வி. எஸ். வெற்றிவேல்
வி. எஸ். வெற்றிவேல் என்பவர் தமிழக எழுத்தாளர். சிவகங்கை மாவட்டம், பழையனூரில் பிறந்த இவர், தேனி மாவட்டம், வடுகபட்டியில் படித்து, தற்போது தேனியிலுள்ள அரசு வங்கி ஒன்றில் சிறுசேமிப்புத் துறை முகவராகப் பணிபுரிந்து வருகிறார். பள்ளியில் படிக்கும் காலத்திலிருந்தே கவிதைகள் எழுதத் தொடங்கிய இவர், மேடை நாடகங்களுக்கான கதை, வசனம், பாடல் போன்றவைகளை எழுதி தேனியில் பல மேடை நாடகங்களை அரங்கேற்றியுள்ளார். சில திரைப்படங்களில் துணை வேடங்களிலும் நடித்திருக்கிறார்.
வெ. ச. வெற்றிவேல் | |
---|---|
பிறப்பு | வெ. ச. வெற்றிவேல் மே 3, 1955 பழையனூர், சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு, ![]() |
இருப்பிடம் | பழனிசெட்டிபட்டி, தேனி |
தேசியம் | இந்தியர் |
மற்ற பெயர்கள் | தேனி வி.எஸ்.வெற்றிவேல் |
கல்வி | பதினொன்றாம் வகுப்பு |
பணி | சிறுசேமிப்பு முகவர் |
பணியகம் | யூனியன் பாங்க் ஆப் இந்தியா |
அறியப்படுவது | கவிஞர், எழுத்தாளர் |
சமயம் | இந்து |
பெற்றோர் | பெரியசாமி என்ற வெ. சங்கையா (தந்தை), லட்சுமி (தாய்) |
வாழ்க்கைத் துணை | மகேசுவரி |
பிள்ளைகள் | கௌரிசங்கரி (மகள்), ராமச்சந்திரன் (மகன்) |
உறவினர்கள் | சகோதரர்கள் -2, சகோதரி -1 |
வெளியான நூல்கள்
விருதும் சிறப்பும்
இவர் எழுத்தாக்கத்திற்காக சில விருதுகளையும் பட்டங்களையும் பெற்றிருக்கிறார்.
- எம்.ஜி.ஆர் விருது - 1996
- கவியரசு கண்ணதாசன் இலக்கிய விருது
- நாடக உலக மார்க்கண்டேயன் - சிறப்புப் பட்டம்
- காட்டாற்றுக் கவிஞர் - சிறப்புப் பட்டம்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.