செந்தில்
செந்தில் (பிறப்பு: மார்ச் 23, 1951), தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் மற்றும் அரசியல்வாதியும் ஆவார். இவர் 2011, 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.[1][2] இவரும் நகைச்சுவை நடிகர் கவுண்டமணியும் சேர்ந்து பல நகைச்சுவை படங்களில் நடித்து இன்று வரை மக்கள் மத்தியில் நீங்கா இடம்பெற்றுள்ளனர்.
செந்தில் | |
---|---|
![]() | |
பிறப்பு | முனுசாமி |
பணி | நகைச்சுவை நடிகர், அரசியல்வாதி |
செயல்பட்ட ஆண்டுகள் | 1979 — இன்று |
அரசியல் கட்சி | அதிமுக |
வாழ்க்கைத் துணை | கலைச்செல்வி |
பிள்ளைகள் | மணிகண்ட பிரபு, ஹேமச்சந்திர பிரபு |
வாழ்க்கைக் குறிப்பு
செந்தில் 1951ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 23ஆம் தியதியில் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முதுகுளத்தூர் என்னும் ஊருக்கு அருகில் உள்ள இளஞ்செம்பூர் என்ற ஊரில் பிறந்தார். இவரது தந்தை இராமமூர்த்தி மற்றும் தாயார் திருக்கம்மல் ஆவார். இவரது இயற்பெயர் முனுசாமி ஆகும். இவருடன் பிறந்தவர்கள் ஆறு பேர், இதில் செந்தில் மூன்றாவதாகப் பிறந்தார். ஐந்தாம் வகுப்பு வரை படித்த இவர் தந்தை தூற்றியக் காரணத்தால் தனது 12ஆம் வயதில் சொந்த ஊரை விட்டு ஓடி வந்தார். முதலில் ஒரு எண்ணெய் ஆட்டும் நிலையத்தில் வேலைக்கு சேர்ந்தார். பின்னர் ஒரு மதுபானக் கடையில் பணி புரிந்தார். பின்பு நாடகத்தில் சேர்ந்து தன்னுடைய நடிப்புத் திறமைகளை வளர்த்துக் கொண்டார். இதுவே அவர் திரையுலகத்தில் நுழைய உதவியாக இருந்தது. சிறு வேடங்களில் நடித்து வந்த இவருக்கு 1983 ஆம் ஆண்டு வெளியான மலையூர் மம்பட்டியான் படம் திருப்புமுனையை ஏற்படுத்தியது. தனது பெற்றோர்களை 14 ஆண்டுகள் கழித்து மீண்டும் சந்திக்க சென்ற இவரை இன்முகத்துடன் வரவேற்கப்பட்டார். 1984ஆம் ஆண்டு கலைச்செல்வி என்பவரைத் திருமணம் செய்து கொண்ட இவருக்கு மணிகண்ட பிரபு, ஹேமச்சந்திர பிரபு என இரண்டு மகன்கள் உள்ளனர்.
செந்தில் நடித்த சில திரைப்படங்கள்
இவர் ஏறத்தாழ 260 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இவரும் கவுண்டமணியும் சேர்ந்து நடித்த பல நகைச்சுவை காட்சிகள் மக்களை வெகுவாக கவர்ந்தவை.
