வத்தலக்குண்டு
வத்தலக்குண்டு (Batlagundu) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டத்தில் இருக்கும் ஒரு தேர்வுநிலை பேரூராட்சி ஆகும்.
இது மதுரை - கொடைக்கானல் செல்லும் வழியில், மதுரையிலிருந்து 56 கிமீ தொலைவிலும், திண்டுக்கல்லிருந்து 33 கிமீ தொலைவிலும் உள்ளது. இந்தப் பேரூராட்சி கோடைக்கானல் மலையடிவாரத்தில் உள்ளது.
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 22,928 மக்கள்தொகை கொண்ட இப்பேரூராட்சி, 12.94 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும், 169 தெருக்களும் கொண்டது. இப்பேரூராட்சியானது நிலக்கோட்டை (சட்டமன்றத் தொகுதி)க்கும், திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [1]
இங்கு வசிக்கும் பலர் பெரும்பாலும் வேளாண்மை சார்ந்த வர்த்தகம் செய்பவர்கள். வாழையிலை, தேங்காய் தூள் ஏற்றுமதி, காரட், முட்டைக்கோஸ், ப்ளம்ஸ், தரகு வர்த்தகம், பருத்தி நெய்தல் முதலான வியாபாரம் செய்பவர்கள் அதிகம்.
வத்தலகுண்டு | |
அமைவிடம் | 10°09′49″N 77°43′56″E |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திண்டுக்கல் |
வட்டம் | நிலக்கோட்டை |
ஆளுநர் | பன்வாரிலால் புரோகித்[2] |
முதலமைச்சர் | எடப்பாடி க. பழனிசாமி[3] |
மாவட்ட ஆட்சியர் | எம். விஜயலட்சுமி, இ. ஆ. ப. [4] |
மக்கள் தொகை | 22,938 (2011) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
இணையதளம் | http://http://www.townpanchayat.in/vathalagundu |
பெயர்க் காரணம்
வத்தலக்குண்டு என்பது மருவுப்பெயர். இது குன்றுப்பகுதி மற்றும் இங்கு வெற்றிலை அதிகம் விளைவதால் இந்த ஊரை "வெற்றிலைக்குன்று" என அழைத்து வந்தனர். கால போக்கில் அது மருவி வெத்தலைக்குண்டு எனவும் பிறகு வத்தலக்குண்டு எனவும் பெயர் பெற்றதாக அறியப்படுகிறது.
மக்கள் வகைப்பாடு
2011-ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, வத்தலகுண்டு பேரூரட்சியின் மொத்த மக்கள்தொகை 22,928 ஆகும். இதில் இந்துக்கள் 81.80%, கிறித்தவர்கள் 5.35%, இசுலாமியர்கள் 12.68%, மற்றவர்கள் 0.17% ஆகவுள்ளனர்.[5]
மண்ணின் மக்கள்
- விடுதலைப் போராட்டத் தியாகி சுப்பிரமணிய சிவா பெயரை, இங்குள்ள பேருந்து நிலையத்திற்கு வைத்து அரசு மரியாதை செய்திருக்கிறது.
- தமிழில் வெளிவந்த இரண்டாவது புதினமான கமலாம்பாள் சரித்திரம் என்ற நாவலை எழுதிய பி. ஆர். ராஜமய்யர் என்பவர் இங்குள்ள இரட்டைத் தெரு அக்ராஹரத்தில் உள்ள ஒரு வீட்டில் பிறந்து, மற்றொரு வீட்டில் வாழ்ந்து வந்தார்.
- மணிக்கொடி இதழின் ஆசிரியரும் சிறுகதை எழுத்தாளருமான பி. எசு. இராமையா.
- எழுத்து இதழின் ஆசிரியரும் எழுத்தாளருமான சி. சு. செல்லப்பாவின் அம்மா பிறந்த ஊராகும். இங்குதான் இவர் வளர்ந்தார்.
- திமுக முன்னாள் அமைச்சர் ஐ. பெரியசாமி
- டாக்டர் வே விஜயன் தமிழ் மொழி தியாகி
- தற்போதைய காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் ஞானதேசிகன் இந்த ஊரில்தான் பிறந்தார். இவர் பலமுறை பாராளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். இவர் சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஆவார்.
கோயில்கள்
- வத்தலக்குண்டு சென்றாயப் பெருமாள் கோயில்
- மாரியம்மன் கோயில்
- விசாலட்சி அம்மன் கோவில்
- பெருமாள் கோவில்
- ஆஞ்ச நேயர் கோவில்
திருமண மண்டபங்கள்
- துரை புஷ்பம் மஹால்
- டி. எஸ். எல். மஹால்
- வி. ஆர். மஹால்
- வேலு மஹால்
- ஜி. கே. மஹால்
இவற்றையும் பார்க்க
ஆதாரங்கள்
- வத்தலக்குண்டு பேரூராட்சியின் இணையதளம்
- "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- Batlagundu Population Census 2011