ஏ. ஆர். ரகுமான்
அ. இர. ரகுமான் (அல்லா இரக்கா இரகுமான், பிறப்பு: ஜனவரி 6, 1966), புகழ் பெற்ற இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இந்தி, தமிழ், ஆங்கிலம் போன்ற பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்த இவர் இசைப்புயல் என அழைக்கப்படுகிறார். ஆஸ்கார் விருது, கோல்டன் குளோப் விருது , பாஃப்டா விருது , தேசியத் திரைப்பட விருது போன்ற புகழ் பெற்ற விருதுகளைப் பெற்றவர். ஹாலிவுட் திரைப்படமான ஸ்லம் டாக் மில்லியனியர் என்ற ஆங்கிலத் திரைப்படத்திற்கு இசையமைத்தமைக்காக ஆஸ்கார் விருதுகளை வென்றிருக்கிறார். மேலும் இத்திரைப்பட இசைக்காக இவருக்கு 2008 ஆம் ஆண்டுக்கான கோல்டன் குளோப் விருதும் , பாஃப்டா விருதும் கிடைத்தன. இவ்விரு விருதுகளைப் பெற்ற முதலாவது இந்தியரும் இவரேயாவார். இவருக்கு 2010-ஆம் ஆண்டில் இந்திய அரசின் பத்ம பூசண் விருது அளிக்கப்பட்டது. இவர் ஆசியாவின் மொசார்ட் என்றும் அழைக்கப்படுகிறார்[1].
அ. இர. ரகுமான் | |
---|---|
![]() | |
பின்னணித் தகவல்கள் | |
இயற்பெயர் | ஏ.சே.திலீப்குமார் |
பிறப்பு | சனவரி 6, 1966 |
பிறப்பிடம் | சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
இசை வடிவங்கள் | திரைப்பட, மேடை இசை |
தொழில்(கள்) | இசையமைப்பாளர், இசை தயாரிப்பாளர், இசை இயக்குனர், பாடகர், இசைக்கருவி இசைப்பவர், நிரலாக்கர் |
இசைக்கருவி(கள்) | மின்னணு இசைப்பலகை (கீபோர்டு), குரலிசை, கிட்டார், பியானோ, ஆர்மோனியம், தாளம், ஏனைய |
இணைந்த செயற்பாடுகள் | சூப்பர்ஹெவி |
இணையதளம் | அலுவல்முறை இணையத் தளம் |
[2009] ஆம் ஆண்டு 81ஆம் ஆஸ்கார் விருதுகளுக்காக அமைத்த மாபெரும் மேடையில் அவரது தாய் மொழியான தமிழில் 'எல்லாப் புகழும் இறைவனுக்கே' என்று அவர் அடிக்கடி உச்சரிக்கும் மந்திரச் சொல்லைப் பாடினார்.[2] 2017 ஆம் ஆண்டு இவருக்கு தமிழ் ரத்னா விருது வழங்கி அமெரிக்கா தமிழ் சங்கம் கவுரவித்துள்ளது.[3]
வாழ்க்கைக் குறிப்பு
ரகுமான் 1966 சனவரி 6 ஆம் திகதி தமிழ்நாட்டில் சென்னையில் பிறந்தவர். அருணாச்சலம் சேகர் திலீப் குமார் என்பது இவரது இயற்பெயர் ஆகும். இசையுலகப் பயணத்தை 1985 இல் ஆரம்பித்தார். இவரின் குடும்பம் இசை சார்ந்தது. இவரின் தந்தை சேகர் மலையாளத் திரைப்படத்துறையில் பணியாற்றியவர். சிறு வயதிலேயே தந்தையை இழந்தார். அதன் பின் குடும்பத்தில் வருமானம் இல்லாத நிலையில் தன் தந்தையின் இசைக்கருவிகளை வாடகைக்குவிட்டு அந்த வருமானத்தில் பியானோ, ஆர்மோனியம் மற்றும் கித்தார் வாசிக்கக் கற்று கொண்டார். தன்ராஜ் மாஸ்டரிடம் முறைப்படி இசை கற்றுக் கொண்டார். 11 வயதில் இளையராஜா இசைக்குழுவில் கீபோர்டு வாசிப்பதற்காகச் சேர்ந்தார். பின்னர் எம். எஸ். விஸ்வநாதன், ரமேஷ் நாயுடு, ஜாகீர் உசேன் மற்றும் குன்னக்குடி வைத்தியநாதன் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களிடம் பணியாற்றினார். டிரினிட்டி காலேஜ் ஆப் மியூசிக் கல்லூரியில் கிளாசிக்கல் மியூசிக்கில் பட்டம் பெற்றார்.
