மதுரு ஆறு

மதுரு ஆறு இலங்கையில் உள்ள ஆறாகும். இது பதுளையின் கிழக்குச் சாய்வுகளில் இருந்து ஊற்றெடுத்துப்பாய்கிறது. இது இலங்கையின் நீளத்தின் படி 8வது பெரிய ஆறாகும், நீரோட்டத்தின் படி 10வது பெரிய ஆறாகும். இது நீரேந்துப்பகுதியில் சராசரியாக ஆண்டுக்கு 3060 மில்லியன் கனமீட்டர் மழை பெய்கிறது, இதில் சுமார் 26 சதவீதமான நீர் கடலை அடைவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு 1541 சதுர கிலோமீட்டர் நீரேந்துப்பகுதியைக் கொண்டுள்ளதோடு இது இலங்கையின் 9வது பெரிய நீரேந்துப் பகுதியாகும்.[1],[2],[3]

மதுரு ஆறு
மாதுரு ஓயா அணை
மூலம் பதுளையின் கிழக்குச் சாய்வு
நீரேந்துப் பகுதி நாடுகள் இலங்கை
நீளம் 135 கி.மீ.
வாய் உயரம் கடல் மட்டம்
வெளியேற்றம் 800 106கனமீட்டர்
நீரேந்துப் பகுதி 1541

ஆதாரங்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.