மாலிப்டிக் அமிலம்

மாலிப்டிக் அமிலம் (Molybdic acid) என்பது ஒரு திண்மம், மாலிப்டினம் மாலிப்டினம் மூவாக்சைடின் நீரேற்று வடிவம் மற்றும் நீர்க்கரைசலில் உள்ள ஒரு வேதி உப்பாகும்.

மாலிப்டிக் அமிலம்
Molybdic acid
பெயர்கள்
வேறு பெயர்கள்
மாலிப்டிக்(VI) அமிலம்
இனங்காட்டிகள்
7782-91-4
ChemSpider 74188
EC number 231-970-5
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 82208
பண்புகள்
MoO3·H2O
வாய்ப்பாட்டு எடை 161.95 கி மோல்−1 [1]
அடர்த்தி 3.1 கி செ.மீ−3 [1]
உருகுநிலை
1510 மி.கி டெ.மீ−3 [2]
தீங்குகள்
R-சொற்றொடர்கள் R36/37/38 [1]
S-சொற்றொடர்கள் S24/25, S22 [1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

இச்சேர்மத்தின் மிக எளிய நீரேற்று வடிவம் MoO3·H2O என்ற வாய்ப்பாடு கொண்ட ஒருநீரேற்று ஆகும். MoO3·2H2O என்ற வாய்ப்பாடு கொண்ட இருநீரேற்று வடிவமும் அறியப்படுகிறது. ஓருநீரேற்றின் (MoO3•H2O) திண்ம அமைப்பில் எண்முக ஒருங்கிணைப்பு கொண்ட MoO5•(H2O) அலகுகள் நான்கு உச்சிகளை பகிர்ந்து கொண்டுள்ளன.[3] இருநீரேற்றுகளும் இதே அடுக்கு அமைப்பைக் கொண்டு கூடுதலாக H2O மூலக்கூறுகள் அடுக்குகளுக்கு இடையில் செருகப்பட்டு காணப்படுகின்றன.

நீர்க்கரைசல்களில் உள்ள அமிலமாலிப்டேட்டு உப்புகளின், குறைந்த செறிவு மூலக்கூற்று O3Mo·3H2O அமைப்புகள் நிறமாலையியலின்படி உறுதி செய்யப்படுகின்றன.[4]

மாலிப்டிக் அமிலத்தின் உப்புகள் மாலிப்டேட்டுகள் எனப்படுகின்றன.

மாலிப்டிக் அமிலமும் அதன் உப்புகளும் புரோத் வினைப்பொருள் தயாரிக்கப் பயன்படுகின்றன. இவ்வினைப்பொருள் ஆல்கலாய்டுகளைக் கண்டறிய உதவுகின்றன.

மேற்கோள்கள்

  1. "Molybdic acid | 7782-91-4". Chemicalbook.com. பார்த்த நாள் 2012-08-23.
  2. http://www.chemspider.com/RecordView.aspx?rid=e75000d7-a392-4602-8ca4-f2bd1f94b31c
  3. Wells A.F. (1984) Structural Inorganic Chemistry 5th edition Oxford Science Publications ISBN 0-19-855370-6
  4. Solution structure of molybdic acid from Raman spectroscopy and DFT analysis, Oyerindea O.F., Week C.L., Anbarb A.D., Spiro T.G. Inorganica Chimica Acta, 361, 4, (2008), 1000-1007, எஆசு:10.1016/j.ica.2007.06.025
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.