தேனி மாவட்ட எழுத்தாளர்கள்
தேனி மாவட்டத்தில் பிறந்து, வெளியூர்களில் சென்று வசித்து வருபவர்கள் மற்றும், தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் பிறந்து, தேனி மாவட்டத்திற்கு வந்து வசித்து வருபவர்கள் என இரு நிலைகளில் தேனி மாவட்டத்திற்குப் பெயர் சேர்க்கும் வகையில் பல எழுத்தாளர்கள், கவிஞர்கள் இருக்கின்றனர். அவர்களில் குறிப்பிடத்தக்க சிலர் மட்டும் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளது.
எழுத்தாளர்கள் பட்டியல்
இந்திய அரசின் திரைப்பட விருது
இந்திய அரசு திரைப்படத் துறையில் பல்வேறு பங்களிப்பு செய்யும் சிறந்த கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் போன்றவர்களைத் தேர்வு செய்து தேசிய அளவிலான திரைப்பட விருதுகளை ஆண்டுதோறும் வழங்கி வருகிறது. தேனி மாவட்டத்தைச் சேர்ந்த கவிஞர் வைரமுத்து சிறந்த பாடலாசிரியருக்கான இந்திய அரசின் திரைப்பட விருதை ஆறு முறை பெற்றுள்ளார்
வ.எண். | பாடல் | திரைப்படத்தின் பெயர் | ஆண்டு |
---|---|---|---|
1 | பூங்காற்று திரும்புமா | முதல் மரியாதை | 1985 |
2 | சின்னச்சின்ன ஆசை | ரோஜா | 1992 |
3 | அ.) போறாளே பொன்னுத்தாயி ஆ.) உயிரும் நீயே | அ.) கருத்தம்மா ஆ.) பவித்ரா | 1994 |
4 | முதன் முறை கிள்ளிப் பார்த்தேன் | சங்கமம் | 1999 |
5 | விடை கொடு எங்கள் நாடே | கன்னத்தில் முத்தமிட்டால் | 2002 |
6 | கள்ளிக்காட்டில் பிறந்த தாயே | தென்மேற்கு பருவக்காற்று | 2010 |
சாகித்ய அகாதமி விருது
இந்திய அரசால், இருபத்து நான்கு இந்திய மொழிகளில் வெளியான சிறுகதை, புதினம், கவிதை, இலக்கிய விமர்சனம் போன்ற பலவகையான எழுத்தாக்கங்களுக்கு, ஒவ்வோர் ஆண்டும் வழங்கப்படும் உயரிய விருதான சாகித்திய அகாதமி விருது பெற்ற தேனி மாவட்டத்தைச் சேர்ந்த எழுத்தாளர்கள், நூல்கள் குறித்த தகவல்கள்.
வ.எண். | எழுத்தாளர் பெயர் | நூலின் பெயர் | பிரிவு | ஆண்டு |
---|---|---|---|---|
1 | கவிஞர் வைரமுத்து | கள்ளிக்காட்டு இதிகாசம் | புதினம் | 2003 |
2 | கவிஞர் மு. மேத்தா | ஆகாயத்திற்கு அடுத்த வீடு | கவிதை | 2006 |
கலைமாமணி விருது
தமிழ்நாடு அரசின் கலை மற்றும் பண்பாடு இயக்ககத்தின் கீழ் இயங்கும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் இலக்கியம், இசை மற்றும் நாடகத்துறையில் சிறப்பு மிக்கவர்களைத் தேர்வு செய்து ஆண்டுதோறும் கலைமாமணி விருதுகளை வழங்கி வருகிறது. கலைமாமணி விருது பெற்ற தேனி மாவட்டத்தைச் சேர்ந்த கவிஞர்கள் குறித்த தகவல்கள்.
