மறுமலர்ச்சி (1998 திரைப்படம்)

மறுமலர்ச்சி ( Marumalarchi) 1998 ஆம் ஆண்டு மம்மூட்டி, தேவயானி, மனோரமா, ரஞ்சித் மற்றும் மன்சூர் அலி கான் ஆகியோரது நடிப்பில், மறுமலர்ச்சி பாரதி இயக்கத்தில், ஹென்றியின் தயாரிப்பில், எஸ். ஏ. ராஜ்குமார் இசையில் 14 சனவரி 1998 இல் வெளியாகி வணிகரீதியில் வெற்றி பெற்றத் திரைப்படம். இத்திரைப்படம் தெலுங்கில் ராஜசேகர் மற்றும் சௌந்தர்யா நடிப்பில் சூரியுடு என்றும், கன்னட மொழியில் விஷ்ணுவர்தன் மற்றும் சுருதி நடிப்பில் சூரப்பா என்றும், இந்தியில் மிதுன் சக்கரவர்த்தி நடிப்பில் பிஹூல் ஆர் ஆக் என்றும் மறுஆக்கம் செய்யப்பட்டது.

மறுமலர்ச்சி
இயக்கம்மறுமலர்ச்சி பாரதி
தயாரிப்புஹென்றி
கதைமறுமலர்ச்சி பாரதி
இசைஎஸ். ஏ. ராஜ்குமார்
நடிப்புமம்மூட்டி
தேவயானி
ரஞ்சித்
மன்சூர் அலி கான்
மனோரமா
ஒளிப்பதிவுதங்கர் பச்சான்
படத்தொகுப்புவி. டி. விஜயன்
பி. லெனின்
கலையகம்பங்கஜ் புரொடக்சன்ஸ்
வெளியீடுசனவரி 14, 1998 (1998-01-14)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதைச்சுருக்கம்

ராசுப் படையாச்சி (மம்மூட்டி) குணவாசல் கிராமத்து மக்களால் மதிக்கப்படும் குணத்தால் உயர்ந்த நல்ல மனம் கொண்ட மனிதர். தன் வாழ்க்கையை அந்த கிராமத்திற்காக அர்ப்பணித்துள்ளார். ஒரு தொலைதூர கிராமமான சுந்தரபுரத்திற்குச் செல்லும் ராசுப் படையாச்சியும் அவரது வாகன ஓட்டுனர் வேலுவும் (கலாபவன் மணி) அங்குள்ள சந்தையில் பொருட்கள் வாங்குவதற்குச் செல்கின்றனர். திடீரென்று தீண்டவரும் பாம்பு ஒன்றிடமிருந்து காப்பாற்றுவதற்காக ஜெயந்தியைத் (தேவயானி) தூக்குகிறார். அதைத் தவறாகப் புரிந்துகொள்ளும் ஜெயந்தி தன்னிடம் ராசுப் படையாச்சி தவறாக நடந்துகொண்டதாகக் குற்றம்சாட்டுகிறார். ராசுப் படையாச்சியைப் பற்றி அறிந்திராத அந்த ஊரைச் சேர்ந்த மணிமாறனும் (ரஞ்சித்) மன்னாரும் (மன்சூர் அலி கான்) ராசுப் படையாச்சியை அடித்துவிடுகின்றனர். இது குணவாசல் கிராம மக்களுக்குத் தெரிந்தால் பிரச்சனை பெரிதாகும் என்பதால், இதை யாரிடமும் சொல்லக்கூடாது என்று வேலுவிடம் சத்தியம் வாங்குகிறார் ராசுப் படையாச்சி. ஊருக்குத் திரும்பும் இருவரும் விபத்தில் அடிபட்டதாக பொய் சொல்லுகின்றனர்.

இந்த நிகழ்வை அறிந்து அங்குவரும் நிலத்தரகர் சண்முகசுந்தரம் (சண்முகசுந்தரம்) ராசுப் படையாச்சியைப் பற்றி தெரிவித்த பிறகு தங்களின் தவறை உணர்கிறார்கள் மணிமாறன் மற்றும் மன்னார். எனவே தன் தந்தையின் அறிவுரைப்படி அன்று இரவே ராசுப் படையாச்சியிடம் மன்னிப்புக் கேட்கச் செல்லும் மணிமாறனை ராசுப் படையாச்சி பெருந்தன்மையோடு மன்னிக்கிறார். அதே நேரத்தில் மனம் பொறுக்காமல் வேலு கிராமத்தினரிடம் உண்மையைச் சொல்லிவிட, ஆத்திரத்தோடு ராசுப் படையாச்சிக்குத் தெரியாமல் ஆயுதங்களோடு சுந்தரபுரம் சென்று அந்தக் கிராமத்தையே அழித்துவிடுகின்றனர். அந்தக் கலவரத்தில் மணிமாறனின் பெற்றோரும், ஜெயந்தியின் தாயும் இறக்கின்றனர்.

