சிறுமலை

சிறுமலை, திண்டுக்கல்லுக்கு 25 கிலோமீட்டர்கள் (16 mi) அருகிலும், மதுரைக்கு 40 கிலோமீட்டர்கள் (25 mi) அருகிலும் அமைந்துள்ளது. இப்பகுதியில் நிறைய மலைக்குன்றுகள் உள்ளன.[1] இல்லாக் பன்னாட்டுப் பள்ளியும் இங்கே அமைந்துள்ளது.[2] ஆண்டுமுழுவதும் நடுத்தரமான சூழலில் இருக்கக் கூடிய காட்டுப் பகுதி. விதவிதமான செடிகளும் விலங்குகளும் வாழ்கின்றன. சிறுமலையில் விளையும் மலைவாழைப் பழங்கள் இனிப்பு மிகுந்தவை. மற்றும் புராணங்களில் கூறப்படும் அனுமன் இமயமலையை கையில் கொண்டு செல்லும் போது சிந்திய சிறு மண்ணே பிறகு சிறுமலை என உருவாகியது என அங்குள்ள மக்களால் கூறப்படுகிறது

சிறுமலை
சிறுமலை
உயர்ந்த இடம்
உயரம்1,600 m (5,200 ft)
புவியியல்
அமைவிடம்திண்டுக்கல் மாவட்டம், தமிழ் நாடு, இந்தியா
மலைத்தொடர்கிழக்குத் தொடர்ச்சி மலைகள்

திண்டுக்கல்லில் இருந்து நத்தம் செல்லும் சாலையில் 7 கி.மீ. சென்று வலதுபுறம் செல்லவேண்டும். மொத்தம் 18 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. செல்லும் வழியில் மலைமாதா கோவில் உள்ளது. இங்கு அரிய வகை மூலிகைகள் உள்ளன. எலுமிச்சம்பழம், வாழைப்பழம், பலாப்பழம் அதிகமாக விளைகின்றன. இங்கு எப்போதும் இதமான சூழ்நிலை நிலவுகிறது. சிறுமலை வாழைப்பழம் பழனி முருகன் கோவிலுக்கு பஞ்சாமிர்தம் செய்ய பயன்படுத்துகிறார்கள். இங்கு அரிய விலங்குகள் மற்றும் பறவைகள் உள்ளன.

மேற்கோள்கள்

  1. "Low profile heat buster". The Hindu (Chennai, India). 2004-05-22. http://www.hindu.com/mp/2004/05/22/stories/2004052200010100.htm. பார்த்த நாள்: 2009-11-14.
  2. "Location". hillockinternationalschool.com. பார்த்த நாள் 2009-11-14.

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.