கழுகுமலை

கழுகுமலை (ஆங்கிலம்:Kalugumalai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். கழுகுமலையில் புகழ்பெற்ற கழுகுமலை வெட்டுவான் கோயில், கழுகுமலை முருகன் கோயில் மற்றும் கழுகுமலை சமணர் படுகைகள் அமைந்துள்ளது.

கழுகுமலை
  பேரூராட்சி  
கழுகுமலை
இருப்பிடம்: கழுகுமலை
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 9°09′N 77°43′E
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தூத்துக்குடிஅ
வட்டம் கோவில்பட்டி
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

14,738 (2011)

1,287/km2 (3,333/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

11.45 சதுர கிலோமீட்டர்கள் (4.42 sq mi)

105 மீட்டர்கள் (344 ft)

இணையதளம் www.townpanchayat.in/kalugumalai

கோவில்பட்டிக்கும், சங்கரன்கோவிலுக்கும் நடுவில் அமைந்த கழுகுமலை, தூத்துக்குடியிலிருந்து 20 கிமீ தொலைவிலும், கோவில்பட்டியிலிருந்து 14 கிமீ தொலைவிலும் உள்ளது.

11.45 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 94 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி கோவில்பட்டி (சட்டமன்றத் தொகுதி)க்கும், தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 4,208 வீடுகள் கொண்ட இப்பேரூராட்சியின் மக்கள்தொகை 14,738 ஆகும்[4][5]

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 9.15°N 77.72°E / 9.15; 77.72 ஆகும்.[6] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 105 மீட்டர் (344 அடி) உயரத்தில் இருக்கின்றது.

கோயில்கள்

இங்கு மூன்று முக்கிய கோயில்கள் உள்ளன. அவைகள் வெட்டுவான்கோயில், கழுகுமலை முருகன் கோயில் மற்றும் கழுகுமலை சமணர் படுகைகள் ஆகும்.

இது ஒரே கல்லில் செதுக்கப்பட்ட கலைநயம் மிக்க கோயில். பாண்டிய மன்னர்களால் 8ஆம் நூற்றாண்டில் இது கட்டப்பட்டது. அழகிய சிற்பங்களைக் கொண்ட இக்கோயில் முழுவதுமாக முடிக்கப்படவில்லை. பிற்காலத்தில் விநாயகர் இக்கோயிலில் பிரதிஷ்டை செய்து வணங்கப்படுகிறார்.[7]

வரலாறு

அரைமலை என்னும் பழம் பெயரைக்கொண்ட கழுகுமலையின் கிழக்கு பக்கம் வெட்டுவான் கோயிலும் அதன் அருகில் தென்புற மலையில் சமணதீர்த்தங்கரர் உருவங்களும் உள்ளன. வெட்டுவான் கோயில் எல்லோராவிலுள்ள கைலாசநாதர் கோயிலைப்போன்றது. இது ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. பெரிய மலைப்பாறையில் ஏறக்குறைய 7.5 மீட்டர் ஆழத்திற்கு சதுரமாக வெட்டிஎடுத்து அதன் நடுப்புறத்தை கோயிலாக செதுக்கியுள்ளனர். இது பாண்டிய மன்னனால் தோற்றுவிக்கபட்ட ஒற்றை கோயிலாகும். கோயிற்பணி முற்று பெறவில்லை. சிகரம் மட்டும் முற்றுப் பெற்றுள்ளது. இதில் கருவறையும் அர்த்த மண்டபமும் உள்ளன. சிற்ப வேலைபாடுகள் நிறைந்த இக்கோயிலிலுள்ள உமாமகேசுவரர், தட்சிணாமூர்த்தி, திருமால், பிரம்மா ஆகியோரின் சிற்ப வடிவங்கள் எழில் வாய்ந்தவை. விமானத்தின் மேற்பகுதியில் நரசிம்மரும் வடக்கில் பிரம்மனும் காட்சி தருகின்றனர். விமானத்தின் நான்கு மூலைகளிலும் நந்தி சிலைகளும் இவற்றுக்கு கீழ் யாளிவரியும் கபோதகமும் அமைந்துள்ளன.[8]

இங்குள்ள சமணர் படுகைகளில் தீர்த்தங்கரர்களின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. சமணர்கள் தங்கள் குரு, தாய், தந்தை, மகள் ஆகியோரின் நினைவாக இங்கு தீர்த்தங்கரர் சிற்பங்களை உருவாக்கியுள்ளனர். இச்சிற்பங்களின் கீழே அவற்றை உருவாக்கியவரின் பெயர் வட்டெழுத்தில் பொரிக்கப்பட்டுள்ளது. இங்கு சமணசித்தாந்தம் போதிக்கப்பட்டது. இச்சிற்பங்கள் பாண்டிய மன்னன் பராந்தக நெடுஞ்சடையன் காலத்தில் தோற்றுவிக்கபட்டவை.

படங்கள்

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. [ http://www.townpanchayat.in/kalugumalai பேரூராட்சியின் இணையதளம்]
  4. கழுகுமலை பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
  5. Kalugumalai Town Panchayat
  6. "Kalugumalai". Falling Rain Genomics, Inc. பார்த்த நாள் அக்டோபர் 20, 2006.
  7. http://www.tamilvu.org/tdb/tdbindex/tdbindex_04.htm கழுகு மலை வெட்டுவான் கோயில்
  8. http://www.tamilvu.org/tdb/tdbindex/tdbindex_04.htm கழுகு மலை, வெட்டுவான் கோயில்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.