இவரது மனைவி பெயர் ஷெரினா பானு. காதிஜா, கீமா, அமின் என மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
1992 இல் தனது வீட்டிலேயே இசைக் கலையகத்தை அமைத்தார். இதே ஆண்டு வெளியான மணிரத்தினத்தின் ரோஜா திரைப்படம், இவருடய வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது. இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் பிரபலமாயின. இவருக்கு முதல் தேசியவிருது வாங்கித் தந்தது. பின்னர் 1997ல் மின்சாரக் கனவும், 2002 லகான் இந்தி படமும், 2003-இல் கன்னத்தில் முத்தமிட்டால் படமும் இவருக்குத் தேசிய விருதுகள் வாங்கித் தந்தன.
முத்து திரைப்படம் சப்பானில் வெற்றி பெற்று, இவரது புகழ் உலகமெங்கும் பரவத் தொடங்கியது. 2012 இல் இவரால் வாங்கப்பட்ட ஏ.எம் ஸ்டுடியோ ஆசியாவிலேயே நவீன தொழில்நுட்ப ரெகார்டிங் ஸ்டுடியோவாக உள்ளது.
இசையில் ஆரம்ப காலம்
ரகுமான் தனது ஒன்பதாது வயதில் தந்தையை இழந்ததால், விளம்பரங்களுக்கு இசையமைத்தார். திரிலோக் மற்றும் சாரதா ஆகியோருடன் இணைந்து விளம்பரப் படங்களை இவர் தயாரித்தார். அதன் மூலம் ரகுமான் வெகுவாக அறியப்பட்டார். பூஸ்ட், ஏசியன் பெயின்ட்ஸ், ஏர்டெல், லியோ காபி ஆகிய 300க்கும் மேற்பட்ட விளம்பரப்படங்களுக்கு ரகுமான் இசையமைத்தார்.
படைப்புகள்
திரைப்பட இசையமைப்புகள்
ஆண்டு | தமிழ் | தெலுங்கு | ஹிந்தி | ஆங்கிலம் | விருதுகள் |
---|---|---|---|---|---|
1992 | ரோஜா | ரோஜா | ரோஜா | "சிறந்த இசையமைப்பாளர் - தேசிய விருது, பிலிம்பேர்" | |
1993 | ஜென்டில்மேன் | ஜென்டில்மேன் | தி ஜென்டில்மேன் | "சிறந்த இசையமைப்பாளர் - தமிழ்நாடு மாநில விருது, பிலிம்பேர்" | |
கிழக்குச்சீமையிலே | |||||
புதிய முகம் | |||||
திருடா திருடா | டொங்கா டொங்கா | ச்சோர் ச்சோர் | |||
உழவன் | |||||
1994 | டூயட் | ||||
காதலன் | ஹம்ஸே ஹே முக்காப்லா | "சிறந்த இசையமைப்பாளர் - தமிழ்நாடு மாநில விருது, பிலிம்பேர்" | |||
கருத்தம்மா | |||||
மே மாதம் | |||||
புதிய மன்னர்கள் | |||||
வண்டிச்சோலை சின்னராசு | |||||
பவித்ரா | |||||
சூப்பர் போலீஸ் | |||||
கேங் மாஸ்டர் | |||||
1995 | பம்பாய் | பம்பாய் | பம்பாய் | ||
இந்திரா | |||||
முத்து | |||||
ரங்கீலா | ரங்கீலா | ||||
1996 | இந்தியன் | பாரதீயடு | ஹிந்துஸ்தானி | ||
காதல் தேசம் | பிரேம தேசம் | துனியா தில்வாலோன் கீ | |||
லவ் பேர்ட்ஸ் | |||||
மிஸ்டர் ரோமியோ | |||||
1997 | இருவர் | ||||
மின்சார கனவு | மெருப்பு கலலு | சப்னே | "சிறந்த இசையமைப்பாளர் - தேசிய, தமிழ்நாடு மாநில மற்றும் பிலிம்பேர் விருதுகள்" | ||
ரட்சகன் | ரக்ஷடு | ||||
தவுட் | |||||
1998 | ஜீன்ஸ் | ஜீன்ஸ் | ஜீன்ஸ் | ||
உயிரே | ஹிருதயாஞ்சலி | தில் சே | |||
தோலி சஜா கே ரக்ஹ்னா | |||||
கபி நா கபி | |||||
1999 | முதல்வன் | ஒக்கே ஓக்கடு | நாயக் | ||
தாஜ் மஹால் | |||||
