அது இது எது

அது இது எது என்பது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நகைச்சுவை நிகழ்ச்சி ஆகும். இந்த நிகழ்ச்சியை முதலில் தொகுப்பாளர் மற்றும் நடிகருமான சிவகார்த்திகேயன் தொகுத்துவழங்கினார், தற்பொழுது தொகுப்பாளர் மா கா பா ஆனந்த் இதனை தொகுத்து வழங்குகின்றார்.[1][2]

அது இது எது
வகை நகைச்சுவை
வழங்குநர் மா கா பா ஆனந்த் (தற்பொழுது)
சிவகார்த்திகேயன் (முன்னர்)
நாடு இந்தியா
மொழி தமிழ்
பருவங்கள் 2
தயாரிப்பு
நிகழ்விடங்கள் தமிழ் நாடு
ஓட்டம்  தோராயமாக அங்கம் ஒன்று 40–55 நிமிடங்கள்
ஒளிபரப்பு
அலைவரிசை விஜய் தொலைக்காட்சி
முதல் ஒளிபரப்பு 6 சூன் 2009 (2009-06-06)
இறுதி ஒளிபரப்பு ஒளிபரப்பில்

இந்த நிகழ்ச்சியின் முதல் பருவமானது ஜூன் 6, 2009 முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பானது. இரண்டாம் பருவமானது ஜூலை 29, 2017 முதல் ஒவ்வொரு சனிக்கிழமை மாலை 6 மணிக்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை மதியம் 12 மணிக்கும் ஒளிபரப்பானது. தற்பொழுது ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாகின்றது.[3]

பருவம் 1

முதல் பருவத்தில் குரூப்பிலை டூப்பு, சிரிச்ச போச்சு மற்றும் மாத்தியோசி போன்ற மூன்று சுற்றுக்கள் உண்டு. 3 பிரபலங்கள் கலந்துகொள்ளவர்கள், முதலில் அவர்களுக்கு 1000 மதிப்பெண் கொடுக்கப்படும். ஒவ்வொரு சுற்றிலும் அவர்களின் மதிப்பெண் கணக்கிடப்படும் இறுதியில் யாரிடம் அதிக மதிப்பெண் இருக்கிறன்றது அவரே வெற்றியாளர் ஆவார்.

இந்த பருவத்தில் சிரிச்ச போச்சு சுற்றில் பங்குபெற்ற நகைச்சுவை நடிகர்கள் ரோபோ சங்கர், ராமர் போன்ற சிலர் தற்பொழுது மிகவும் பிரபலமாக உள்ளார்கள். இந்த பருவத்தை தொகுத்து வழங்கிய சிவகார்த்திகேயன் தமிழ் திரைப்படத்துறையில் எல்லோராலும் அறியப்படும் நடிகராக உள்ளார்.[4]

பருவம் 2

இரண்டாம் பருவத்தில் சிங் இன் த ரெயின், சிரிச்ச போச்சு, 5 என்றுதலுக்குள்ள போன்ற சுற்றுக்கள் உண்டு, நான்கு பெயர் இரண்டு அணியாக பங்கு கொள்வார்கள்.

பிரச்சனைகள்

இந்த நிகழ்ச்சியில் சிரிச்ச போச்சு என்ற சுற்றில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியை அவமதிக்கும் விதமாக பேசப்பட்டது என்று வழக்க போடப்பட்டது. அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் அவர்களை கிண்டல் மற்றும் அவமானம் செய்யப்பட்டது. அவர் கூறிய வசனங்களான என்னமா இப்படி பன்றிங்கலேம்மா, போலீசை கூப்புடுவான் போன்ற வசனங்கள் மிகவும் பிரபலமானது. இந்த வசனங்களை வைத்து பாடல்கள், நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களில் வசனங்களாக பயன்படுத்தினார்கள்.[5]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.