1759
1759 (MDCCLIX) ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமானது.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1759 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1759 MDCCLIX |
திருவள்ளுவர் ஆண்டு | 1790 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2512 |
அர்மீனிய நாட்காட்டி | 1208 ԹՎ ՌՄԸ |
சீன நாட்காட்டி | 4455-4456 |
எபிரேய நாட்காட்டி | 5518-5519 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1814-1815 1681-1682 4860-4861 |
இரானிய நாட்காட்டி | 1137-1138 |
இசுலாமிய நாட்காட்டி | 1172 – 1173 |
சப்பானிய நாட்காட்டி | Hōreki 9 (宝暦9年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 2009 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 11 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரியன் நாட்காட்டி | 4092 |

செப் 13: கியூபெக் நகரில் சமர்
நிகழ்வுகள்
- ஜனவரி 15 - பிரித்தானிய அருங்காட்சியகம் திறக்கப்பட்டது.
- செப்டம்பர் 10 - பாண்டிச்சேரியில் பிரெஞ்சுக் கடற்படைகளுக்கும் ஜோர்ஜ் போக்கொக் தலைமையிலான பிரித்தானியக் கடற்படைக்கும் இடையில் போர் வெடித்தது. பிரெஞ்சுக் கப்பல் பலத்த சேதத்துடன் பின்வாங்கியது.
- செப்டம்பர் 13 - கனடாவின் கியூபெக் நகருக்கருகாமையில் இடம்பெற்ற போரில் பிரித்தானியப் படைகள் பிரெஞ்சுப் படைகளைத் தோற்கடித்தன.
- செப்டம்பர் 18 - கியூபெக் நகரை பிரித்தானியர் கைப்பற்றினர்.
- நவம்பர் 6 - பாளையக்காரர் பூலித்தேவரின் நெற்கட்டான் செவ்வலைக் கோட்டையை இசபல்கான் கான்சாகிப் என்பவனின் படைகள் வெடிகுண்டுகள் கொண்டு தாக்கின. ஆனாலும் கோட்டையைப் பிடிக்க முடியவில்லை.
நாள் அறியப்படாதவை
- புகழ்பெற்ற கின்னஸ் வடிசாலை (Guinness Brewery) அயர்லாந்து, டப்ளினில் நிறுவப்பட்டது.
- சுவீடன், ஸ்டொக்ஹோல்ம் நகரில் இடம்பெற்ற பெரும் தீயில் 250 வீடுகள் எரிந்தன.
- வண. கிறிஸ்டியன் பிரெடெரிக் ஷ்வார்ட்ஸ் பாதிரியார் யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தார். இவர் இலங்கை முழுவதும் பயணம் செய்து கிறிஸ்தவ மத போதனையில் ஈடுபட்டார்.
பிறப்புக்கள்
இறப்புக்கள்
1759 நாற்காட்டி
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.