எந்திரன் (திரைப்படம்)
எந்திரன் 2010ல் வெளியான ஒரு அறிபுனை தமிழ்த் திரைப்படமாகும். சங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் நடித்திருக்கின்றார்கள். இப்படத்திற்கு ஏ. ஆர். ரகுமான் இசை அமைத்திருக்கின்றார். 2010, அக்டோபர் 1 அன்று இந்த திரைப்படம் உலகம் முழுவதும் வெளியானது. துபாய், சிட்னி உட்பட சில உலக நகரங்களில் செப்டம்பர் 30 இல் இத்திரைப்படத்தின் சிறப்புக் காட்சிகள் திரையிடப்பட்டன. இப்படம் இதற்கு முன்பு வெளியான அனைத்து தமிழ்த் திரைபடங்களின் பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது.[1] இப்படத்திற்கு, 2.0 என்ற பெயரில் ஒரு தொடர்ச்சி திரைப்படம், தயாரிப்பில் உள்ளது.
எந்திரன் | |
---|---|
![]() | |
இயக்கம் | சங்கர் |
தயாரிப்பு | கலாநிதி மாறன் |
கதை | பாலகுமாரன் சுஜாதா சங்கர் |
இசை | ஏ. ஆர். ரகுமான் |
நடிப்பு | ரஜினிகாந்த் ஐஸ்வர்யா ராய் |
ஒளிப்பதிவு | ரத்தினவேல் |
விநியோகம் | சன் பிக்சர்ஸ் |
வெளியீடு | ![]() |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் இந்தி தெலுங்கு |
ஆக்கச்செலவு | ₹196 கோடி |
மொத்த வருவாய் | ₹293 கோடி |
கதை
ஒரு சுயசிந்தனை எந்திரனை உருவாக்குவதே விஞ்ஞானி வசீகரனின் குறிக்கோள். பல வருட உழைப்புக்கு பிறகு சிட்டியை உருவாக்குகிறார் வசி(வசீகரன்). சகமனிதர்களின் உணர்வுகளை புரிந்துகொள்ள முடியாமல் முடக்கப்படும் நிலையில் உள்ள சிட்டிக்கு உணர்வுகளையும் உருவாக்குகிறார் வசி.
விஞ்ஞானியான ரஜினி (வசீகரன்) ஒரு மனிதனை ஒத்த ரோபோ (AndroidHumanoid Robot) தயாரிக்கிறார். அதே சமயம் அவருடைய குரு டேனி டென்சோங்கோவும் இதைனைப் போலவே முயற்சிக்க தோல்வியடைகிறது. வசீகரன்(ரஜினி) உருவாக்கிய எந்திரனுக்கு(சிட்டி) அங்கீகாரம் அளிக்கும் பொறுப்பு அவருக்கு இருக்கையில்,வசீகரன்(ரஜினி) உருவாக்கிய எந்திரனுக்கு உணர்வில்லை, அதனால் இது ஆபத்தானது என்று அங்கீகாரத்தை மறுத்து விடுகிறார்.மீண்டும் முயன்று வசீகரன் அந்த எந்திரனுக்கு உணர்வுகளை ஊட்டி அங்கீகாரம் பெற்றுவிடுகிறார். ஆனால் உணர்வு பெற்ற எந்திரனோ வசீகரன்(ரஜினி) காதலிக்கும் ஐஸ்வர்யாவையே காதலிக்க வேறு வழியில்லாமல் எந்திரனை அழித்து குப்பைத் தொட்டியில் வீசி விடுகிறார். தூக்கி எறிந்த மீதிப்பாகங்களை வைத்து மீண்டும் உருவாக்கி சிட்டியினிடம் காணப்பட்ட ஆக்கதிறனைக் கொண்ட நீல சிப்பை வெளியேற்றி விட்டு தவறான மென்பொருளை உள்ளடக்கிய அழிக்கும் திறனைக் கொண்டுள்ள சிவப்பு சிப்பை உள்ளீடு செய்ய, அது டேனியையும் அழித்து மேலும் தன்னை ஒத்த சிட்டி ரோபாக்களை தாங்களே உருவாக்கிக்கொள்ளும் திறம்கொண்டு விடுகிறது. அதனால் ஏற்படும் குழப்பம், அவை செய்யும் நாச வேலைகள், பிருமாண்ட இறுதிக்காட்சிகள என்பதுதான் மீதிக் கதையே.
