1777
1777 (MDCCLXXVII) ஒரு புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் ஞாயிற்றுக் கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1777 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1777 MDCCLXXVII |
திருவள்ளுவர் ஆண்டு | 1808 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2530 |
அர்மீனிய நாட்காட்டி | 1226 ԹՎ ՌՄԻԶ |
சீன நாட்காட்டி | 4473-4474 |
எபிரேய நாட்காட்டி | 5536-5537 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1832-1833 1699-1700 4878-4879 |
இரானிய நாட்காட்டி | 1155-1156 |
இசுலாமிய நாட்காட்டி | 1190 – 1191 |
சப்பானிய நாட்காட்டி | An'ei 6 (安永6年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 2027 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 11 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரியன் நாட்காட்டி | 4110 |
நிகழ்வுகள்
- ஜனவரி 15 - அமெரிக்கப் புரட்சிப் போர்: வெர்மொண்ட் விடுதலையை அறிவித்தது.
- ஜனவரி 16 - வெர்மொண்ட் நியூயோர்க்கில் இருந்து விடுதலையை அறிவித்தது.
- செப்டம்பர் 26 - பிரித்தானியப் படைகள் பிலடெல்பியா நகரை முற்றுகையிட்டுக் கைப்பற்றினர்.
- செப்டம்பர் 27 - பென்சில்வேனியாவின் லான்காஸ்டர் நகரம் இந்த ஒரு நாள் மட்டும் ஐக்கிய அமெரிக்காவின் தலைநகராக இருந்தது.
- அக்டோபர் 4 - அமெரிக்கப் புரட்சி: பிலடெல்பியாவின் ஜெர்மண்டவுன் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் ஜோர்ஜ் வாஷிங்டனின் படைகளை சேர் வில்லியம் ரோவின் பிரித்தானியப் படைகள் தோற்கடித்தன.
- டிசம்பர் 24 - கிரிட்டிமட்டி தீவு ஜேம்ஸ் குக்கினால் கண்டறியப்பட்டது.
பிறப்புக்கள்
- சனவரி - வில்லியம் பார்டன் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். (இ. 1825)
- பிப்ரவரி 22 - ஜான் பென்னெட் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். (இ. 1857)
- ஏப்ரல் 30 - கார்ல் ஃப்ரெடெரிக் காஸ், கணிதவியலர் (இ. 1855)
- மே 11 - சாமுவெல் பிரிட்ஜர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர்.
- சூலை 1 - வில்லியம் ஜெப்ரீஸ் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர்.
- ஆகத்து 14 - ஆன்சு கிருத்தியான் ஆர்ஸ்டெட் என்பவர் ஒரு தானீசிய இயற்பியல் மற்றும் வேதியியல் ஆய்வாளர். (இ. 1851)
- செப்டம்பர் 24 - இரண்டாம் சரபோஜி அல்லது சரபோஜி மாமன்னர், போன்ஸ்லே வம்சத்தை சேர்ந்த தஞ்சாவூர் மராத்திய இராச்சியத்தின் மன்னர்களுள் ஒருவர். (இ. 1832)
- முதலாம் அலெக்சாண்டர், ரஷ்ய சார் மன்னன். (இ. 1825)
- பிரான்சிசு வைட் எல்லிசு 1810 ஆம் ஆண்டு முதல் 1819 ஆண்டு வரை சென்னை மாகாணத்தில் பிரித்தானிய அரசின் கீழ் பணியாற்றிய அதிகாரி. (இ. 1819)
இறப்புக்கள்
- ஜூன் 1 - இயூஸ்ட்டேக்கீயஸ் டி லனோய் பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த ஒரு ஃபிளெமியர் (Flemish) ஆவார். டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியின் வணிக நிலையொன்றை இந்தியாவின் மேற்குக் கரையில் உள்ள குளச்சலில் நிறுவுவதற்காக அக்கம்பனியின் கடற்படைத் தளபதியாக அனுப்பட்டவர். (பி. 1715)
1777 நாட்காட்டி
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.