கிரிஸிஸ், 1848–1861 (1976). ISBN 0-06-013403-8 புலிட்சர் பிரைஸ்.
- ரோட்ஸ், ஜேம்ஸ் ஃபோர்ட் ஹிஸ்டரி ஆஃப் தி யுனைட்டட் ஸ்டேட்ஸ் ஃப்ரம் தி காம்ப்ரமைஸ் ஆஃப் 1850 டு தி மெக்கின்லே-பைரன் காம்பைன் ஆஃப் 1896 தொகுப்பு 2. (1892)
- ஸ்மித், எல்பர்ட் பி. தி பிரஸிடென்ஸி ஆஃப் ஜேம்ஸ் புகேனன் (1975). ISBN 0-7006-0132-5, அவருடைய நிர்வாகத்தைப் பற்றிய விவரம்
- அப்டைக், ஜான் புகேனன் டையிங் (1974). ISBN 0-201-72634-3
புற இணைப்புகள்
![]() |
விக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: ஜேம்ஸ் புகேனன் |
- ஜேம்ஸ் புகேனன் at the Biographical Directory of the United States Congress
- ஜேம்ஸ் புகேனன்: காங்கிரஸ் நூலகத்தைச் சேர்ந்த ஆதார வழிகாட்டி
- ஜேம்ஸ் புகேனன் வாழ்க்கை வரலாறு (அதிகாரப்பூர்வ வெள்ளை மாளிகை வலைத்தளம்)
- வர்ஜினியா பல்கலைக்கழக கட்டுரை: புகேனன் வாழ்க்கை வரலாறு
- பிற புகேனன் முரண்பாடுகள்
- வியட்லேண்ட்
- துலேன் பல்கலைக்கழகத்தில் ஜேம்ஸ் புகேனன்
- மில்லர் சென்டர் ஃபார் பப்ளிக் அஃபேர்ஐச் சேர்ந்த ஜேம்ஸ் புகேனன் குறித்த கட்டுரை மற்றும் அவருடைய கேபினட் உறுப்பினர்கள் மற்றும் முதல் பெண்மனி குறித்த சுருக்கக் கட்டுரைகள்
முதன்மை மூலாதாரங்கள்
- குட்டன்பேர்க் திட்டத்தில் James Buchanan இன் படைப்புகள்
- மிஸ்டர். புகேனன் அட்மின்ஸ்ட்ரேஷன் ஆன் தி ஈவ் ஆஃப் தி ரிபெல்லியன் . அதிபர் புகேனனின் நினைவுகள்.
- தொடக்கநாள் செய்தி
அரசியல் பதவிகள் | ||
---|---|---|
முன்னர் Franklin Pierce |
President of the United States March 4, 1857 – March 4, 1861 |
பின்னர் Abraham Lincoln |
ஐக்கிய அமெரிக்காவின் மேலவை | ||
முன்னர் William Wilkins |
United States Senator (Class 3) from Pennsylvania 1834 – 1845 Served alongside: Samuel McKean, Daniel Sturgeon |
பின்னர் Simon Cameron |
ஐக்கிய அமெரிக்காவின் கீழவை
வார்ப்புரு:USRSB வார்ப்புரு:USRSB | ||
முன்னர் Philip P. Barbour |
Chairman of the House Judiciary Committee 1829 – 1831 |
பின்னர் Warren R. Davis |
Party political offices | ||
முன்னர் Franklin Pierce |
Democratic Party presidential candidate 1856 |
பின்னர் Stephen A. Douglas John C. Breckinridge¹ |
தூதரகப்பதவிகள் | ||
முன்னர் Joseph R. Ingersoll |
United States Minister to Great Britain 1853 – 1856 |
பின்னர் George M. Dallas |
முன்னர் John Randolph |
United States Minister to Russia 1832 – 1833 |
பின்னர் Mahlon Dickerson |
கௌரவப் பட்டங்கள் | ||
முன்னர் Martin Van Buren |
Oldest U.S. President still living July 24, 1862 – June 1, 1868 |
பின்னர் Millard Fillmore |
குறிப்புகளும் மேற்கோள்களும் | ||
1. The Democratic party split in 1860, producing two presidential candidates. Douglas was nominated by Northern Democrats; Breckinridge was nominated by Southern Democrats. |