சங்கரன் குடியிருப்பு

சங்கரன் குடியிருப்பு தமிழ்நாடு, தூத்துக்குடி மாவட்டத்தில், ஸ்ரீவைகுண்டம் தொகுதியில், சாத்தான்குளம் வட்டத்தில், புதுக்குளம் ஊராட்சியின் தென்கடைசியில் அமைந்துள்ள ஓர் இயற்கை சூழ்ந்த கிராமம் ஆகும்.

சங்கரன் குடியிருப்பு
  கிராமம்  
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தூத்துக்குடி
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, இ. ஆ. ப. [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

இவ்வூர் திருசெந்தூரிலிருந்து சாத்தான்குளம் வழியாக நாகர்கோவில் வழி தடத்தில் சாத்தான்குளத்திலிருந்து 9 கிலோ மீட்டர் தூரத்தில் ஆலங்கிணறு விலக்கிற்கும் இட்டமொழி என்ற ஊர்க்கும் இடையில் அமைந்துள்ளது. இந்த ஊரின் அடையாளமாக அங்கு சாலையின் மேற்கு பகுதியில் தெற்கே ஒரு மாதா கோவிலும், வடக்கே ஒரு முனீஸ்வரரின் கோயிலும் எல்லையிலே நிறுவப்பட்டுள்ளன. இந்த இடத்திலிருந்து 0.6 கிமீ நடந்து சென்றால் ஊரை அடையலாம்.

இந்த ஊரில் அய்யாவழி மக்கள் மற்றும் இந்துக்கள், தென்னிந்திய திருச்சபை கிறித்தவர்கள், ரோமன் கத்தோலிக்க கிறித்தவர்கள், பெந்தேகோஸ் சபை கிறித்தவர்கள் எனப் பல மதத்தினரும் நாடார்கள், கோனார்கள், வண்ணார் மற்றும் குறவர்கள் என பல இனத்தவரும் வாழ்கின்றனர்.

கோவில்கள்

இந்த ஊரில் ஜந்து நிழல்தாங்க்ல்களும்,ஒரு அம்மன் கோவிலும்,ஒரு ரோமன் கத்தோலிக்க சர்சும்,ஒரு தென்னிந்திய திருச்சபை மற்றும் பிள்ளையார் கோவில் ஒன்றும், சந்தி அம்மன் கோவில் ஒன்றும்,பெந்தேகோஸ் சபை இரண்டும் உள்ளது.

பள்ளிகள்

இங்கு T.D.T.A துவக்கப்பள்ளி உள்ளது. மேல்நிலைபள்ளி படிப்பிற்கு அருகில் உள்ள திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த இட்டமொழி ஊருக்குச் செல்ல வேண்டும் அல்லது சாத்தான்குளம் செல்ல வேண்டும்.

மருத்துவமனை

சுவாமி விவேகானந்தா ஆசிரமம் சார்பில் சுவாமி விவேகானந்தா மருத்துவமனை வாரதில் மூன்று நாட்கள் நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.