லகான்

லகான் (Lagaan)(வரி) 2001 ஆம் ஆண்டில் வெளிவந்த ஹிந்தி மொழித் திரைப்படமாகும். இத்திரைப்படம் பிரபல ஹிந்தி நட்சத்திரமான அமீர்கானின் நடிப்பில் வெளிவந்தது. 2002 ஆம் ஆண்டில் ஆஸ்கார் விருதிற்காக பரிந்துரைக்கப்பட்டது. மேலும் உலக மக்கள் முதல் இந்தியத் திரைப்படத்தினை தம் நாடுகளிலிருந்த திரையரங்குகளில் கண்டு மகிழ்ந்த பெருமை இத்திரைப்படத்திற்குரியது. இந்திய திரைப்பட வரலாற்றில் மூன்றாவது முறையாக ஆஸ்கார் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட திரைப்படம் லகான் ஆகும்.

லகான்
இயக்கம்அஸுதோஸ் கௌவாரிகர்
தயாரிப்புஅமீர்கான்
கதைதிரைக்கதை:
குமார் தேவ்
சஜ்சேய் தேய்மா
அஸுதோஸ் கௌவாரிகர்
கதை :
அஸுதோஸ் கௌவாரிகர்
வசனம்:
K.P. சாக்ஸேனா
நடிப்புஅமீர்கான்
க்ரேசி சிங்
ராச்சேல் செல்லி
வெளியீடுஆனி 15, 2001 இந்தியா,இங்கிலாந்து மற்றும் அமெரிக்க. வெளியீடுகள்
ஓட்டம்224 நிமிடங்கள்
மொழிஹிந்தி
ஆங்கிலம்
போஜ்பூரி

வகை

நாடகப்படம்

கதை

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் காலகட்டங்களில் பிரித்தானிய அரசாங்கம் இந்தியாவை ஆட்சி செய்து கொண்டிருந்த காலம் இந்தியர்கள் அனைவரும் பிரித்தானிய அரசாங்கத்திற்கு வரி செலுத்த வேண்டிய கட்டாய காலம்.வரிப்பணம் மிகவும் அதிக தொகையாக இருந்ததன் காரணமாக பெரும்பாலான ஏழைகளால் வரி செலுத்தப் போதிய பணம் இருக்கவில்லை.இதனை பிரித்தானியத் தளபதியான ஆண்ரூவிடம் பூரன்சிங் என்னும் மன்னன் எடுத்துக் கூறினார்.இதனைக் கேட்ட அவன் அப்படியானால் நீங்கள் அனைவரும் மாமிசம் உண்ண வேண்டும் எனக் கூறினான் மாமிசம் உண்பதென்பது அக்காலத்தில் இந்து மதத்தினரால் பாவமாகக் கருதப்பட்டது.இத்தகைய வேண்டுகோளை மறுத்த மன்னர் அவ்வாறு செய்ய இயலாது எனக் கூறவே கோபம் கொண்ட பிரித்தானியத் தளபதி வரிப்பணத்தை இரண்டு மடங்காக உயர்த்தினான்.இதனைக் கேட்டுக் கோபம் கொண்ட பொதுமக்களை இவ்வாறு வரிப் பணத்தின் எண்ணிக்கை குறைய வேண்டுமென்றால் எங்களுடன் மட்டைப்பந்து ஆடு மாறு கேட்டுக் கொண்டனர் பிரித்தானியர்கள்.புவன் என்னும் கிராமவாசி தன் கிராமத்தில் பலரை சேர்த்து அவர்களுக்கு பயிற்சி அழித்து பிரித்தானியர்களை வெல்கின்றான்.இதற்கிடையில் இவனைக் காணும் பிரித்தானியத் தளபதியின் தங்கையான எலிசபெத் புவன் மீது காதல் கொள்கிறாள்.ஆனால் புவனோ தனது கிராமவாசியான கௌரியின் மீது காதல் கொண்டிருப்பதனை எலிசபெத் தெரிந்து கொள்கிறாள் பின்னர் அவனை விட்டு விலகிச் செல்கின்றாள்.

விருதுகள்

  • 2002 ஆஸ்கார் விருது சிறந்த வேற்று மொழித்திரைப்படத்திற்காகப் பரிந்துரைக்கப்பட்டது.

தேசிய திரைப்பட விருது, இந்தியா 2002

  • சிறந்த திரைப்படத்திற்கான கோல்டன் லோட்டஸ் விருது
  • சிறந்த இசையமைப்பாளர் - ஏ.ஆர்.ரஹ்மான்
  • சிறந்த ஆண் பாடகர்' - உதித் நாராயணன் "மித்வா ரே"
  • சிறந்த ஒலிப்பதிவு - H. சிறீதர், நகுல் கம்டே
  • சிறந்த பாடலாசிரியர் - ஜேவ்ட் அக்தர்
  • சிறந்த உடை அலங்காரம் - பானு அதையா
  • சிறந்த கலை இயக்கம் - நிதின் சந்த்ரகாந்த் தேசாய்

பில்ம்பேர் விருது, 2002

  • சிறந்த நடிகர்: அமீர்கான்
  • சிறந்த இயக்குனர்: அசுதோஷ் கௌரிகர்
  • சிறந்த திரைப்படம்
  • சிறந்த இசையமைப்பாளர் - ஏ.ஆர்.ரஹ்மான்
  • சிறந்த பாடலாசிரியர் - ஜேவ்ட் அக்தர்
  • சிறந்த பின்னணிப் பாடகர் - உதித் நாராயணன் "மித்வா ரே"
  • சிறந்த பின்னணிப் பாடகி - அல்கா யாக்னிக் "ஓ ரே சோரி"
  • சிறந்த கதை - அசுதோஷ் கௌரிகர்

லோகார்னோ சர்வதேச திரைப்பட விழா, 2002

  • மக்கள் விருது

ஸீ சினி விருது, 2002

  • சிறந்த நடிகர் - அமீர்கான்
  • சிறந்த புதுமுக நடிகை கிரேசி சிங்
  • சிறந்த இயக்குனர் - அசுதோஷ் கௌரிகர்
  • சிறந்த திரைப்படம் - அசுதோஷ் கௌரிகர்
  • சிறந்த பாடலாசிரியர் - ஜேவ்ட் அக்தர் "ராதா கைஸ் நா ஜலே".
  • சிறந்த இசையமைப்பாளர் - ஏ.ஆர்.ரஹ்மான்
  • சிறந்த பின்னணிப் பாடகி - ஆஷா போஷ்லே "ராதா கைஸ் நா ஜலே".

ஸ்டார் திரை விருது, 2002

  • சிறந்த நடிக - அமீர்கான்
  • சிறந்த புதுமுக நடிகை கிரேசி சிங்
  • சிறந்த இயக்குனர் - அசுதோஷ் கௌரிகர்
  • சிறந்த திரைப்படம் - அசுதோஷ் கௌரிகர்
  • சிறந்த பின்னணிப் பாடகி - ஆஷா போஷ்லே "ராதா கைஸ் நா ஜலே".

ஐபா விருது, 2002

  • சிறந்த நடிக - அமீர்கான்
  • சிறந்த இயக்குனர் - அசுதோஷ்கௌரிகர்
  • சிறந்த திரைப்படம் - அசுதோஷ்கௌரிகர்
  • சிறந்த பின்னணிப் பாடகி - ஆஷா போஷ்லே "ராதா கைஸ் நா ஜலே".
  • சிறந்த இசையமைப்பாளர் - ஏ.ஆர்.ரஹ்மான்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.