குலசேகரன்பட்டினம்

அமைவிடம்

திருச்செந்தூர் - கன்னியாகுமரி செல்லும் சாலையில் அமைந்த குலசேகரன்பட்டினம் உடன்குடிக்கு கிழக்கே 5 கிமீ தொலைவிலும், திருச்செந்தூருக்கு தெற்கே 18 கிமீ தொலைவிலும், கன்னியாகுமரிக்கு வடக்கே 20 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.

தொழில்கள்

இங்கு கடல் மீன் பிடித்தலே முக்கியத் தொழில். இங்கு புதிய அனல் மின் நிலையம் ஒன்று கட்டப்பட்டுகிறது. 760 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தினில் இது கட்டப்படுகிறது தமிழ் நாடு மின்சார வாரியமும், பாரத மிகு மின் நிறுவனமும் (பெல்) இணைந்து 2x800 மெகாவாட் மிக உய்ய அனல் மின் திட்டம் ஒன்றை, உடன்குடி பவர் கார்ப்பரேசன் லிட் (Udangudi Power Corporation Ltd) என்ற பெயரில் உடன்குடி கிராம எல்லைக்குட்பட்டு, குலசேகரபட்டிணத்தின் நுழைவில் அமைக்கப்படவுள்ளது. ஆரம்ப வேலைகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. திட்ட மதிப்பீடு ரூ.8694 கோடி; முடிவடைந்து பயனுக்கு வரும் காலம் 2015. இதற்காக கடல் நீரை சுத்திகரிக்கும் நிலையம் ஒன்றும் இங்கு கட்டப்படவுள்ளது. இந்த நீரைக் கொண்டு இயந்திரங்கள் குளிர்விக்கப்படும். மேலும் இந்த மின் நிலையம் நிலக்கரியின் எரி சக்தியால் இயங்கப் படவுள்ளதால், கப்பல்கள் மூலம் நிலக்கரி கொண்டு வரப்பட்டு அனல் மின் நிலையத்திற்கு கன்வேயர் பெல்ட்டுகள் மூலம் கொண்டு வர திட்டம். இதற்காக கடலுக்குள் 7 கி.மீ தொலைவில் ஒரு நிலக்கரி கப்பல்துறை கட்டப்படவுள்ளது. ராட்சத மின் இயந்திரங்கள் பெல் நிறுவனத்தில் இருந்து தயாரிக்கப்பட்டுக் கொண்டு வரப்படுகிறது. இந்த திட்டத்தால் கடல் வாழ் உயிரினங்களுக்கு எந்த ஆபத்துமில்லை என திட்ட அறிக்கைகள் கூறுகின்றன.

ராக்கெட் ஏவுதளம்

இந்திய விண்வெளி அமைப்பு, குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க வேண்டும் என்று தமிழகத்தில் பல தரப்பினர் இந்திய நடுவண் அரசை வற்புறுத்தி வருகின்றனர். [3]தற்போது இஸ்ரோ நிறுவனம் குலசேகரன்பட்டினத்தின் இராக்கெட் ஏவுதளம் அமைக்க முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.[4][5]

கோயில்

நவராத்திரி திருவிழாவுக்குப் பெயர் பெற்ற குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவில் இவிடத்தில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.