திரைப்படம் | வருடம் |
---|---|
ஒரு கோவில் இரு தீபங்கள் | 1979 |
ஆடுகள் நனைகின்றன | 1981 |
இன்று போய் நாளை வா | 1981 |
அர்ச்சனைப்பூக்கள் | 1982 |
தூறல் நின்னு போச்சு | 1982 |
நிஜங்கள் | 1982 |
மஞ்சள் நிலா | 1982 |
சாட்சி | 1983 |
சாட்டை இல்லாத பம்பரம் | 1983 |
பகவதிபுரம் ரெயில்வே கேட் | 1983 |
மலையூர் மம்பட்டியான் | 1983 |
மாறுபட்ட கோலங்கள் | 1983 |
24 மணி நேரம் | 1984 |
அம்பிகை நெரில் வந்தாள் | 1984 |
அவள் ஒரு மாதிரி | 1984 |
இங்கேயும் ஒரு கங்கை | 1984 |
குவா குவா வாத்துகள் | 1984 |
சத்தியம் நீயே | 1984 |
தலையணை மந்திரம் | 1984 |
நல்ல நாள் | 1984 |
நான் பாடும் பாடல் | 1984 |
நேரம் நல்ல நேரம் | 1984 |
மண்சோறு | 1984 |
மதுரை சூரன் | 1984 |
மன்மத ராஜாக்கள் | 1984 |
வைதேகி காத்திருந்தாள் | 1984 |
அண்ணி | 1985 |
அவன் | 1985 |
அன்பின் முகவரி | 1985 |
ஆகாய தாமரைகள் | 1985 |
இரண்டு மனம் | 1985 |
உதயகீதம் | 1985 |
உரிமை | 1985 |
கீதாஞ்சலி | 1985 |
சித்திரமே சித்திரமே | 1985 |
சிவப்பு நிலா | 1985 |
செல்வி | 1985 |
திறமை | 1985 |
தென்றல் தொடாத மலர் | 1985 |
நல்ல தம்ப்ய் | 1985 |
பிரெம பாசம் | 1985 |
மருதாணி | 1985 |
யார் | 1985 |
ராஜா யுவராஜா | 1985 |
வெற்றிக்கனி | 1985 |
வேஷம் | 1985 |
ஹெல்லோ, யார் பேசறது? | 1985 |
அம்மன் கோயில் கிழக்காலே | 1986 |
ஆயிரம் பூக்கள் மலரட்டும் | 1986 |
உனக்காகவே வாழ்கிறேன் | 1986 |
என்றாவது ஒரு நாள் | 1986 |
கண்ணே கனியமுதே | 1986 |
காலமெல்லாம் உன் மடியில் | 1986 |
குங்கும பொட்டு | 1986 |
கொயில் யானை | 1986 |
டிசம்பர் பூக்கள் | 1986 |
தர்ம பத்தினி | 1986 |
நம்ம ஊரு நல்ல ஊரு | 1986 |
நிலவே மலரே | 1986 |
பதில் சொல்வாள் பத்ரகாளி | 1986 |
பாரு பாரு பட்டணம் பாரு | 1986 |
பிறந்தேன் வளர்ந்தேன் | 1986 |
புதிய பூவிது | 1986 |
பூக்களை பரிக்காதே | 1986 |
மந்திர புன்னகை | 1986 |
மறக்கமாட்டேன் | 1986 |
ரசிகன் ஒரு ரசிகை | 1986 |
அருள் தரும் ஐயப்பன் | 1987 |
ஆண்களை நம்பாதே | 1987 |
ஆயுசு நூறு | 1987 |
ஆனந்த ஆராதனை | 1987 |
இது ஒரு தொடர்கதை | 1987 |
இவர்கள் இந்தியர்கள் | 1987 |
இனிய உறவு பூத்தது | 1987 |
உழவன் மகன் | 1987 |
உள்ளம் கவர்ந்த கள்வன் | 1987 |
ஊர்க்குருவி | 1987 |
எங்க ஊரு பாட்டுக்காரன் | 1987 |
ஒரே ரத்தம் | 1987 |
கல்யாண கச்சேரி | 1987 |
கிருஷ்ணன் வந்தான் | 1987 |
கிழக்கு ஆப்பிரிக்காவில் ஷீலா | 1987 |
சிறைப்பறவை | 1987 |
சின்னகுயில் பாடுது | 1987 |
சொல்லுவதெல்லாம் உண்மை | 1987 |
தங்கச்சி | 1987 |
தீர்த்த கரையினிலே | 1987 |
துளசி | 1987 |
நல்ல பாம்பு | 1987 |
நினைக்க தெரிந்த மனமே | 1987 |
நினைவே ஒரு சங்கீதம் | 1987 |
பரிசம் போட்டாச்சு | 1987 |
பூ மழை பொழியுது | 1987 |
பூப்பூவா பூத்திருக்கு | 1987 |
பூவிழி வாசலிலே | 1987 |
