பெருங்குளம்

பெருங்குளம் (ஆங்கிலம்:Perungulam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

பெருங்குளம்
  பேரூராட்சி  
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தூத்துக்குடி
வட்டம் ஸ்ரீவைகுண்டம்
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, இ. ஆ. ப. [3]
மக்கள் தொகை 7,203 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
இணையதளம் www.townpanchayat.in/perungulam

இங்கு வரலாற்று புகழ் பெற்ற அருள்மிகு மாயக்கூத்தர் திருக்கோவில் மற்றும் அருள்மிகு திருவழூதீஸ்வரர் திருக்கோவில்கள் அமைந்துள்ளது. இதன் அருகமைந்த ஊர்கள்; கிழக்கில் ஏரல் 5 கிமீ, மேற்கில் ஸ்ரீவைகுண்டம் 10 கிமீ, வடக்கில் சாயர்புரம் 7 கிமீ, தெற்கில் மணவாளக்குறிச்சி 3 கிமீ. இதன் அருகமைந்த தொடருந்து நிலையம், 12 கிமீ தொலைவில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் உள்ளது.

20.48 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 122 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி ஸ்ரீவைகுண்டம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 1,766 வீடுகள் கொண்ட இப்பேரூராட்சியின் மக்கள்தொகை 7,203 ஆகும்[5][6]

சங்ககாலத்தில் பெருங்குளம்

  • சங்ககாலத்தில் இவ்வூர் பாண்டியர் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. கோவூர் கிழார் இவ்வூர் மக்களைக் குளக்கீழ் வாழ்நர் என்று குறிப்பிடுகிறார். இவர்கள் ஏர்த்தொழில் (நன்செய் வேளாண்மை) செய்துவந்தனர். இவர்களின் செல்வக் குடிமகள் தன் நெல்லைப் பண்டமாற்றாகத் தருவாளாம். வேட்டுவன் தன் நாயின் துணையோடு வேட்டையாடிக் கொண்டுவந்த மான் தசையைக் கொடுத்துவிட்டு நல்லைப் பெற்றுச் செல்வானாம். ஆயர் குடிப் பெண் மொந்தையில் கொண்டுவந்த தயிரைக் கொடுத்துவிட்டு நெல்லைப் பெற்றுச் செல்வாளாம்.[7]
  • பொதியமலை நாட்டில் திகழ்ந்த இந்த ஊரில் ஏழெயில் கதவம் என்னும் கோட்டை இருந்தது. இதனைச் சோழன் நலங்கிள்ளி கைப்பற்றித் தன் புலிச்சின்னத்தைப் பொறித்திருக்கிறான். அந்தப் புலிச்சின்னம் திறந்த வாயுள்ளதாக இருந்தது.[8]

சிறப்பம்சம்

இவ்வூரில், நவதிருப்பதிகளில் ஒன்றானதும், 108 திவ்ய தேசங்களில் ஒன்றானதுமான மாயக்கூத்த பெருமாள் எனும் பழைமையான வைணவத் திருக்கோயிலும்,[9] பழைமையான சிவபெருமான் திருக்கோயிலும் அமைந்துள்ளன.சிவபெருமான் திருக்கோயிலில், அம்பாள் சன்னதியில் திருவள்ளுவரின் சிலையும் உள்ளது.

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  4. பெருங்குளம் பேரூராட்சியின் இணையதளம்
  5. பெருங்குளம் பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
  6. Perungulam Town Panchayat
  7. கான் உறை வாழ்க்கை, கத நாய், வேட்டுவன்
    மான் தசை சொரிந்த வட்டியும், ஆய்மகள்
    தயிர் கொடு வந்த தசும்பும், நிறைய,
    ஏரின் வாழ்நர் பேர் இல் அரிவையர்
    குளக் கீழ் விளைந்த களக் கொள் வெண்ணெல் 5
    முகந்தனர் கொடுப்ப, உகந்தனர் பெயரும்
    தென்னம் பொருப்பன் நல் நாடு - புறநானூறு 33

  8. தென்னம் பொருப்பன் நல் நாட்டுள்ளும்,
    ஏழ் எயில் கதவம் எறிந்து, கைக்கொண்டு, நின்
    பேழ்வாய் உழுவை பொறிக்கும் ஆற்றலை; - புறநானூறு 33
  9. http://temple.dinamalar.com/New.php?id=573
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.