ரகுவரன்

ரகுவரன் (டிசம்பர் 11, 1958 - மார்ச் 19, 2008) தமிழ், மலையாளம், இந்தி, தெலுங்கு மொழிகளில் எதிர்நாயகனாகவும் குணச்சித்திர வேடங்களிலும் ஏறத்தாழ 300 படங்களுக்கு மேல் நடித்த திரைப்பட நடிகராவார்.

ரகுவரன்
பிறப்பு திசம்பர் 11, 1958 (1958-12-11)[1]
கொல்லன்கோடு, பாலக்காடு மாவட்டம், கேரளா

இந்தியா

இறப்பு மார்ச் 19, 2008
சென்னை, தமிழ்நாடு
துணைவர் ரோகிணி ((1996-2004) மணமுறிவு

வாழ்க்கைச் சுருக்கம்

நடிகர் ரகுவரன் 1958 ஆம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி கேரளாவில் பிறந்தார். இளங்கலை பட்டதாரியான இவர் 1982 ஆம் ஆண்டு ஏழாவது மனிதன் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகம் ஆனார். கூட்டுப்புழுக்கள், கை நாட்டு, மைக்கேல் ராஜ் ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தார். ஆனாலும் எதிர்நாயகன் வேடங்களில் அவரின் ரசிகர்களால் வரவேற்கப்பட்டது. சம்சாரம் அது மின்சாரம், அஞ்சலி போன்ற படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்தார். இது தவிர இந்தி, மலையாளம், ‌தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார்.

இவர் போதைப் பழக்கத்திற்கு அடிமையானதால் இவரது திரை வாழ்க்கையை மட்டுமின்றி சொந்த வாழ்க்கையையும் பாதிக்கப்பட்டது. இத்தகைய போதை பழக்கத்தால் இவர் காதல் திருமணம் செய்து கொண்ட நடிகை ரோகிணியும் அவரை விட்டு பிரிந்து செல்ல நேர்ந்தது.[2] ரகுவரன் அவரது போதை பழக்கத்தில் இருந்து விடுபட முயற்சி செய்தாலும், அவரால் போதை பழக்கத்தில் இருந்து மீண்டு வர முடியாமல் போனது.[3]

மறைவு

உடல் நலக்குறைவு காரணமாக சென்னை சேத்துப்பட்டில் நடிகர் ரகுவரன் மார்ச் 19, 2008 இல் காலமானார்[4]. நடிகை ரோகினியை ‌திருமணம் செய்து கொ‌ண்ட ரகுவரனு‌க்கு ரிஷி என்ற மக‌ன் உ‌ள்ளா‌ர்.

குறிப்பிடத்தக்க சில திரைப்படங்கள்

நடித்த சில திரைப்படங்கள்

1982 முதல் 1989 வரை

ஆண்டுதிரைப்படம்கதாபாத்திரம்மொழிகுறிப்புகள்
1982காக்காமலையாளம்எதிர்நாயகன்
ஏழாவது மனிதன்தமிழ்கதாநாயகன்
1983ஒரு ஓடை நதியாகிறதுதமிழ்கதாநாயகன்
ருக்மாமலையாளம்
சில்க் சில்க் சில்க்தமிழ்எதிர்நாயகன்
1984நீ தொடும் போதுதமிழ்கதாநாயகன்
முடிவல்ல ஆரம்பம்தமிழ்கதாநாயகன்
1985குற்றவாளிகள்தமிழ்எதிர்நாயகன்
எங்கிருந்தாலும் வாழ்கதமிழ்கதாநாயகன்
1986மிஸ்டர். பாரத்தமிழ்எதிர்நாயகன்
சம்சாரம் அது மின்சாரம்சிதம்பரம்தமிழ்இத்திரைப்படத்தில் இவரது நடிப்பு பலராலும் சிறப்பாக பேசப்பட்டது
மீண்டும் பல்லவிதமிழ்கதாநாயகன்
மந்திரப் புன்னகைடேனியல் மிரான்டாதமிழ்எதிர்நாயகன்
1987பாசிவதி பிராணம்வேணுதெலுங்குஎதிர்நாயகன்
ஊர்க்காவலன்தமிழ்எதிர்நாயகன்
மைக்கேல் ராஜ்தமிழ்கதாநாயகன்
மேகம் கருத்திருக்குதமிழ்
கூட்டுப் புழுக்கள்தமிழ்கதாநாயகன்
கவிதை பாட நேரமில்லை தமிழ்கதாநாயகன்
மனிதன்தமிழ்எதிர்நாயகன்
மக்கள் என் பக்கம் தமிழ்
பூவிழி வாசலிலேதமிழ்எதிர்நாயகன்
1988என் பொம்முக்குட்டி அம்மாவுக்குஅலெக்ஸ்தமிழ்
கலியுகம்தமிழ்கதாநாயகன்
தாய்மேல் ஆணைதமிழ்கதாநாயகன்
கைநாட்டுதமிழ்கதாநாயகன்
குற்றவாளிதமிழ்கதாநாயகன்
கோயில் மணி ஓசைதமிழ்எதிர்நாயகன்
இரண்டில் ஒன்றுதமிழ்எதிர்நாயகன்
என் வழி தனி வழிதமிழ்கதாநாயகன்
அண்ணாநகர் முதல் தெருதமிழ்
1989சிவாதமிழ்
ருத்ரநேத்ராபிளாக் கோப்ராதெலுங்குஎதிர்நாயகன்
லங்கேஷ்வருதுதெலுங்குஎதிர்நாயகன்
ரெட்டை குழல் துப்பாக்கிதமிழ்எதிர்நாயகன்
ராஜா சின்ன ரோஜாரகுதமிழ்எதிர்நாயகன்
சிவாபவானிதெலுங்குஎதிர்நாயகன்
இது உங்க குடும்பம்தமிழ்கதாநாயகன்
தனுஷ்கோடிமலையாளம்