மனிதன் | 1987 |
முப்பெரும் தேவியர் | 1987 |
மேகம் கருக்குது | 1987 |
மைக்கேல் ராஜ் | 1987 |
ராஜ மரியாதை | 1987 |
ரேகா | 1987 |
வாழ்க வளர்க | 1987 |
வெளிச்சம் | 1987 |
வேலுண்டு வினையில்லை | 1987 |
வேலைக்காரன் | 1987 |
இது எஙள் நீதி | 1988 |
இரண்டில் ஒன்று | 1988 |
உழைத்து வாழ வேண்டும் | 1988 |
உள்ளத்தில் நல்ல உள்ளம் | 1988 |
எங்க ஊரு காவக்காரன் | 1988 |
என் வழி தனி வழி | 1988 |
என்னை விட்டு பொகாதே | 1988 |
ஒருவர் வாழும் ஆலயம் | 1988 |
கண் சிமிட்டும் நேரம் | 1988 |
கல்யாண பறவைகள் | 1988 |
காலையும் நீயே மாலையும் நீயே | 1988 |
குங்கும கோடு | 1988 |
கைநாட்டு | 1988 |
கொயில் மணி ஓசை | 1988 |
சக்கரைப்பந்தல் | 1988 |
சுதந்திர நாட்டின் அடிமைகள் | 1988 |
செண்பகமே செண்பகமே | 1988 |
செந்தூரப்பூவே | 1988 |
த்ங்க கலசம் | 1988 |
தம்பி தங்க கம்பி | 1988 |
தாய்மேல் ஆணை | 1988 |
நம்ம ஊர் நாயகன் | 1988 |
நான் சொன்னதே சட்டம் | 1988 |
நெருப்புநிலா | 1988 |
பட்டிக்காட்டு தம்பி | 1988 |
பாட்டி சொல்லை தட்டாதே | 1988 |
பாய்மரக்கப்பல் | 1988 |
பார்த்தால் பசு | 1988 |
பாலைவனத்தில் பட்டாம்பூச்சி | 1988 |
பூவும் புயலும் | 1988 |
மனைவி ஒரு மந்திரி | 1988 |
ராசாவே உன்னை நம்பி | 1988 |
வளைகாப்பு | 1988 |
ஜாடிக்கேத்த மூடி | 1988 |
அத்தைமடி மெத்தையடி | 1989 |
அன்புக்கட்டளை | 1989 |
எங்க ஊரு மாப்பிள்ளை | 1989 |
எங்கள் அண்ணன் வரட்டும் | 1989 |
ஒரே தாய் ஒரே குலம் | 1989 |
கரகாட்டக்காரன் | 1989 |
காவல் பூனைகள் | 1989 |
சம்சாரமே சரணம் | 1989 |
தங்கமான ராசா | 1989 |
அம்மன் கோவில் திருவிழா | 1990 |
ஆத்தா நான் பாஸாயிட்டேன் | 1990 |
ஆவதெல்லாம் பெண்ணாலே | 1990 |
இணைந்த கைகள் | 1990 |
ஊரு விட்டு ஊரு வந்து | 1990 |
எங்க ஊரு ஆட்டுக்கரன் | 1990 |
எனக்கு ஒரு நீதி | 1990 |
சிலம்பு | 1990 |
தங்கைக்கு ஒரு தாலாட்டு | 1990 |
நீங்களும் ஹீரோதான் | 1990 |
பாட்டாளி மகன் | 1990 |
பாலம் | 1990 |
புது பாட்டு | 1990 |
மருதுபாண்டி | 1990 |
மல்லுவேட்டி மைனர் | 1990 |
முதலாளியம்மா | 1990 |
வெற்றிமாலை | 1990 |
ஜகதல பிரதாபன் | 1990 |
அண்ணன் காட்டிய வழி | 1991 |
அதிகாரி | 1991 |
அபூர்வ நாகம் | 1991 |
அர்சனா I.A.S. | 1991 |
அன்பு சங்கிலி | 1991 |
ஆத்தா உன் கோவிலிலே | 1991 |
ஈசுவரி | 1991 |
ஊரெல்லாம் உன் பாட்டு | 1991 |
எங்க ஊரு சிப்பாய் | 1991 |
என் ராசாவின் மனசிலே | 1991 |
ஒயிலாட்டம் | 1991 |
சேரன் பாண்டியன் | 1991 |
தாயம்மா | 1991 |
தூதுபோ செல்லக்கிளியே | 1991 |
தை பூசம் | 1991 |
நாடு அதை நாடு | 1991 |
நான் புடிச்ச மாப்பிள்ளை | 1991 |
நான் வளர்த்த பூவே | 1991 |
நெஞ்சமுண்டு நேர்மையுண்டு | 1991 |
பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும் | 1991 |
பொண்டாட்டி பொண்டாட்டிதான் | 1991 |
மரிக்கொழுந்து | 1991 |
