இராசு. பவுன்துரை

இராசு. பவுன்துரை (பிறப்பு: ஜனவரி 6, 1953 - மார்ச் 19 2014) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். தேனி மாவட்டம் தேவாரம் எனும் ஊரில் பிறந்து தஞ்சாவூரில் தற்போது வசித்து வருகிறார். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் முனைவர் பட்டம் பெற்ற இவர் நூற்று முப்பதுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை வழங்கியவர். ஐம்பதுக்கும் மேற்பட்ட கருத்தரங்குகளை நடத்தியவர். தமிழகப் பாறை ஓவியங்கள், அருங்காட்சியகவியல், கும்பகோணம் மகாமகத் திருவிழா முதலான 11 நூல்களை வெளியிட்டவர். அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, இந்தோனேசியா, சிங்கப்பூர், ஹாங்காங், தென்கொரியா, போர்ச்சுக்கல், இலங்கை போன்ற நாடுகளில் கல்வி மற்றும் ஆய்வுப் பயணங்களை மேற்கொண்டவர். இவர் எழுதிய "தமிழக ஓவியக்கலை" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2004 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் நுண்கலைகள் (இசை, ஓவியம், நடனம், சிற்பம்) எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

இவரது நூல்கள்

  1. தமிழகப் பாறை ஓவியங்கள்(1986)
  2. அருங்காட்சியகவியல்(1990)
  3. கும்பகோணம் மகாமகத் திருவிழா(1991)
  4. மனோரா(1995)
  5. Manora : Maritime History and Architecture(1996)
  6. தமிழகப் பாறை ஓவியங்கள்(2000)
  7. பன்னாட்டுத் தமிழரும் பண்பாடும்(2000)
  8. இந்திய அருங்காட்சியகங்கள்(2004)
  9. தமிழக நாட்டுப்புறக் கட்டடக்கலை மரபு(2004)
  10. பெங்சுய் : சீனக் கட்டடக்கலைமரபும் தொழில்நுட்பமும்(2004)
  11. செட்டிநாட்டுக் கட்டடக்கலை மரபு(2004)
  12. தமிழக ஓவியக்கலை மரபும் பண்பாடும்(2004)
  13. மகாமகம் மலர் (பதி) தமிழக அரசு வெளியீடு (2004)
  14. தமிழகக் கட்ட்டக்கலை மரபு: மயன் அறிவியல் தொழில்நுட்ப மரபு(2004)
  15. தமிழகக் கோயிற் கட்டடக்கலை மரபு: தூண்கள்(2005)
  16. முல்லைநிலத்து முகங்கள்(2005)
  17. பண்டைத் தமிழர் வரைவுகளும் குறியீடுகளும்(2005)
  18. தஞ்சை இராஜராஜீஸ்வரம் திருக்கற்றளி விமானக் கட்டடக் கலை மரபு(2010)
  19. தமிழர் கலை வரலாற்றில் பேரறிஞர் அண்ணா
  20. தமிழகக் கலம்காரி ஓவியக்கலை மரபு
  21. சிந்து சமவெளி நாகரிகமும் திராவிடக் கட்டடக்கலை மரபும்
  22. தமிழகப் பொற்கோயில்கள்
  23. தமிழகப் பெருங்கற்காலம் கட்டடக்கலை மரபு
  24. தமிழர் குடியேற்றங்களும் கட்டடக்கலைத் தொழில்நுட்ப வரலாறும்
  25. தமிழகத் திருக்குளங்களும் கட்டடக்கலை மரபும்
  26. கம்பம் பள்ளத்தாக்கு வரலாறு
  27. தமிழர் வரலாற்றில் சின்னமனூர்
  28. தமிழகக் கோயில் விமானக் கட்டடக்கலை மரபு
  29. Tamil Cultural Connections with South Korea
  30. Indian Architectural Traditions with south East Asia
  31. Korean studies in India
  32. Tamil Cultural Connections with China
  33. Tranquebar Fort - Danish Maritime History and Architecture
  34. Maritime Architectural Heritage in Tamil Nadu

ஆதாரம்

  • தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் முனைவர் கா. மு. சேகர் அவர்களது திருவள்ளுவராண்டு 2043/கார்த்திகை 28, ந. க. எண். ஆமொ2/10268/2012, நாள்: 13-12-2012 கடிதம் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவில் வெளியிடுவதற்காக தேனி. மு.சுப்பிரமணிக்கு வழங்கிய தமிழ் வளர்ச்சி - சிறந்த நூல்களுக்கான பரிசுகள் பட்டியல்.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.