சங்கமம் | |||||
காதலர் தினம் | பிரேமிகுலு ரோஜு | ||||
ஜோடி | |||||
தாளம் | தாள் | ||||
என் சுவாசக் காற்றே | |||||
படையப்பா | |||||
1947 எர்த் | |||||
தக்ஷக் | |||||
புக்கார் | |||||
2000 | அலைபாயுதே | சகி | சாத்தியா | ||
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் | ப்ரியலு பிலிச்சிந்தி | ||||
ரிதம் | ரிதம் | ||||
தெனாலி | தெனாலி | ||||
தில் ஹே தில் மே | |||||
2001 | ஸ்டார் | ||||
பார்த்தாலே பரவசம் | பரவசம் | ||||
அல்லி அர்ஜூனா | |||||
சுபைதா | |||||
ஒன் 2 கா 4 | |||||
லவ் யூ ஹமேஷா | |||||
லகான் | |||||
2002 | கன்னத்தில் முத்தமிட்டால் | அம்ருதா | |||
பாபா | |||||
காதல் வைரஸ் | |||||
தி லெஜன்ட் ஆஃப் பகத் சிங் | |||||
சாத்தியா | |||||
2003 | உதயா | ||||
பரசுராம் | |||||
பாய்ஸ் | பாய்ஸ் | ||||
வாரியர்ஸ் ஆப் ஹெவென் அண்ட் எர்த் | |||||
எனக்கு 20 உனக்கு 18 | நீ மனசு நாக்கு தெலுசு | ||||
கண்களால் கைது செய் | |||||
தெஹ்ஜீப் | |||||
2004 | ஆய்த எழுத்து | யுவா | யுவா | ||
நியூ | நானி | ||||
தேசம் | ஸ்வதேஸ் | ||||
லகீர் | |||||
மீனாக்சி - எ டேல் ஆஃப் 3 சிட்டீஸ் | |||||
தில் நே ஜிஸே அப்னா கஹா | |||||
கிஸ்னா | |||||
2005 | போஸ் - தி ஃபர்காட்டன் ஹீரோ | ||||
மங்கள் பாண்டே - தி ரைஸிங் | |||||
அ ஆ | |||||
வாட்டர் | |||||
2006 | ரங் தே பசந்தி | ||||
சில்லுனு ஒரு காதல் | |||||
வரலாறு (காட்பாதர்) | |||||
2007 | குரு | குரு | குரு | ||
ப்ரோவோக்டு | |||||
சிவாஜி | |||||
அழகிய தமிழ் மகன் | |||||
எலிசபெத்: தி கோல்டென் ஏஜ் | |||||
2008 | ஜோதா அக்பர் | ||||
ஜானே து யா ஜானே நா | |||||
அடா : எ வே ஆப் லைப் | |||||
சக்கரகட்டி | |||||
யுவ்ராஜ் | |||||
கஜினி | |||||
ஸ்லம் டாக் மில்லியனியர் | |||||
2009 | டில்லி 6 | ||||
ப்ளூ | |||||
பாசேஜ் | |||||
கபுள்ஸ் ரிட்ரீட் | |||||
2010 | விண்ணைத்தாண்டி வருவாயா | யே மாய சேசாவே | ஏக் தீவானா தா | ||
எந்திரன் | ரோபோ | ரோபோ | |||
ஜ்ஹூதா ஹீ சஹி | |||||
127 ஹவர்ஸ் | கோல்டன் க்லோபுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது | ||||
கொம்மாரம் புலி | |||||
2011 | ராக் ஸ்டார் | ||||
2012 | ' | பீப்பிள் லைக் அஸ் | |||
ஜப் தே கே ஜான் | |||||
கடல் | கடலி | ' | |||
2013 | மரியான் | ||||
அம்பிகாபதி | ராஞ்சனா | ||||
2014 | ஹை வே | ||||
கோச்சடையான் (திரைப்படம்) | விக்கிரமசிம்ஹா | கோச்சடையான் | |||
மில்லியன் டாலர் ஆர்ம் | |||||
காவியத் தலைவன் | |||||
லிங்கா | லிங்கா | லிங்கா | |||
2015 | ஐ (திரைப்படம்) | ஐ | ஐ | ||
2016 | 24 | ||||
2016 | Achcham Yenbadhu Madamayada (AYM) |
- குறிப்பு: "ஆண்டு", பன்மொழித் திரைப்படமாயின், எந்த மொழியில் அத்திரைப்படம் முதலில் வெளியானதோ, அந்த ஆண்டைக் குறிக்கும்.
