கலை இலக்கியா
கலை இலக்கியா (இறப்பு: 06 மே 2019) என்பவர் தமிழகத்தைச் சேர்ந்த ஓர் பெண் எழுத்தாளர் மற்றும் கவிஞர் ஆவார். இவரது இயற்பெயர் ச. இந்திரா ஆகும். தன்னுடைய மாணவப் பருவத்திலிருந்தே கவிதைகள் எழுதுவதில் ஆர்வம் கொண்ட கலை இலக்கியா, சிற்றிதழ்கள் வழியாக எழுத்தாளராகப் பரிணமித்தவர். இவர் கட்டுரையாளர், கவிஞர் மற்றும் சிறுகதையாளராக அறியப்படுகிறார். தேனி மாவட்டம், ஜெயமங்கலம் ஊரைச் சேர்ந்த இவர் திருமணத்திற்குப் பிறகு, தேனி மாவட்டம், வீரபாண்டி எனும் ஊரில் கணவருடன் வசித்து வருகிறார். தமிழில் வெளியாகும் பல சிற்றிதழ்களில் இவரது கவிதை மற்றும் கட்டுரைகள் வெளியாகியிருக்கின்றன. தமிழகத்தில் முக்கியப் பெண் கவிஞர்களில் இவரும் ஒருவர். இவர் மே 6, 2019 அன்று உடல் நலக்குறைவால் காலமானார்.[1]
கலை இலக்கியா | |
---|---|
பிறப்பு | ச. இந்திரா ஜெயமங்கலம், பெரியகுளம் வட்டம், தேனி மாவட்டம், தமிழ்நாடு, ![]() |
இறப்பு | மே 06, 2019 |
இறப்பிற்கான காரணம் | உடல் நலக்குறைவு |
இருப்பிடம் | வீரபாண்டி, தேனி, தமிழ்நாடு, இந்தியா |
தேசியம் | இந்தியர் |
அறியப்படுவது | எழுத்தாளர் |
சமயம் | இந்து |
பெற்றோர் | இ. சன்னாசி (தந்தை), அன்னகாமு (தாய்) |
வாழ்க்கைத் துணை | சி. காமுத்துரை |
பிள்ளைகள் | சிவபாரதி (மகன்), இராஜேஸ் கபிலன்(மகன்) |
உறவினர்கள் | மூன்று சகோதரர்கள் |
எழுதியுள்ள நூல்கள்
- இமைக்குள் நழுவியவள் (கவிதைகள்)
- பிரம்ம நிறைவு (கவிதைகள்)
- படிக்க பின்பற்ற காதலும் வீரமும் (கட்டுரைகள்)
- என் அந்தப்புரத்திற்கு ஒரு கடவுளைக் கேட்டேன் (கவிதைகள்)
மேற்கோள்கள்
- ""பைக்ல சென்னையைச் சுத்திப்பார்ப்போம் ஹேமா!" கவிஞர் கலை இலக்கியாவின் நிறைவேறாத ஆசை". விகடன் (07 மே, 2019)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.