உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் தமிழ், தமிழர் தொடர்பாக நுண்ணிய திறனாய்வுகளை முதன்மையாக மேற்கொண்டுவரும் நிறுவனங்களில் ஒன்று ஆகும். இது 1968 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இது சென்னை தரமணியில் அமைந்துள்ளது.

"உலகத் தமிழாராய்ச்சி நிறுவன நோக்கும் போக்கும் மற்ற தமிழாய்வு நிறுவனங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட நிலையில் உருவாக்கப்பட்டதாகும். இந்தியாவின் பிற மொழி மாநிலங்களில் - உலகிலுள்ள பிற நாடுகளில் நடைபெறும் தமிழாராய்ச்சிக்கான மையமாக இவ்வமைப்பு இயங்க வேண்டும் என்பது அடித்தளக் கோட்பாடாகும்."
போட்டிகள்
2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி ஊடகத்துறை மாணவர்களுக்கு குறும்பட போட்டியை நடத்துகிறது. [1]
சுவடியியல் பாதுகாப்பு மையம்
2014 ஆம் ஆண்டு, "தமிழ்நாடு முழுவதும் கண்டறியப்படும் சுவடிகள், தாள் சுவடிகள் மற்றும் அரிய நூல்கள் அனைத்தையும்" பாதுகாக்கும் வண்ணம் சென்னை தரமணியில் சுவடியியல் பாதுகாப்பு மையம் தொடங்கப்பட்டது.[2]
இயக்குநர்கள்
- கி. மீனாட்சிசுந்தரம் (1968 - 1972)
- ச. வே. சுப்புரமணியன் ( 1972 - 1985)
- ஏ. என். பெருமாள் (1986 - 1987)
- க. த. திருநாவுக்கரசு (1988 - 1989)
- சு. செல்லப்பன் (1989 - 1991)
- அன்னி மிருதுளாகுமரி தாமசு (1991 - 1994)
- இராமர் இளங்கோ (1994 - 2001)
- எசு. கிருட்டிணமூர்த்தி (2002 - 2005)
- ம. இராசேந்திரன் (சூன் 2006 - திசம்பர் 2007)
- சீன் லாரன்சு (பொறுப்பு)
- கரு. அழ. குணசேகரன் (2008 - 2011)
- கோ. விசயராகவன் (2012- )