வ.எண். | எழுத்தாளர் பெயர் | துறையின் பெயர் | ஆண்டு |
---|---|---|---|
1 | கவிஞர் நா.காமராசன் | திரைப்படப் பாடலாசிரியர் | 1985 |
2 | கவிஞர் வைரமுத்து | திரைப்படப் பாடலாசிரியர் | 1990 |
3 | கவிஞர் மு. மேத்தா | திரைப்படப் பாடலாசிரியர் | 1996 |
பாவேந்தர் பாரதிதாசன் விருது
பாவேந்தர் பாரதிதாசன் விருது என்பது தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் கீழ் இயங்கும் தமிழ் வளர்ச்சி இயக்ககம் மூலம் தமிழ்க் கவிஞர் ஒருவருக்கு ஆண்டு தோறும் வழங்கப்படும் ஒரு விருதாகும். பாவேந்தர் பாரதிதாசன் விருது பெற்ற தேனி மாவட்டத்தைச் சேர்ந்த கவிஞர்கள் குறித்த தகவல்கள்.
வ.எண். | எழுத்தாளர் பெயர் | ஆண்டு |
---|---|---|
1 | கவிஞர் நா.காமராசன் | 1984 |
2 | கவிஞர் மு. மேத்தா | 1986 |
3 | கவிஞர் வைரமுத்து | 1996 |
தமிழ்நாடு அரசின் சிறந்த நூலாசிரியர் விருது
தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் கீழ் இயங்கும் தமிழ் வளர்ச்சி இயக்ககம் 1972 முதல் ஆண்டுதோறும் தமிழில் வெளியான சிறந்த நூல்களை 33 வகைப்பாடுகளில் தேர்வு செய்து பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி வருகிறது. இப்பரிசினைப் பெற்ற தேனி மாவட்டத்தைச் சேர்ந்த எழுத்தாளர்கள், பரிசு பெற்ற நூல்கள் குறித்த தகவல்கள்.
வ.எண். | எழுத்தாளர் பெயர் | நூலின் பெயர் | வகைப்பாடு - பரிசு நிலை | ஆண்டு |
---|---|---|---|---|
1 | வே. தில்லைநாயகம் | 1. நூலக உணர்வு 2. வள்ளல்கள் வரலாறு | 1. அறவியல் - முதல் பரிசு 2. குழந்தை இலக்கியம் - முதல் பரிசு | 1.1971 - 1972 2. 1975 |
2 | கவிஞர் மு. மேத்தா | ஊர்வலம் | கவிதை - முதல் பரிசு | 1977 |
3 | நா. காமராசன் | மலையும் ஜீவ நதிகளும் | கவிதை - முதல் பரிசு | 1980 |
4 | மு. அப்பாஸ் மந்திரி | பொது அறிவுப் புதிர்கள் பாகம் 1 | குழந்தை இலக்கியம் - இரண்டாம் பரிசு | 1996 |
5 | முனைவர் இராசு. பவுன்துரை | தமிழக ஓவியக்கலை மரபும் பண்பாடும் | நுண்கலைகள் (இசை, ஓவியம், நடனம், சிற்பம்) - முதல் பரிசு | 2004 |
6 | எம். ராமச்சந்திரன் | காசோலைகள் | பொருளியல், வணிகவியல், மேலாண்மை - முதல் பரிசு | 2005 |
7 | தி. ச. சாமண்டிதாசு | ஏலக்காயைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ளலாமே | வேளாண்மையியல், கால்நடையியல் - முதல் பரிசு | 2005 |
8 | கள்ளிப்பட்டி. சு. குப்புசாமி | மருது சகோதரர்கள் | சிறுவர் இலக்கியம் - முதல் பரிசு | 2007 |
9 | அம்பை மணிவண்ணன் | பொற்றாமரை | சமயம்/ஆன்மிகம்/அளவையியல் - முதல் பரிசு | 2010 |
10 | தேனி எம். சுப்பிரமணி | தமிழ் விக்கிப்பீடியா | கணினியியல் - முதல் பரிசு | 2010 |
வெளி இணைப்புகள்
- தேனி மாவட்ட எழுத்தாளர்கள் (ஆங்கிலப் பட்டியல்)
- எழுத்தே எங்கள் சுவாசம்: தேனி மாவட்ட எழுத்தாளர்கள் (தினமலர்)