பின் வரும் பிற மொழித் திரைப்படங்களுக்கும் இசையமைத்துள்ளார்:
திரைப்படமல்லாத இசையமைப்புகள்
- Return of the Thief of Baghdad (2003)
- தீன் இசை மாலை (1989) (திலீப் குமார் என்ற பெயரில்)
- செட் மீ ஃப்ரீ (1991)
- வந்தே மாதரம் (1997)
- ஜன கண மன (2000)
- பாம்பே ட்ரீம்ஸ் (2002) (இசை நாடகம்)
- இக்னைட்டட் மைன்ட்ஸ் (2003) (இசைத்தொகுப்பு வெளியிடப்படாத நேரடி இசை நிகழ்ச்சி)
- ராகாஸ் டான்ஸ்(2004) (வனேசா மே நடனத்திலிருந்து)
இவர் பெற்ற விருதுகள்
- இசைத்துறையில் ஏ.ஆர். ரகுமானின் 20 ஆண்டுகாலப் பங்களிப்பைப் பெருமைப்படுத்தும் வகையில் அவருக்கு, அமெரிக்காவின் பெர்க்லீ இசைப் பல்கலைக்கழகம் மதிப்புறு முனைவர் பட்டம் வழங்க உள்ளது[4].
- 2008 ஆம் ஆண்டுக்கான சிறந்த இசையமைப்பாளருக்காகவும் சிறந்த பாடலுக்காகவும் ஆஸ்கார் விருதுகளைப் பெற்றுள்ளார்.
- இவர் மொரீசியசு நாட்டின் விருது, மலேசிய விருது, லாரன்ஸ் ஆலிவர் விருது, தேசிய திரைப்பட விருது, இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது, தமிழக அரசு திரைப்பட விருது (ஆறு முறை), பிலிம்பேர் விருது (13 முறை), பிலிம்பேர் சவுத் விருது (12 முறை - அதில் 9 முறை தொடர்ந்து பெற்றார்), ஸ்டேன்போர்டு பல்கலைக்கழகத்தின் சிறப்பு விருது, 2009ஆம் ஆண்டு வெளியான "ஸ்லம்டாக் மில்லினியர்" படத்திற்காக கோல்டன் குளோப் விருது, பெப்டா விருது ஆகியவற்றையும் பெற்றுள்ளார்.
- மிடில்செக்ஸ் பல்கலைக்கழகமும் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகமும் வழங்கிய மதிப்புறு முனைவர் பட்டத்தையும் பெற்றுள்ளார்.
- ரங் தே பசந்தி, லகான், சாத்தியா, தால் ஆகிய திரைப்படங்களுக்காக ஐ.ஐ.எஃப்.ஏ விருது பெற்றுள்ளார்.
- சிகரமாக, இந்தியக் குடிமக்களுக்கான மூன்றாம் உயரிய விருதான பத்ம பூசண் விருது 2010-ஆம் ஆண்டு இவருக்கு அளிக்கப்பட்டது. 2010ஆம் ஆண்டில் இவருக்கு இந்திரா காந்தி தேசிய ஒருமைப்பாடு விருதும் வழங்கப்பட்டது.
- ஸ்வரலயா யேசுதாஸ் விருது(2006), மத்தியப்பிரதேச அரசின் லதா மங்கேஷ்கர் விருது (2004) ஆகிய மாநில விருதுகளைப் பெற்றுள்ளார்.
- ஸ்டேன்போர்டு பல்கலைக்கழகம் இவருக்கு உலகப் பங்களிப்புக்கான மதிப்புறு விருதை வழங்கியுள்ளது.
இந்திய அணியின் நல்லெண்ணத் தூதர்
ரியோ டி ஜனேரோ 2016 ஓலிம்பிக் விளையாட்டுக்கள் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணிக்காக ஏ. ஆர். ரகுமான் இந்திய அணியின் நல்லெண்ணத் தூதராக நியமிக்கப்பட்டார்.[5]
மேற்கோள்கள்
- மனோரமா இயர்புக் 2010.பக்கம்-16
- http://www.tamilcinema.com/CINENEWS/Hotnews/2009/February/230209.asp
- https://tamil.oneindia.com/art-culture/essays/a-r-rahman-honored-with-tamil-ratna-award-260422.html
- http://www.maalaimalar.com/2014/07/18145143/a-r-rahman-to-receive-honorary.html
- "ஒலிம்பிக் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்". தமிழ் இந்து. பார்த்த நாள் May 13, 2016.
வெளி இணைப்புகள்
- அதிகாரப்பூர்வ இணையதளம்
- A. R. Rahman at AllMusic
- A. R. Rahman at பில்போர்ட் (இதழ்)
- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் ஏ. ஆர். ரகுமான்
- A.R. Rahman Interview NAMM Oral History Program (2013)
- என். சொக்கன் எழுதிய ஏ.ஆர்.ரஹ்மான் வரலாறு - இலவச மின்னூல்