தெலூரசு அமிலம்
தெலூரசு அமிலம் (Tellurous acid) என்பது H2TeO3. என்ற மூலக்கூற்று வாய்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். தெலூரியம்(IV) இன் [2] ஆக்சோ அமிலமான இச்சேர்மம் தெளிவாக வரையறுக்கப்படவில்லை. இச்சேர்மத்தின் அமைப்பு வாய்ப்பாட்டை (HO)2TeO என்றும் எழுதலாம். தெலூரியம் ஈராக்சைடை நீருடன் சேர்த்து சூடுபடுத்தி நீராற்பகுப்பு செய்வதன் மூலம் தெலூரசு அமிலத்தைத் தயாரிக்கமுடியும். பொட்டாசியம் அமில தெலூரைடு (KHTeO3) என்ற நன்கு அறியப்பட்ட உப்பு உள்ளிட்ட பல உப்புகள் இவ்வமிலத்திற்கு இணை காரங்களாக உள்ளன.
![]() | |
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
தெலூரசு அமிலம் | |
வேறு பெயர்கள்
தெலூரியம் டையாக்டைடு ஐதரேட்டு, தெலூரியம்(IV) ஆக்சைடு ஐதரேட்டு | |
இனங்காட்டிகள் | |
10049-23-7 ![]() | |
ChEBI | CHEBI:30465 ![]() |
ChemSpider | 23310 ![]() |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 24936 |
SMILES
| |
UNII | IVA6SGP6QM ![]() |
பண்புகள் | |
H2TeO3 | |
வாய்ப்பாட்டு எடை | 177.616 கிராம்கள் |
தோற்றம் | நிரமற்ற படிகங்கள் |
அடர்த்தி | ~ 3 கி/செ.மீ3 |
கொதிநிலை | சிதவடைகிறது |
மிகக்குறைவு | |
காடித்தன்மை எண் (pKa) | pKa(1) = 2.48, pKa(2) = 7.70 [1] |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | அறியப்படவில்லை |
மூலக்கூறு வடிவம் | |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | செலீனசு அமிலம் சல்பூரசு அமிலம் |
ஏனைய நேர் மின்அயனிகள் | சோடியம் தெலூரைட்டு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
![]() ![]() ![]() | |
Infobox references | |
பண்புகள்
ஒத்தவரிசைச் சேர்மமான செலீனியசு அமிலத்திலிருந்து தெலூரசு அமிலம் மாறுபட்டு சிற்றுறுதியாக சேர்மமாக மட்டுமே காணப்படுகிறது.பெரும்பாலான தெலூரியம் உப்புகள் TeO2−3 அயனிகளைக் கொண்டுள்ளன. தெலூரசு அமிலத்தின் நீர்த்த கரைசலை ஐதரசன் பெராக்சைடுடன் சேர்த்து ஆக்சிசனேற்றம் செய்தால் தெலூரேட்டு அயனி உருவாகிறது. வலிமை குறைந்த அமிலம் என்பதால் பொதுவாக இது நீர்த்த அமிலமாகவே தயாரிக்கப்படுகிறது. இந்நிகழ்வில் ஒரு வலிமை குறைந்த அமிலமாக இது செயல்படுகிறது [1].
- H2TeO3 + H2O ⇄ H3O+ + HTeO−
3 Ka1 = 2 x 10−3
- HTeO−
3 + H2O ⇄ H3O+ + TeO2−
3 Ka2 = 1 x 10−8[3]
மேற்கோள்கள்
- Catherine E. Housecroft; Alan G. Sharpe (2008). "Chapter 16: The group 16 elements". Inorganic Chemistry, 3rd Edition. Pearson. பக். 524. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-13-175553-6.
- Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ). Butterworth–Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0080379419.
- http://www.austincc.edu/chemlab/weakacid