1990 முதல் 1999 வரை

ஆண்டுதிரைப்படம்கதாபாத்திரம்மொழிகுறிப்புகள்
1990வியூகம்டோனி லாயிஸ்மலையாளம்கதாநாயகனாக
புரியாத புதிர்தமிழ்எதிர்நாயகன்
இசாத்தார்இந்த்ரசித் சபர்வால்இந்திஎதிர்நாயகன்
அஞ்சலிசேகர்தமிழ்கதாநாயகனாக
தியாகுதமிழ்கதாநாயகனாக
சிவாபவானிஇந்திஎதிர்நாயகன்
பகலில் பௌர்ணமிதமிழ்எதிர்நாயகன்
1991சைத்தான்யாதெலுங்குஎதிர்நாயகன்
1992சூர்ய மானசம்மலையாளம்எதிர்நாயகன்
தெய்வத்திந்த விக்ரிதைகள்அல்போன்ஸோமலையாளம்கதாநாயகனாக
கிழக்கன் பத்ரோஸ்மலையாளம்எதிர்நாயகன்
தூள் பறக்குதுதமிழ்கதாநாயகனாக
கவசம்மலையாளம்கதாநாயகனாக
1993ஆத்தீகம் என்ன இத்தீகம்மலையாளம்எதிர்நாயகன்
1994பாச மலர்கள்தமிழ்
காதலன்மல்லிகார்ச்சுனாதமிழ்எதிர்நாயகன்
1995பாட்ஷாமார்க் ஆண்டனிதமிழ்எதிர்நாயகன்
கோலங்கள்பைரவன்தமிழ்எதிர்நாயகன்
மாந்திரீகம்அப்துல் ரகுமான்மலையாளம்
பீட்டர் ஸ்காட்மலையாளம்
முத்துதிவான்தமிழ்எதிர்நாயகன்
தொட்டா சிணுங்கிகோபால்தமிழ்கதாநாயகன்
1996ரகசக்இந்திஎதிர்நாயகன்
சர்க்கிள் இன்ஸ்பெக்டர்கன்னடம்எதிர்நாயகன்
செல்வாவரதராஜன்தமிழ்எதிர்நாயகன்
டேக் இட் ஈசி ஊர்வசிதமிழ்
1997ஆநகனாக ஒக்க ரோஜுதெலுங்கு
அருணாச்சலம்விஸ்வநாத்தமிழ்எதிர்நாயகன்
லவ் டுடேசந்திரசேகர்தமிழ்
உல்லாசம்ஜி. கே.தமிழ்
அபிமன்யூமாசிலாமணிதமிழ்எதிர்நாயகன்
நேருக்கு நேர்ரகுதமிழ்
ஆஹாரகுதமிழ்
ரட்சகன்ஈஸ்வர்தமிழ்எதிர்நாயகன்
1998சுஸ்வகதம்தெலுங்கு
ஜெய்ஹிந்த்கன்னடம்எதிர்நாயகன்
கவர்ன்மென்ட்கன்னடம்எதிர்நாயகன்
துள்ளித் திரிந்த காலம்தமிழ்
ஹிட்லர்இந்திஎதிர்நாயகன்
இனியவளேராமநாதன்தமிழ்
பூந்தோட்டம்தமிழ்எதிர்நாயகன்
நிலாவே வாதமிழ்
1999சூர்ய பார்வைஜெயந்த்தமிழ்எதிர்நாயகன்
என் சுவாசக் காற்றேதமிழ்
என்றென்றும் காதல்தமிழ்
லால் பாத்சாவிக்ரம் சிங்இந்திஎதிர்நாயகன்
ஒருவன்கிருஷ்ண பிரசாத்தமிழ்எதிர்நாயகன்
அமர்க்களம்துளசி தாஸ்தமிழ்
அநாகனக ஒரு அம்மாயிபவானி பிரசாத்தெலுங்கு
பூப்பறிக்க வருகிறோம்ரங்கநாதன்தமிழ்
முதல்வன்அரங்கநாதன்தமிழ்வெற்றி, சிறந்த எதிர்நாயகனுக்கான தமிழக அரசின் திரைப்பட விருது
இரணியன்ஆன்டேதமிழ்எதிர்நாயகன்
பிரதயார்த்தாகன்னடம்எதிர்நாயகன்

