ரோஜாவை கிள்ளாதே
ரோஜாவை கிள்ளாதே (Rojavai Killathe) சுரேஸ் கிருஷ்ணா இயக்கத்தில் 1993 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். அர்ஜுன், குஷ்பூ, ராதாரவி, கவுண்டமணி, செந்தில், வடிவேலு (நடிகர்), சரத் பாபு, வெண்ணிற ஆடை மூர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர். கே. சுகுமார் தயாரிப்பில், தேவா இசை அமைப்பில் 3 டிசம்பர் 1993 ஆம் தேதி வெளியானது. பின்னர் 2006 ஆம் ஆண்டு, ஹிந்தி மொழியில் ஜல்லாட் என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு வெளிவந்தது[1][2]
நடிகர்கள்
அர்ஜுன், குஷ்பூ, ராதா ரவி, கவுண்டமணி, செந்தில், வடிவேலு, சரத் பாபு, வெண்ணிறாடை மூர்த்தி, அருண்குமார், ஒரு விரல் கிருஷ்ணா ராவ், ரா. சங்கரன், ஷர்மிலி, சூர்யகலா, நரசிம்மன், நளினி காந்த், மாஸ்டர் ராபர்ட்.
கதைச்சுருக்கம்
பீட்டர் (பிரபாகரன்) என்ற கடத்தல்காரனிடம் அலெக்சாண்டர் (அர்ஜுன்) அடியாளாக பணி ஆற்றிவருகிறான். பீட்டரிடம் இருக்கும் அடியாட்களில், அலெக்சாண்டர் மிகவும் விசுவாசம் கொண்ட அடியாளாக இருக்கிறான். அய்யனார் என்பவருடன் பீட்டருக்கு அடிக்கடி மோதல் ஏற்படுகிறது. எப்படியாது அய்யனாரை வீழ்த்த வேண்டும் என்ற எண்ணம் பீட்டரிடம் ஆழமாக இருந்தது.
அய்யனாரிடம் அனு (குஷ்பூ) என்ற பெண் வேலை பார்த்து வந்தாள். அவளை மேடையில் ஆடச் செய்து மிகவும் தரக் குறைவாக நடத்தினான் பீட்டர். அதே நேரம், அனு தான் அய்யனாரின் பலவீனம் என்று கண்டறிந்த பீட்டர், அனுவை கொல்ல அலெக்சாண்டரை ஏவுகிறான். அனுவை கொல்ல மனம் இல்லாத அலெக்சாண்டர், அவளின் தோளில் சுடுகிறான். காயமடைந்த அனுவை, மருத்துவமனையிலும் சேர்கிறான். பின்னர், பீட்டரிடமிருந்தும் அய்யனாரிடமிருந்தும் அனுவை காப்பாற்ற முடிவு செய்கிறான் அலெக்சாண்டர். இறுதியில், அனுவை காப்பாற்றப்பட்டாளா என்பதே மீதிக் கதையாகும்.
ஒலித்தொகுப்பு
வைரமுத்து எழுதிய பாடல் வரிகளுக்கு இசை அமைத்தார் தேவா. ஐந்து பாடல்கள் கொண்ட ஒலித்தொகுப்பு 1993 ஆம் ஆண்டு வெளியானது.[3]
- அர்த்தமுள்ள பாட்டு
- மூடிக்கோ மூடிக்கோ
- நீ ஒரு பக்கம்
- ஒன்னாச்சி ரெண்டாச்சி
- யமுன நதிக் கரையில்
வரவேற்பு
இயக்கமும் ஒளிப்பதிவும் நன்றாக அமைந்திருந்தது என்ற விமர்சனத்தைப் இப்படம் பெற்றது.[4]