சுந்தரபுரத்திற்குத் திரும்பும் மணிமாறன் தன் ஊரின் நிலையைக் கண்டு மனம் கொதிக்கிறான். இதற்கு ராசுப் படையாச்சிதான் காரணம் என்று நினைத்து அவரைப் பழிவாங்க எண்ணுகிறான். இதற்குத் தான் காரணமில்லை என்று கூறும் ராசுப் படையாச்சி அனாதையாக நிற்கும் ஜெயந்தியைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறுகிறார். தன் தாயின் மரணத்திற்கு ராசுப் படையாச்சியைக் கொன்று பழிவாங்க நினைத்துத் திருமணம் செய்துகொள்ளும் ஜெயந்தி நாளடைவில் ராசுப் படையாச்சியின் நல்ல குணத்தைப் புரிந்துகொள்கிறாள். தன்னைக் கொல்லவரும் மணிமாறன் மற்றும் மன்னாரிடம் தான் எந்தத் தவறும் செய்யவில்லை என்று சொல்லி ராசுப் படையாச்சி புரியவைக்கிறார். அன்பினால் மட்டுமே இந்த உலகை வெல்ல முடியும் என்ற நல்ல கருத்தோடு படம் நிறைவடைகிறது.

நடிகர்கள்

தயாரிப்பு

தினமலர் : சமுதாயத்திற்கான நல்லெண்ண நோக்கத்தை கொண்ட இப்படத்திற்கு தமிழ்நாடு அரசின் சிறந்த படத்திற்கான விருது (1998) கிடைத்தது. மேலும், அந்த ஆண்டிற்கான சிறந்த வில்லன் விருது ரஞ்சித்திற்கும், சிறந்த வசனகர்த்தா விருது இயக்குனர் பாரதிக்கும் கிடைத்தன. இப்படம் விமர்சகர்கள், மக்களின் நல்லாதரவோடு வணிகரீதியாகவும் வெற்றி பெற்றது.[1]

மறுமலர்ச்சி படம் தான் கலாபவன் மணியின் முதல் தமிழ்ப்படம்.[2]

விருதுகள்

தமிழக அரசு திரைப்பட விருதுகள் 1998

இசை

படத்தின் இசையமைப்பாளர் எஸ். ஏ. ராஜ்குமார்.

வ. எண் பாடல் பாடகர்கள் பாடலாசிரியர் காலநீளம்
1 நன்றி சொல்ல உனக்கு ஹரிஹரன் , அம்ருதா வாலி 3:41
2 பங்கஜமே ரங்கமணியே சித்ரா 4:39
3 ஊரழுதா உன்னிகிருஷ்ணன் 2:17
4 ஐயிரண்டு மாதங்கள் உன்னிகிருஷ்ணன் 2:12
5 மண்ணுக்குள்ள எஸ். ஏ. ராஜ்குமார் வி. சி. விஜய்சங்கர் 9:33
6 நன்றி சொல்ல உனக்கு உன்னிகிருஷ்ணன், சித்ரா வாலி 3:46
7 ரெட்டைக்கிளி ஸ்வர்ணலதா, டி. கே. கலா, மன்சூர் அலி கான் 4:22
8 கம்பனுக்கு கை கொடுத்து எஸ். ஏ. ராஜ்குமார் 5:54

மறு ஆக்கம்

மறுமலர்ச்சி திரைப்படத்தின் மறு ஆக்கம்
மறுமலர்ச்சி (1998) பெல்லாரி ராஜா சூரியுடு (1998) பிஹூல் ஆர் ஆக் (1999) சூரப்பா (2000)
தமிழ் மலையாளம்

(மொழி மாற்றம்)

தெலுங்கு இந்தி கன்னடம்
ராசு படையாச்சி (மம்மூட்டி) பெல்லாரி ராஜா (மம்மூட்டி) ராஜசேகர் ஜமீன்தார் தவா (மிதுன் சக்கரவர்த்தி ) சூரப்பா (விஷ்னுவர்தன்)
ஜெயந்தி (தேவயானி) (தேவயானி ) சௌந்தர்யா ஜெயந்தி (அர்ச்சனா) (சுருதி)
மணிமாறன் (ரஞ்சித்) (ரஞ்சித் ) (சரண் ராஜ்) ஜஸ்வந்த் (ஜாக்கி ஷெரப் ) (சரண்ராஜ்)
மன்னாரு (மன்சூர் அலி கான்) (மன்சூர் அலிகான் ) (ஸ்ரீஹரி) சுராஜ் (தாலிப் தஹில் ) (சி. குரு தத்)
வேலு (கலாபவன் மணி) (கலாபவன் மணி ) (அலி) கோபி (ராகேஷ் பேடி ) (ரமேஷ் பட்)
ராசு படையாச்சியின் தாய் (மனோரமா) (மனோரமா) (அன்னபூர்ணா) மம்மாஜி (அருணா இரானி ) (சத்யப்ரியா)

மேற்கோள்கள்

  1. "ஓல்ட் இஸ் கோல்ட் - தினமலர்". http://www.dinamalarnellai.com/web/news/30781.
  2. "கலாபவன் மணியின் முதல் தமிழ்ப்படம்".

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.