சென்னை கிறித்துவக் கல்லூரி
சென்னைக் கிறித்தவக் கல்லூரி (Madras Christian College) சென்னையிலுள்ள கலைக்கல்லூரிகளில் ஒன்று. 1837ஆம் ஆண்டு துவக்கப்பட்ட இக்கல்லூரி ஆசியாவின் பழம்பெரும் கல்லூரிகளில் ஒன்று. தாம்பரத்தில் இக்கல்லூரியின் வளாகம் அமைந்துள்ளது. இது சென்னைப் பல்கலைகழகத்துடன் இணைவுப்பெற்றக் கல்லூரியாகும். இந்தியா டுடே இதழின் கணிப்பின்படி 2007 முதல் இந்தியாவில் உள்ள கல்லூரிகளில் கலை அறிவியல் மற்றும் வணிகவியல் துறைகளில் தலைசிறந்த பத்து கல்லூரிகளில் ஒன்றாக இடம் பெற்றுள்ளது.
சென்னைக் கிறித்தவக் கல்லூரி | |
---|---|
![]() | |
குறிக்கோள்: | In Hoc Signo (இதனைக் கொடியாகக் கொண்டு, நீ வெற்றி பெறுவாய்) |
நிறுவல்: | 1837 |
வகை: | தனியார் சிறுபான்மை கல்வி நிறுவனம் |
முதல்வர்: | முனைவர். ஆர். டபிள்யு. அலெக்சாண்டர் ஜேசுதாசன் |
பீடங்கள்: | 220 (முழு நேரம்) |
மாணவர்கள்: | 8500 |
அமைவிடம்: | சென்னை, தமிழ் நாடு, இந்தியா |
வளாகம்: | புறநகர் (தாம்பரம்), 375 ஏக்கர் |
இணையத்தளம்: | mcc.edu.in |
சென்னைக் கிருத்துவக் கல்லூரியில் 6 மாணவ மாணவிகள் தங்கும் விடுதி செயல்பட்டு வருகிறது . இக்கல்லூரியில் இவ்விடுதிகளை " இல்லம் " என தமிழில் அழைப்பர் . ஆங்கிலத்தில் இதனை " ஹால் " என்று அழைப்பார்கள் . சேலையூர் இல்லம் , புனித தோமையார் இல்லம் , பிஷப் ஹீபர் இல்லம் , மார்ட்டின் இல்லம் , மார்கரெட் இல்லம் மற்றும் பார்ன்ஸ் இல்லம் என 6 இல்லங்கள் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என தனி தனியாக இயங்கி வருகிறது .