நடிகர்கள்
- ரஜினிகாந்த் - கே. வசீகரன் மற்றும் சிட்டி
- ஐஸ்வர்யா ராய் (நடிகை) - சனா
- சந்தானம் (நடிகர்) -சிவா
- கருணாஸ் - ரவி
- தேவதர்சினி - லலிதா
- சாபு சிரில் - ஏஜேன் சா
- கலாபவன் மணி - பச்சைமுத்து
- ரேவதி சங்கரன் - வசீகரன் தாய்
- டெல்லி குமார் - வசீகரன் தந்தை
- கொச்சி ஹனீஃபா - போக்குவரத்து காவல் அதிகாரி
தமிழ்ப் பெயர் சர்ச்சை
தமிழ்நாடு அரசு தமிழ்த் திரைப்படங்கள் தமிழில் பெயரிடப்பட்டால் வரிவிலக்கு வழங்குகிறது. ரோபோ என்பது Robot என்ற ஆங்கிலச் சொல்லை அப்படியே எடுத்தாள்வதாகும். தமிழில் ரோபோ என்பதற்கு தானியங்கி என்ற பெயர் வழங்குகிறது. முன்னர் ரோபோ என்று பெயரிடப்பட்டு, பின்னர் எந்திரன் என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது.(இப்படம் முதன் முதலில் தயாரிக்க திட்டமிட்டது அய்ங்கரன் இண்டர்நேசனல். தயாரிப்பு காரணங்களினால் பின்பு சன் பிக்சர்ஸ் தயாரித்து வெளியிட்டது [2]
ஏனைய மொழிகளில்
எந்திரன் திரைப்படம் தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது. அத்துடன் மேலைத்தேய நாடுகளில் ஆங்கில உப தலைப்புகளுடன் வெளியிட எச்.பி.ஓ நிறுவனம் பொறுப்பேற்றுள்ளது [3].
இசை வெளியீடு
31 சூலை, 2010 அன்று மலேசியாவின் தலைநகரம் கோலாலம்பூரில் எந்திரன் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்தத் திரைப்பட இசையை ஏழு கோடி இந்திய ரூபாய்க்கு திங் என்ற நிறுவனம் வாங்கிக்கொண்டது.[4]
இசை வெளியிட்டு முதலாவது வாரத்தில் ஐடியூன்சில் ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளில் இந்தத் திரைப்படப்பாடல்கள் முதல் இடத்தில் இருந்தமை குறிப்பிடத்தக்கது. அதாவது அதிகமாகப் பதிவிறக்கப்பட்ட பாடலாக இருந்தது. ஒரு தமிழ் திரைப்படப்பாடல் உலக அளவில் இவ்வாறு முதல் இடம் பிடித்தமை இதுவே முதற் தடவையாகும்.[5][6]
வரவேற்பு
- உலகம் முழுதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த எந்திரன் திரைப்படமானது அதிக வசூல் பெற்று தமிழ்த் திரைப்படங்களில் அதிக அளவு வசூல் அடைந்த திரைப்படம் என்னும் பெருமையைப் பெற்றது.[7]
- இந்தியில் எதிர்பார்த்த வெற்றியைத் தராவிட்டாலும், தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் வெளியிடப்பட்ட இந்தப் படமானது உலகம் முழுதும் வெளியாகி வெற்றிகரமாக ஓடியது.[8]
மேற்கோள்கள்
- "வசூல் சாதனை". பார்த்த நாள் 13 ஏப்ரல் 2014.
- "கை மாறியது எந்திரன் - சன் பிக்சர் தயாரிக்கிறது". பார்த்த நாள் 13 ஏப்ரல் 2014.
- "‘Endhiran’ audio on July 31 - Tamil Movie News". IndiaGlitz. பார்த்த நாள் 2011-09-28.
- திங் நிறுவனம் இசை உரிமையை வாங்கியது (ஆங்கில மொழியில்)
- "‘Endhiran’ tops Apple list - Tamil Movie News". IndiaGlitz. பார்த்த நாள் 2011-09-28.
- Endhiran topped in the US iTunes chart
- "எந்திரன் - தமிழ்த்திரைப்படங்களில் - அதிக வசூல் சாதனை". பார்த்த நாள் 13 ஏப்ரல் 2014.
- "உலக அளவில் சாதனை". பார்த்த நாள் 13 ஏப்ரல் 2014.