ந. முத்து விஜயன்
ந. முத்து விஜயன் (பிறப்பு: சூலை 26, 1958) என்பவர் ஒரு தமிழ் எழுத்தாளர். தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் எனும் ஊரில் பிறந்து, இங்குள்ள பள்ளி ஒன்றில் முதுகலைப் பட்டதாரி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். இவர் தமிழ்நாட்டில் வெளியாகும் அச்சிதழ்களில் கட்டுரைகள், சிறுகதைகள் போன்றவற்றை எழுதியிருக்கிறார். மதுரை வானொலியின் வானொலி நாடகங்களில் நடிகராகக் குரல் கொடுக்கும் பணியையும் செய்து வருகிறார்.
ந. முத்து விஜயன் | |
---|---|
பிறப்பு | ந. முத்து விஜயன் சூலை 26, 1958 போடிநாயக்கனூர், தேனி மாவட்டம், தமிழ்நாடு, ![]() |
இருப்பிடம் | போடிநாயக்கனூர், தேனி மாவட்டம் |
தேசியம் | இந்தியர் |
மற்ற பெயர்கள் | முத்து விஜயன் |
கல்வி | முதுகலை (வணிகவியல்) பட்டம், முதுகலை (இதழியல்) பட்டம், இளங்கலை (கல்வியியல்) பட்டம், |
பணி | ஆசிரியர் |
அறியப்படுவது | எழுத்தாளர் |
சமயம் | இந்து |
பெற்றோர் | ஆ. தி. நல்லகாமாட்சி பிள்ளை (தந்தை), ஆவடையம்மாள் (தாய்) |
வாழ்க்கைத் துணை | கலைச்செல்வி |
பிள்ளைகள் | புவனரட்சாம்பிகை (மகள்) |
உறவினர்கள் | சகோதரர் - 2, சகோதரி - 1 |
வெளியான நூல்கள்
- வாழ்வில் ஒரு திருநாள் (வானொலி நாடகங்கள்) - 2009
- பால உதயம் (சிறுவர் நாடகம்) - 2011
விருது
- தமிழ்நாடு அரசின் தேனி மாவட்டப் பொது நூலகம் மூலம் 2010 ஆம் ஆண்டுக்கான நாடக நடிகருக்கான “கலை - இலக்கிய சாதனையாளர் விருது” வழங்கப்பட்டது.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.