பாலக்காட்டு கணவாய்
பாலக்காட்டுக் கணவாய் (Palakkad Gap) மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் 30-40 கிமீ அகலத்தில் அமைந்த ஒரு கணவாய் ஆகும். இதுவே இம்மலைத் தொடரின் தாழ்வான பகுதி. இது கேரள மாநிலத்தின் பாலக்காட்டு நகருக்கு அருகில் உள்ளது.
பாலக்காட்டு கணவாய் (வாளையார்) | |
---|---|
![]() பாலக்காட்டு கணவாய் (வாளையார்) | |
நாடு | ![]() |
State | கேரளம் |
District | பாலக்காடு மாவட்டம் |
இக்கணவாய் இல்லையெனில் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் கேரள மாநிலத்தை தனிமைப் படுத்தியிருக்கும், இதுவே அருகிலுள்ள தமிழகத்துடன் இன்னும் குறிப்பாக கூறுவதானால் இந்திய நிலப்பரப்புடன் கேரளத்தை இணைக்கிறது.
இக்கணவாய் கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தையும் தமிழகத்தின் கோயம்புத்தூர் மாவட்டத்தையும் இணைக்கும் பாதையாக உள்ளது. இது கேரளாவின் முதன்மையான வணிக வழித்தடமும் ஆகும். சாலை வழியாக கேரளத்தை அடையும் பெருமளவிலான பொருட்கள் இக்கணவாய் வழியாகவே செல்லுகின்றன.
இக்கணவாய் தென்இந்தியாவின் தட்பவெப்பத்தில் சிறப்பான மாற்றத்தை உண்டுபண்ணுகிறது. இது ஈரப்பதம் நிறைந்த தென்மேற்கு பருவக்காற்று கோயம்புத்தூர் பகுதிக்கு வர உதவுகிறது. இக்காரணத்தால் கோயம்புத்தூர் பகுதி கோடை காலத்தில் தமிழகத்தின் மற்ற பகுதிகளை விட வெப்பம் குறைந்து காணப்படுகிறது.