கிருஷ்ணா ஆறு


கிருஷ்ணா ஆறு இந்தியாவின் மிக நீளமான ஆறுகளில் ஒன்றாகும். இந்த ஆறு ஏறத்தாழ 1,300 கி.மீ. நீளம் கொண்டது. மகாராஷ்டிரா, கர்நாடகம், மற்றும் ஆந்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களின் வழியாக கிருஷ்ணா ஆறு பாய்கிறது. மகாராஷ்டிராவிலுள்ள மகாபலேஷ்வர் என்ற இடத்தில் தொடங்கும் கிருஷ்ணா ஆந்திரப்பிரதேசத்திலுள்ள ஹேமசலதேவி என்ற இடத்தில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது. விஜயவாடா இவ்வாற்றின் கரையிலுள்ள மிகப்பெரிய நகரமாகும்.

கிருஷ்ணா
कृष्णा नदी, కృష్ణా నది, ಕೃಷ್ಣಾ ನದಿ
River
கிருஷ்ணா நதி மலையிடுக்கு ஸ்ரீசைலம், ஆந்திர பிரதேசம், இந்தியா.
நாடு இந்தியா
மாநிலங்கள் மஹாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம்
கிளையாறுகள்
 - இடம் பீமா, திண்டி, பெட்டவாகு, ஹலியா, முசி, பலேரு, முன்னேரு
 - வலம் வென்னா, கொயனா, பஞ்சங்கா, தூத்கங்கா, கட்டபிரபா, மாலபிரபா, துங்கபத்திரை
உற்பத்தியாகும் இடம் மஹாபலீஸ்வர்
 - உயர்வு 1,337 மீ (4,386 அடி)
 - ஆள்கூறு 17°55′28″N 73°39′36″E
கழிமுகம் வங்காள விரிகுடா
 - elevation 0 மீ (0 அடி)
 - ஆள்கூறு 15°57′N 80°59′E [1]
நீளம் 1,300 கிமீ (808 மைல்) தோராயமாக.
வடிநிலம் 2,58,948 கிமீ² (99,980 ச.மைல்)
Discharge for விஜயவாடா (1901-1979 சராசரி), அதிகபட்சம் (2009), குறைந்தது (1997)
 - சராசரி
 - மிகக் கூடிய
 - மிகக் குறைந்த
இந்தியாவின் முக்கிய ஆறுகள்
இந்தியாவின் முக்கிய ஆறுகள்

ஆற்றின் மூலம்

கிருஷ்ணா ஆறு மேற்குதொடர்ச்சி மலையில் உள்ள மகாராஷ்டிரா மாநிலம் சதாரா மாவட்டம் மகாபலேஷ்வர் என்னுமிடத்தில் சுமார் 1300 மீட்டர் உயரத்தில் உருவாகி கிழக்கு நோக்கி பாய்கிறது.

துணை ஆறுகள்

துங்கபத்திரை, கொய்னா, பீமா, மலபிரபா, கடபிரபா, யெர்லா, முஷி, துத்கங்கா, திந்தி ஆகியவை இதன் துணை ஆறுகளாகும்.

விஜயவாடா அருயே கிருஷ்ணா ஆறு

அணைகள்

ஸ்ரீசைலத்தில் கட்டப்பட்டுள்ள ஸ்ரீசைலம் அணை, நாகார்ஜுன சாகரில் கட்டப்பட்டுள்ள நாகார்ஜுன சாகர் அணை. நாகார்ஜுன சாகர் அணை மிகப்பெரியது ஆகும். கர்நாடகத்திலிருந்து ஆந்திர பிரதேசத்திற்கு நுழையும் இடத்தில் அலமட்டி அணை கட்டப்பட்டுள்ளது.

மேற்கோள்

  1. சியோநெட்டு (GEOnet) பெயர் வழங்கியில் இருந்து Krishna
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.