பைரோபாசுபாரிக் காடி

பைரோபாசுபாரிக் காடி, டைபாசுபாரிக் காடி என அழைக்கப்படுகிறது.இதன் மூலக்கூறு வாய்ப்பாடு H4P2O7. இது நிறமற்றது, மணமற்றது, நீர் உறிஞ்சும் தன்மை உடையது. நீர், டைஎத்தில் ஈதர், மற்றும் எத்தில் ஆல்ககால் இவற்றில் கரையக்கூடியது. நீரற்ற பைரோபாசுபாரிக் காடி இரண்டு வெவ்வேறு வடிவங்களை கொண்டுள்ளது.அவை 54.3 °C மற்றும் 71.5 °C. இல் உருகின்றன. சோடியம் பைரோபாசுபேட்டை அயனி பரிமாற்றம் செய்தல் அல்லது ஐதரசன் சல்பைடை, காரிய பைரோபாசுபேட்டுடன் வினைபுரியச் செய்தல் இதன் மூலம் பைரோபாசுபாரிக் காடி தயாரிக்கப்படுகிறது.பாசுபோரிக் காடியை நீர்நீக்கம் செய்யும்போது பைரோபாசுபாரிக் காடி ஒரு விளைபொருளாக உருவாகிறது.உருகிய பைரோபாசுபாரிக் காடி, பாசுபாரிக் காடி, பைரோபாசுபாரிக் காடி, மற்றும் பாலிபாசுபாரிக் காடிகளின் சமநிலை கலைவையை விரைவில் உருவாக்குகிறது.பைரோபாசுபாரிக் அமிலத்தின் எடை சதவீதமானது சுமார் 40% ஆகும். இது உருகிய நிலையிலிருந்து படிகமாக மாறுவது கடினமாகும். நீர்த்த பைரோபாசுபாரிக் காடி,அனைத்து பாலிபாசுபாரிக் காடியை போன்றே நீரார்பகுக்கும்போது பாசுபாரிக் காடி,பைரோபாசுபாரிக் காடி, மற்றும் பாலிபாசுபாரிக் காடிகளின் இடையே சமநிலையை உருவாக்குகிறது.அதிகளவு நீர்த்த பைரோபாசுபாரிக் காடி,பாசுபாரிக் காடியைக் கொண்டுள்ளது.[1]

H4P2O7 + H2O 2H3PO4
பைரோபாசுபாரிக் காடி
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்s
டைபாசுபாரிக் காடி
μ-oxido-bis(dihydroxidooxidophosphorus)
வேறு பெயர்கள்
டைபாசுபாரிக் காடி
இனங்காட்டிகள்
2466-09-3 Y
ChEBI CHEBI:29888 Y
ChEMBL ChEMBL1160571 Y
ChemSpider 996 Y
IUPHAR/BPS
3151
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 1023
UNII 4E862E7GRQ Y
பண்புகள்
H4P2O7
வாய்ப்பாட்டு எடை 177.97 g/mol
உருகுநிலை
நன்கு கரைகிறது
கரைதிறன் ஆல்ககால், ஈதர் நன்கு கரைகிறது
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இது: Y/N?)
Infobox references

பைரோபாசுபாரிக் காடி ஒரு நடுத்தர வலிமைமிகு கனிம அமிலமாகும். பைரோபாசுபோரிக் காடியின் எசுடர்கள், எதிரயனிகள் மற்றும் உப்புகள் பைரோபாசுபேட்டுகள் என அழைக்கப்படுகின்றன. பைரோபாசுபாரிக் அமிலம் அரிக்கும்தன்மை உடையது. நச்சுத்தன்மை அற்றது.[2]

வரலாறு [தொகு]

1827 ஆம் ஆண்டு "கிளார்க் க்ளாசுகோ" என்பவரால் பைரோபாசுபாரிக் காடி என்ற பெயர் வழங்கப்பட்டது. இவரால், சோடியம் பாசுபேட்டு உப்பினை செஞ்சூட்டிற்கு வெப்பப்படுத்தும் போது இக்காடி கண்டுபிடிக்கப்பட்டது. பைரோபாசுபாரிக் காடியை செஞ்சூட்டிற்கு வெப்பப்படுத்தும் போது விரைவாக சூடான நீரில் பாசுபாரிக் காடியாக மாற்றப்படுகிறது.[3]

மேலும் காண்க

  • சோடியம் பைரோபாசுபேட்டு
  • கால்சியம் பைரோபாசுபேட்டு டைஐதரேட்டு வீழ்படிவு நோய்
  • டைமெத்தில் அல்லைல் பைரோபாசுபேட்டு
  • ADP
  • ATP
  • ஆர்த்தோ காடிகள்
  • டிரை பாசுபாரிக் காடி

மேற்கோள்கள்

  1. Corbridge, D. (1995). "Chapter 3: Phosphates". Studies in inorganic Chemistry vol. 20. Elsevier Science B.V.. பக். 169-305. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-444-89307-5. http://www.sciencedirect.com/science/article/pii/B9780444893079500088. பார்த்த நாள்: January 30, 2015.  via ScienceDirect (Subscription may be required or content may be available in libraries.)
  2. Material Safety Data Sheet: Pyrophosphoric acid MSDS www.sciencelab.com
  3. Beck, Lewis Caleb (1834). A Manual of Chemistry: Containing a Condensed View of the Present State of the Science, with Copious References to More Extensive Treatises, Original Papers, Etc. E.W & C Skinner. பக். 160. https://books.google.co.uk/books?id=wlE6AQAAMAAJ&printsec=frontcover&dq=A+Manual+of+Chemistry:+Containing+a+Condensed+View+of+the+Present+State&hl=en&sa=X&ei=GaXMVJyuLc_zarbPgcgK&ved=0CCIQ6AEwAA#v=onepage&q=A%20Manual%20of%20Chemistry%3A%20Containing%20a%20Condensed%20View%20of%20the%20Present%20State&f=false. பார்த்த நாள்: January 30, 2015.

வெளிஇணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.