சேம்சு கார்ஃபீல்டு

சேம்சு ஏபிராம் கார்ஃபீல்டு (James Abram Garfield, ஜேம்ஸ் கார்ஃபீல்ட்; நவம்பர் 19, 1831செப்டம்பர் 19, 1881) ஐக்கிய அமெரிக்காவின் 20வது குடியரசுத் தலைவர் ஆவார். இவர் படுகொலை செய்யப்பட்டதால் 6 மாதங்கள் வரையிலேயே அரசுத்தலைவர் பதவியில் இருந்தார்.

சேம்சு ஏபிராம் கார்ஃபீல்டு
James Abram Garfield
ஐக்கிய அமெரிக்காவின் 20வது அரசுத் தலைவர்
பதவியில்
மார்ச் 4, 1881  செப்டம்பர் 19, 1881
துணை குடியரசுத் தலைவர் செஸ்டர் ஆர்தர் (1881)
முன்னவர் ரதர்போர்ட் ஹேயிஸ்
பின்வந்தவர் செஸ்டர் ஆர்தர்
தனிநபர் தகவல்
பிறப்பு நவம்பர் 19, 1831(1831-11-19)
ஒகையோ,  ஐக்கிய அமெரிக்கா
இறப்பு செப்டம்பர் 19, 1881(1881-09-19) (அகவை 49)
நியூ ஜேர்சி,  ஐக்கிய அமெரிக்கா
தேசியம் அமெரிக்கர்
அரசியல் கட்சி குடியரசுக் கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) லுக்கிரேசியா
படித்த கல்வி நிறுவனங்கள் வில்லியம்சு கல்லூரி
பணி வழக்கறிஞர்
சமயம் கிறிஸ்தவம்
கையொப்பம்

இவர் அதிபராக வர் முன்னர் அமெரிக்க இராணுவத்தில் மேஜர் ஜெனரலாகவும், அமெரிக்கக் கீழவையில் உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். சுட்டுக் கொல்லப்பட்ட அமெரிக்க அரசுத் தலைவர்களில் இவர் இரண்டாமவர் ஆவார் (முதலாமவர் ஆபிரகாம் லிங்கன்). குடியரசுக் கட்சியைச் சேர்ந்த இவர் இவரின் அரசியல் எதிராளியான சார்ல்ஸ் கிட்டோ என்பவனால் ஜூலை 2, 1881 இல் காலை 9:30 மணிக்கு சுடப்பட்டுப் படுகாயமடைந்தார். படுகாயமடைந்த நிலையில் செப்டம்பர் 19 இல் இவர் இறந்தார்.

சார்ல்சு கிட்டோ என்பவரால் அரசுத்தலைவர் கார்ஃபீல்டு சுடப்படல் (பிராங்க் லெசுலி வரைந்தது)[1][2]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.