கலாபவன் மணி

கலாபவன் மணி (1 சனவரி 1971 6 மார்ச் 2016) தென்னிந்தியத் திரைப்பட நடிகனும் பாடகரும் ஆவார். இவர் மலையாளத் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினாலும், தமிழ் மற்றும் தெலுங்குத் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். மலையாளத் திரைப்படங்களில் நாயகனாகவும், தமிழ் மற்றும் தெலுங்குத் திரைப்படங்களில் குணச்சித்திர மற்றும் எதிர்நாயகனாகவும் நடித்துள்ளார். தேசிய விருதையும், கேரள மாநில சிறந்த நடிகருக்கான விருதினையும் வென்றவர்.[2]

கலாபவன் மணி
பிறப்புமணி ரத்தினம்
சனவரி 1, 1971(1971-01-01) [1]
கேரளா, இந்தியா
இறப்புமார்ச்சு 6, 2016(2016-03-06) (அகவை 45)
எர்ணாகுளம், கேரளா, இந்தியா
பணிநடிகர், பின்னணிப் பாடகர், இசையமைப்பாளர், பலகுரல் கலைஞர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
1995–2016
வாழ்க்கைத்
துணை
நிம்மி
பிள்ளைகள்சிறீ லட்சுமி
வலைத்தளம்
www.kalabhavanmani.in

இவர் நாட்டுப்புற பாடல்களையும் பாடியுள்ளார். திருச்சூர் மாவட்டத்தின் சாலக்குடியில் பிறந்தவர். மலையாள திரைப்படத்துறைக்கு வருவதற்கு முன்பு மூவிருளி ஓட்டுநராகவும் பணியாற்றியுள்ளார். வசந்தியும் லட்சுமியும் பின்னே ஞானும் என்ற திரைப்படத்தில் நடித்ததிற்காக 2000ஆம் ஆண்டில் கேரள அரசின் திரைப்பட விருதை பெற்றுள்ளார்.

நடித்த திரைப்படங்கள்

தமிழ்த் திரைப்படங்கள்

ஆண்டு திரைப்படம்ஏற்ற வேடம்குறிப்புகள்
1998 மறுமலர்ச்சிவேலு
2001 வாஞ்சிநாதன்
2002 ஜெமினிதேஜா
2003 தென்னவன்
நாம்
ஜே ஜே
பந்தா பரமசிவம்சிவம்
தத்தித் தாவுது மனசு
புதிய கீதைரெட்டியார்
காதல் கிசுகிசு
2004 ஏய்
குத்துகதாநாயகியின் தந்தை
போஸ்
சிங்கார சென்னை
செம ரகளை
2005 அந்நியன்வீட்டின் உரிமையாளர்சிறப்புத் தோற்றம்
செவ்வேல்
ஆறுகாவல்துறை அதிகாரி
ஜித்தன்
மழைகதாநாயகியின் தந்தை
2006 பாசக்கிளிகள்ஆளக்காலன்
உனக்கும் எனக்கும்மார்க் மாயாண்டி
2007 வேல்சக்கரப்பாண்டி
2009 மோதி விளையாடுராசன் வாசுதேவ்
2010 எந்திரன்பச்சமுத்துசிறப்புத் தோற்றம்
2012 யாருக்குத் தெரியும்
2014 சங்கராபுரம்
கங்காரு
2015 லவ் குரு
கலை வேந்தன்
பாபநாசம்காவலர் பெருமாள்

இறப்பு

ஈரல் மற்றும் சிறுநீரக கோளாறு காரணமாக 2 நாட்களாக கொச்சியில் உள்ள அம்ருதா என்ற தனியார் மருத்துவமனையில் சிகிட்சை பெற்ற வந்த கலாபவன் மணி மார்ச்சு 6 அன்று இறந்துவிட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தார்கள்.[3][4]

சான்றுகள்

  1. http://www.kalabhavanmani.in/biography
  2. https://tamil.oneindia.com/amphtml/news/tamilnadu/actor-kalabhavan-mani-passes-away-at-45-248415.html
  3. "Popular Malayalam Actor Kalabhavan Mani Dies After Battling Liver Disease". என் டி டி வி. பார்த்த நாள் 6 மார்ச் 2016.
  4. "Actor Kalabhavan Mani passed away". larazonsanluis. பார்த்த நாள் 6 மார்ச் 2016.

வெளி இணைப்பு

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.