முத்து (திரைப்படம்)

முத்து, 1995-ம் ஆண்டு தமிழில் வெளிந்த திரைப்படமாகும். இத்திரைப்படத்தை கே. எஸ். ரவிக்குமார் இயக்க, ரஜினிகாந்த், மீனா, ரகுவரன், சரத் பாபு, ராதாரவி, செந்தில் மற்றும் வடிவேலு நடிப்பில் வெளிவந்தது. இத்திரைப்படத்திற்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைத்திருந்தார். இது மலையாளத் திரைப்படம், தேன்மாவின் கொம்பது (1994) என்பதின் மறுஆக்கம் என்று கூறப்படுகிறது.

முத்து
டிவிடி அட்டை
இயக்கம்கே. எஸ். ரவிக்குமார்
தயாரிப்புராஜம் பாலசந்தர்
புஷ்பா கந்தசாமி
கதைகே. எஸ். ரவிக்குமார்
இசைஏ. ஆர். ரகுமான்
நடிப்புரஜினிகாந்த்,
மீனா,
ரகுவரன்,
சரத் பாபு,
ராதாரவி,
செந்தில் மற்றும்
வடிவேலு
ஒளிப்பதிவுஅசோக் ராஜன்
படத்தொகுப்புகே. தனிகாசலம்
விநியோகம்கவிதாலயா திரைப்பட தயாரிப்பகம்
வெளியீடுஅக்டோபர் 23, 1995 (1995-10-23)(இந்தியா) ஏப்ரல் 3, 1998 (1998-04-03)(ஜப்பான்)
ஓட்டம்140 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இத்திரைப்படம் தெலுங்கிலும் இதே பெயரில் வெளியானது. இத்திரைப்படம் சப்பானிய மொழியில் முத்து ஓடூரு மகாராஜா (ムトゥ 踊るマハラジャ) அதவாது முத்து - ஆடும் அரசர் என்ற பெயரில் வெளியாகி மிகவும் பிரபலமானது. இத்திரைப்படம் இந்தியில் முத்து மகாராஜா என்ற பெயரில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு வெளியானது.

நடித்துள்ளவர்கள்

வரவேற்பு

முத்து, ஜப்பானிய மொழியில் வெளியான முதல் இந்தியத் திரைப்படம்.[1]) நல்ல வரவேற்பையும் பெற்றது.[2] இந்திய பிரதமர் மன்மோகன் சிங் இத்திரைப்படத்தைப் பற்றி 2006-ம் ஆண்டு திசம்பர் 14-ம் நாள் ஜப்பானில் நடைபெற்ற விழாவொன்றில் குறிப்பிட்டுள்ளார்.[3][4]

இத்திரைப்படம், நல்ல வரவேற்பு பெற்றது, இது வெற்றித்திரைப்படமாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

பாடல்கள்

Untitled
#பாடல்பாடியவர்(கள்)
1 "குலுவாயில்லே" உதித் நாராயண், சித்ரா, கல்யாணி மேனன்
2 "தில்லானா தில்லானா" மனோ, சுஜாதா மோகன்
3 "ஒருவன் ஒருவன்" எஸ். பி. பாலசுப்ரமணியம்
4 "கொக்கு சைவ கொக்கு" எஸ். பி. பாலசுப்ரமணியம், தேனி குஞ்சம்மா, ஃபெபி மணி, கங்கா
5 "விடுகதையா" ஹரிஹரன்
6 "பின்னனி இசை"

விருதுகள்

வென்றவை
  • ரஜினிகாந்த் - 1996-ம் ஆண்டின் சிறந்த நடிகருக்கான தமிழ்நாடு அரசு மாநில விருது
பரிந்துரைக்கப்பட்டவை

குறிப்புகளும் மேற்கோள்களும்

  1. Mutu: Odoru Maharaja
  2. Gautaman Bhaskaran (January 6, 2002). "Rajnikanth casts spell on Japanese viewers". The Hindu. http://www.hinduonnet.com/2002/01/06/stories/2002010601320900.htm. பார்த்த நாள்: 2007-05-10.
  3. "It's India-Japan Friendship Year". Chennai, India: The Hindu. 15 December 2006. http://www.hindu.com/2006/12/15/stories/2006121506571400.htm.
  4. http://www.thestatesman.net/page.news.php?clid=1&theme=&usrsess=1&id=140002

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.