கயத்தாறு வட்டம்
கயத்தாறு வட்டம், தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தின் 10 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும். [1]. கோவில்பட்டி வட்டம் மற்றும் ஒட்டப்பிடாரம் வட்டங்களின் 76 வருவாய் கிராமங்களைக் கொண்டு, 2016ல் கயத்தாறு வட்டம் நிறுவப்பட்டது.[2]
இவ்வட்டத்தின் வட்டாட்சியர் அலுவலகம் கயத்தாறில் இயங்குகிறது. கயத்தாறு வட்டம் 76 வருவாய் கிராமங்களைக் கொண்டுள்ளது.[3]
உள்வட்டங்கள்
கோவில்பட்டி வருவாய் கோட்டத்தில் அமைந்த கயத்தாறு வட்டம் செட்டிக்குறிச்சி, கடம்பூர், காமயநாயக்கன்பட்டி மற்றும் கயத்தாறு என நான்கு உள்வட்டங்களைக் கொண்டது.
மேற்கோள்கள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.