மில் தொழிலாளி | 1991 |
மூக்குத்தி பூமேலே | 1991 |
வாசலிலே ஒரு வெண்ணிலா | 1991 |
வெற்றிக்கரங்கள் | 1991 |
வைதேகி கல்யாணம் | 1991 |
அபிராமி | 1992 |
உன்னை வாழ்த்திப்பாடுகிறேன் | 1992 |
ஊர் மரியாதை | 1992 |
சின்ன கவுண்டர் | 1992 |
சின்ன பசங்க நாங்க | 1992 |
உத்தமராசா | 1993 |
எஜமான் | 1993 |
கோயில் காளை | 1993 |
சின்னஜமீன் | 1993 |
பேண்ட் மாஸ்டர் | 1993 |
பொறந்தவீடா புகுந்த வீடா | 1993 |
பொன்னுமணி | 1993 |
மகராசன் | 1993 |
ராக்காயி கோயில் | 1993 |
ஜென்டில்மேன் | 1993 |
கட்டப்பொம்மன் | 1993 |
சேதுபதி ஐ.பி.எஸ் | 1994 |
சத்யவான் | 1994 |
சின்ன மேடம் | 1994 |
சீமான் | 1994 |
செந்தமிழ் செல்வன் | 1994 |
டூயட் | 1994 |
தாய் மனசு | 1994 |
நம்மவர் | 1994 |
நாட்டாமை | 1994 |
நிலா | 1994 |
பூவரசன் | 1994 |
மேட்டுப்பட்டி மிராசு | 1994 |
ரசிகன் | 1994 |
ராஜகுமாரன் | 1994 |
ராஜபாண்டி | 1994 |
வரவு எட்டணா செலவு பத்தணா | 1994 |
வனஜா கிரிஜா | 1994 |
வீரப்பதக்கம் | 1994 |
வீரா | 1994 |
ஜல்லிக்கட்டு காளை | 1994 |
ஜெய் ஹிந்த் | 1994 |
அசுரன் | 1995 |
கூலி | 1995 |
கோலங்கள் | 1995 |
சந்த்தைக்கு வந்த கிளி | 1995 |
சந்திரலேகா | 1995 |
சின்ன வாத்தியார் | 1995 |
தமிழச்சி | 1995 |
நாடோடி மன்னன் | 1995 |
முத்து | 1995 |
இந்தியன் | 1996 |
உள்ளத்தை அள்ளித்தா | 1996 |
கோயம்புத்தூர் மாப்ளே | 1996 |
அருணாச்சலம் | 1997 |
ஜீன்ஸ் | 1998 |
படையப்பா | 1999 |
வானத்தைப்போல | 2002 |
பாய்ஸ் | 2003 |
விசில் | 2003 |
ஜெயம் | 2003 |
எங்கள் ஆசான் | 2009 |
இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் | 2009 |
அன்பே அன்பே | 2010 |
எல்லைச்சாமி | 2010 |
சத்யம் | 2010 |
தங்க மனசுக்காரன் | 2010 |
சின்னத்தாயி | 2012 |
உன்ன நினச்சேன் பாட்டு படிச்சேன் | |
என்றும் அன்புடன் | |
ஒன்னா இருக்க கத்துக்கணும் | |
சித்து | |
சின்னவர் | |
சேவகன் | |
தாய்மாமன் | |
புன்னகைப்பூவே | |
ரோஜாவை கிள்ளாதே | |
ஹெலோ | |
தானா சேர்ந்த கூட்டம் | 2018 |
இவரது நகைச்சுவையான வசனங்கள் சில:
- அந்த இன்னொன்னு தாண்ணே இது (கரகாட்டக்காரன்)
- நேர்மை எருமை கருமை
- பாட்றி என் ராசாத்தி
- டேய் அண்ணனுக்கு பொற வைடா அண்ணன் நன்றி உள்ளவரு
- டேய்! அண்ணன் சிகப்புடா கோயில் காளை
- புலிகுட்டி தம்பி பூனகுட்டி, பூனகுட்டி தம்பி புலிகுட்டி
- இது மந்திரிச்சு விட்ட தாயத்து இல்ல, இது தான் சயனைடு சப்பி
- ம்ம்ம்ம்ம்ம், ர்ர்ர்ர்-அ விட்டுட்டே (இந்தியன்)
- அய்யய்யய்யய்யோ, அறிவுக்கொளுந்துண்ணே நீங்க
- கோழி முட்ட மாதிரி இருக்கு, இதுல எப்படிண்ணே லைட் எரியும்!... ... ... என்னண்ணே உடைச்சிட்டீங்க! (வைதேகி காத்திருந்தாள்)
- ஸ்பேனர் புடிச்சவன் எல்லாம் மெக்கானிக்குன்னு சொல்றான் (சேரன் பாண்டியன்)
- அண்ணே! ஆத்தா பல்லு ஏண்ணே அப்படி இருக்கு! (சின்ன கவுண்டர்)