2000 முதல் 2012 வரை

ஆண்டுதிரைப்படம்கதாபாத்திரம்மொழிகுறிப்புகள்
2000கண்ணுக்குள் நிலவுராஜசேகர்தமிழ்
குட்லக்சந்திரமோகன்தமிழ்
சுதந்திரம்ரகுதமிழ்
முகவரிசிவாதமிழ்
வல்லரசுதமிழ்எதிர்நாயகன்
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்தமிழ்
பெள்ளி சம்பந்தம்தெலுங்கு
பார்த்தேன் ரசித்தேன்பன்னீர்தமிழ்
உயிரிலே கலந்ததுரகுவரன்தமிழ்
ஆசாத்தேவாதெலுங்குஎதிர்நாயகன்
2001கிரகான்ரகுஇந்தி
தோஸ்த்ரகுதமிழ்
நரசிம்மாராணாதமிழ்
ஸ்டார்தனுஷ்கோடிதமிழ்
மஜ்னுகஜபதிதமிழ்
2002சீமா சிம்மம்விஸ்வேஸ்வர ராவ்தெலுங்கு
தயாருத்ரய்யாதமிழ்
ரோஜாக்கூட்டம்தமிழ்
ரன்தமிழ்
யுனிவர்சிடிதமிழ்
பப்பிகே. ஆர்.தெலுங்கு
ஐ லவ் யூ டாதமிழ்
பாலாதமிழ்
காதல் வைரஸ்தமிழ்
2003நாகாஎன். டி. ஆரின் அப்பாவாகதெலுங்கு
ஜானிதெலுங்கு
அலாவுதீன்கங்காதர்தமிழ்
அலைதமிழ்
ஆஞ்சநேயாவெங்கடேஷ்வரன்தமிழ்
திருமலைஆர்டிஸ்ட் தமிழ்
அன்பே உன் வசம்தமிழ்
2004ஜனாதமிழ்
துர்கிகன்னடம்
நானிதெலுங்கு
அரசாட்சிதமிழ்
ஜனனம்உதய மூர்த்திதமிழ்
மாஸ்சத்யாதெலுங்கு
2005சச்சின்கௌதம்தமிழ்
2006சிவப்பதிகாரம்இளங்கோதமிழ்
2007பசுமாசுரன்மலையாளம்
தீபாவளிதமிழ்சிறப்புத் தோற்றம்
எவடைத்தே நாகேண்டிதெலுங்கு
நல்லதோர் வீணைதமிழ்
சிவாஜிசெழியன்தமிழ்மருத்துவராக
மருதமலைதமிழ்
2008பீமாபெரியவர்தமிழ்
அசோகாதமிழ்
தொடக்கம்தமிழ்
பெள்ளிக்கானி பிரசாத்தெலுங்கு
சில நேரங்களில்கிருஷ்ணன்தமிழ்
ஆட்டடிஸ்தாதெலுங்கு
யாரடி நீ மோகினிதனுஷின் அப்பாவாகதமிழ்
எல்லாம் அவன் செயல்ஜெகதீஸ்வரன்தமிழ்
2009பேங்க்இந்தி
மஞ்சீராதெலுங்கு
2009கந்தசாமிதமிழ்ரகுவரன் இறந்துவிட்டதால் அவருக்கு பதிலாக ஆஷிஷ் வித்யார்த்தி நடித்தார்.
2012உள்ளம்தமிழ்திரையரங்கில் வெளியாகாமல் குறுந்தகட்டில் வெளியானது.

மேற்கோள்கள்

  1. "RajiniKanth.com - Bio-Data". பார்த்த நாள் 2007-04-05.
  2. நடிக‌ர் ரகுவர‌ன் மரணம் (ஆங்கிலத்தில்)
  3. http://www.indiaglitz.com/raghuvaran-passes-away-tamil-news-37336
  4. நடிக‌ர் ரகுவர‌ன் காலமானா‌ர்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.