நந்தி மலை
நந்தி மலை இந்தியா, கர்நாடகத்தின் சிக்கபள்ளாபூர் மாவட்டத்திலுள்ள ஒரு மலை. தென் பெண்ணை , பாலாறு , ஆர்க்காவதி ஆறு போன்ற ஆறுகள் இந்த மலையிலிருந்து உற்பத்தியாகின்றன. சிக்கபள்ளாபூர் நகரத்திலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இம்மலை, பெங்களூரிலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
நந்தி மலை நந்தி | |
![]() நந்தி மலை தோற்றம் | |
அமைவிடம் | 13°23′11″N 77°42′03″E |
நாடு | ![]() |
மாநிலம் | கர்நாடகா |
மாவட்டம் | சிக்கபள்ளாபூர் |
அருகாமை நகரம் | பெங்களூர் |
ஆளுநர் | |
முதலமைச்சர் | |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
• 1,478 மீட்டர்கள் (4,849 ft) |
பெயர்க்காரணம்
.jpg)
நந்தி மலையில் உள்ள போக நந்தீசுவரர் கோயில்
நந்தி மலை என்னும் பெயர் ஏற்பட்டதற்கான காரணம் குறித்துப் பல கதைகள் உள்ளன. சோழர் காலத்தில் இம்மலை ஆனந்தகிரி என அழைக்கப்பட்டது. யோக நந்தீசுவரர் இங்கே தவம் செய்த காரணத்தால் இம்மலைக்கு நந்தி மலை எனப் பெயர் வந்தது என்று கூறுவதுண்டு. இம்மலை உச்சியில் சோழர்கள் கட்டிய போக நந்தீசுவரர் கோவில் உள்ளது. இம்மலை துயில்கொள்ளும் நந்தியின் உருவத்தில் இருப்பதால் இம்மலைக்கு நந்திமலை என்ற பெயர் ஏற்பட்டிருக்கலாம் என்ற கருத்தும் உண்டு.[1]
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
- அரசு இணைய தளம்
விக்கிப்பயணத்தில் Nandi Hills என்ற இடத்திற்கான பயண வழிகாட்டி உள்ளது. - The birds of Nandi hills
- Paragliding At Nandi Hills
- Nandi Hills
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.