ராதா கிருஷ்ணா

ராதா கிருஷ்ணா என்பது விஜய் தொலைக்காட்சியில் திசம்பர் 3, 2018 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 1:30 மணிக்கு ஒளிபரப்பாகி, ஜனவரி 7, 2019 முதல் மதியம் 12:30 மணிக்கு ஒளிபரப்பானது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது பருவம் ஒளிபரப்பு செய்யப்படுவதற்காக தொடர்களின் நேரங்கள் மாற்றப்பட்டன.எனவே ஒளிபரப்ப நேரம் கிடைக்காத காரணத்தால் 170 அத்தியாயங்களுடன் ராதா கிருஷ்ணா தொடர் நிறுத்தப்பட்டது. பின் மீண்டும் ஜூலை 2, 2019 முதல் 171வது அத்தியாயத்திலிருந்து அதிகாலை 2:00 மணிக்கு வாரத்தின் ஏழு நாட்களும் ஒளிபரப்பப்பட்டது.ஜூலை 17,2019 அன்று 186 அத்தியாயங்களுடன் நிறுத்தப்பட்டது. இது இந்து கடவுள் கிருட்டிணன் மற்றும் ராதாவை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஒரு தொன்மவியல் காதல் காவியம் ஆகும்.[2][3]

ராதா கிருஷ்ணா

ராதா கிருஷ்ணா தொடரின் சுவரொட்டி
வகை தொன்மவியல்
காதல்
நாடகம்
தயாரிப்பு சித்தார்த் குமார் திவாரி
இயக்கம் சித்தார்த் குமார் திவாரி
நடிப்பு
  • சுமேத் முத்கல்கர்
  • மல்லிகா சிங்
  • ரீனா கபூர்
  • கவி சஹல்
முகப்பிசை "கண்ணனின் புல்லாங்குழல் இசை என் நெஞ்சில் பாயாதா" [1]
முற்றிசை 'ராதா ராதா'
நாடு இந்தியா
மொழி தமிழ்மொழி (மொழிமாற்றம் செய்யப்பட்டது )
பருவங்கள் 1
இயல்கள் 186 (ஜூலை 17 வரை)
தயாரிப்பு
ஓட்டம்  தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள்
ஒளிபரப்பு
அலைவரிசை விஜய் தொலைக்காட்சி
முதல் ஒளிபரப்பு 3 திசம்பர் 2018 (2018-12-03)
இறுதி ஒளிபரப்பு 17 ஜூலை 2019
காலவரிசை
முன் அவளும் நானும்

இது ஸ்டார் பாரத் என்ற தொலைக்காட்சியில் அக்டோபர் 3, 2018 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்தி தொடரான 'ராதா கிருஷ்ண்' என்ற தொடரின் தமிழ் மொழிமாற்றுத் தொடர் ஆகும்.

கதைச்சுருக்கம்

கிருஷ்ணரும், ராதாவும் காதலின் அடையாளமாக போற்றப்படுகின்றனர். கிருஷ்ணனை மறக்கும் படி ஸ்ரீ தாமன் இட்ட சாபத்தின் காரணமாக கோலோகம் விட்டு பூலோகம் வருகிறாள் ராதா. அவளை தேடி கிருஷ்ணனும் பூவுலகம் வருகிறார். அங்கும் அவர்களின் காதல் தொடர்கிறது.இருப்பினும் வாழ்வில் எதிர் கொண்ட பிரச்சினைகளை தாண்டி வந்த பிறகும் கூட அவர்கள் இருவரும் பிரிந்து சென்றது ஏன்? கிருஷ்ணா வை விடுத்து அயனை ராதை மணம் புரிய காரணம் என்ன? என்பது தான் கதை.

விமர்சனங்கள்

தொடரின் வசனங்கள் முழுக்க முழுக்க தமிழ்மொழியில் மொழிபெயர்க்கப்படவில்லை என்றும், தமிழ் மொழிபெயர்ப்பில் நிறைய சமஸ்கிருத வார்த்தைகள் நிறைந்துள்ளன என்று விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டுள்ளன.

நடிகர்கள்

  • ஹிமான்ஷூ சோனி (கோலோகம்) /சுமேத் முத்கல்கர் (பூலோகம்) - கிருஷ்ணா (இந்து கடவுள், விஷ்ணு வின் அவதாரம்)
  • ஷிவ்யா பதன்யா (கோலோகம்)/மல்லிகா சிங் (பூலோகம்)- ராதா(இந்து கடவுள், லட்சுமி யின் அவதாரம்)
  • ரீனா கபூர் - யசோதை (கிருஷ்ணனின் வளர்ப்பு தாய்)
  • கவி சஹல் - நந்தகோபன்(கிருஷ்ணனின் வளர்ப்பு தந்தை )
  • பசந்த் பட் - பலராமன் (கிருஷ்ணனின் அண்ணன், ஆதிசேஷனின் அவதாரம், வாசுதேவன் மற்றும் தேவகி யின் ஏழாம் மகனாக கருவில் உருவாகி, யோகமாயை உதவியுடன் ரோகிணி தேவி யின் கர்ப்பத்தில் சென்று பிறந்தவர்)
  • அர்பித் ரங்கா - கம்சன்(மதுராபுரி அரசன், தேவகியின் அண்ணன், கிருஷ்ணன் பலராமனின் தாய்மாமன்)
  • அகன்ஷா ராவத் - கீர்த்திதா (ராதையின் தாய்)
  • ராகேஷ் ராவத் - வ்ருஷ்பானு (ராதையின் தந்தை )
  • ருஷிராஜ் பவர் - அயன் (ராதையின் பால்யநண்பன் / ராதையின் கணவன் )
  • நவீன் ஜிங்கர் - வாசுதேவன் (கிருஷ்ணனின் தந்தை, குந்தியின் அண்ணன் )
  • ஃபலக் நாஸ் - தேவகி(கிருஷ்ணனின் தாய், கம்சனின் சகோதரி, தேவமாதா அதிதி யின் அவதாரம் )
  • மாலினி செங்குப்தா - ஜடிலா (அயனின் தாய்)
  • த்ரிதி கோன்கா - விஷாகா (ராதையின் தோழி)
  • ஹர்ஷ் வசிஷ்ட் - ஸ்ரீதாமா (கிருஷ்ணனின் பக்தன் )
  • வசுந்தரா கௌல் - ரோகிணி தேவி (வாசுதேவனின் முதல் மனைவி, பலராமன் மற்றும் சுபத்ரா வின் தாய், சுரபி யின் அவதாரம் )
  • ப்ரீத்தி வர்மா - சந்திராவளி (ராதையின் பெரியதந்தையின் மகள், ராதையின் அக்காள்)
  • நிமய் பலி - உக்கிரபத் (அயனின் தந்தை )
  • குமார் ஹெக்தே - நாரதர் (தேவரிஷி)
  • குனால் பக்ஷி - இந்திரன் (தேவராஜன் )

இவற்றை பார்க்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.