வதிலை பிரபா

வதிலை பிரபா (பிறப்பு: மார்ச் 4, 1966)ஒரு தமிழ் எழுத்தாளர் மற்றும் தமிழ்க் கவிஞர். தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் அருகிலுள்ள போ.அணைக்கரைப்பட்டி எனும் ஊரைச் சொந்த ஊராகக் கொண்டிருந்தாலும், தான் வசித்து வரும் ஊரான திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு எனும் ஊரின் சுருக்கப் பெயரான வதிலையை தன் பெயருக்கு முன்னால் இணைத்துக் கொண்டுள்ளார். இவர், இதுவரை 300க்கும் மேற்பட்ட கவிதைகளையும், 250க்கும் மேற்பட்ட ஹைக்கூ கவிதைகளையும், 20 க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், ஏராளமான கட்டுரைகளையும், விமர்சனங்களையும் எழுதியுள்ளார். இவர் “யார் குற்றவாளி?” எனும் குறும்படம் ஒன்றையும் இயக்கியுள்ளார். “வரலாறு” பாடத்தில் முதுகலைப்பட்டமும், இதழியல் மற்றும் மக்கள் தகவல் தொடர்பியலில் முதுகலைப்பட்டமும் பெற்றிருக்கும் இவர் மகாகவி (சிற்றிதழ்) எனும் சிற்றிதழை நடத்தி வருகிறார். உலகத் தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்கத்தில் 1997 முதல் 2005 வரை பொதுச் செயலாளராகவும், 2005 முதல் அதன் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார்.

வதிலை பிரபா
பிறப்புப. பிரபாகரன்
மார்ச் 4, 1966
போ. அணைக்கரைப்பட்டி,
தேனி மாவட்டம்,
தமிழ்நாடு,
 இந்தியா.
இருப்பிடம்வத்தலக்குண்டு, திண்டுக்கல் மாவட்டம்
தேசியம்இந்தியர்
மற்ற பெயர்கள்வதிலை பிரபா
கல்விமுதுகலைப் பட்டம் (வரலாறு),
முதுகலைப் பட்டம் (இதழியல்)
பணிபதிப்பாளர்
அறியப்படுவதுஎழுத்தாளர், பதிப்பாளர்
சமயம்இந்து
பெற்றோர்இரா. பரமசிவன் (தந்தை),
இராஜம்மாள் (தாய்)
வாழ்க்கைத்
துணை
சண்முகதேவி
பிள்ளைகள்ஓவியா (மகள்),
இமையா (மகள்)
வலைத்தளம்
www.mahakavi.in

வெளியான நூல்கள்

  • தீ (ஹைக்கூ தொகுப்பு)
  • குடையின் கீழ் வானம் (ஹைக்கூ தொகுப்பு)
  • குரும்பை (சிறுகதைத் தொகுப்பு)
  • மெல்லப் பதுங்கும் சாம்பல்நிறப் பூனை (ஹைக்கூ, தமிழ் - ஆங்கிலம்)
  • ஹைக்கூ உலகம் (ஹைக்கூ தொகுப்பு)
  • மரம் சுமக்கும் யானைகளின் பிளிறல் (கவிதை)
  • மிடறு மிடறாய் மௌனம் (கவிதை)

விருதுகள்

இவர் இலக்கியப் பங்களிப்புகளுக்காக கீழ்காணும் சில விருதுகளையும் பெற்றுள்ளார்.

  • தமிழ்நாடு அரசு "தமிழ்ச் செம்மல்" விருது
  • இலக்கிய சாதனையாளருக்கான மகாகவி பாரதி விருது
  • இலக்கியச் சிற்பி
  • கண்ணியச் செம்மல்
  • சிற்றிதழ் சிற்பி
  • கவிச்சுடர்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.