அன்ஷி தேசியப் பூங்கா

அன்ஷி தேசியப் பூங்கா (ஆங்கிலம்: Anshi National Park) கர்நாடகம் மாநிலத்திலுள்ள வட கன்னட மாவட்டத்தில் அமைந்துள்ளது. பூங்காவின் சில பகுதிகள் கோவா மாநிலத்திற்கு உட்பட்டவை. இங்கு வங்கப் புலிகள், இந்திய யானைகள் போன்றவை மிகுதியாகக் காணப்படுகின்றன,

அன்ஷி தேசியப் பூங்கா
அன்ஷி தேசியப் பூங்காவிலுள்ள சாலை
அமைவிடம்கர்நாடகம், இந்தியா
ஆள்கூறுகள்15°1′0″N 74°23′0″E
பரப்பளவு340
நிறுவப்பட்டதுசெப்டம்பர் 2, 1987
நிருவாக அமைப்புமுதன்மை தலைமைக் கானகப் பாதுகாவலர் (காட்டுயிர்), கர்நாடகம்
அதிகாரபூர்வ வலைத்தளம்

புலிகள் பாதுகாப்புத் திட்டம்

இப்பூங்காவின் 340 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவு புலிகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் வருகிறது. இத்திட்டம் 2007 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அறிவிக்கப்பட்டது.[1]

அமைவிடம்

இப்பூங்காவானது மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது. இப்பூங்காவின் பகுதிகள் கடல் மட்டத்திலிருந்து 27–927 மீட்டர்கள் உயரம் கொண்டது.

மின் உற்பத்தி

இப்பூங்காவினுள் பல்வேறு நீர்மின் நிலையங்கள் மற்றும் நியூக்ளியர் மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளன.

மேற்கோள்கள்

  1. Rajendran, S (2007), Karnataka gets its fourth Project Tiger sanctuary, retrieved 6-3-2007 Check date values in: |accessdate= (help)

வெளி இணைப்புகள்

  • Map National Parks and Wildlife Sanctuaries of Karnataka
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.