கொச்சி ஹனீஃபா

சலீம் அகமது கோஷ் (ஏப்ரல் 22, 1948 - பிப்ரவரி 2, 2010) பலராலும் அவரது திரைப்பெயரான கொச்சி ஹனீஃபா(மலையாளம்: കൊച്ചിന്‍ ഹനീഫ) என்று அறியப்பட்ட ஓர் இந்திய திரைப்பட நடிகர், திரைப்பட இயக்குனர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர். புனித ஆல்பர்ட் கல்லூரியில் தாவரவியலில் பட்டம் பெற்ற இவர் கொச்சின் கலாபவன் நாடக கலைக்கூடத்தில் இணைந்து நாடக நடிகராக நடிப்பு வாழ்வை துவக்கினார். ஹனீபா என்று ஒரு கதாபாத்திரத்தில் நடித்தது புகழ்பெற்றதால் தன் பெயரை கொச்சி ஹனீபா என மாற்றிக்கொண்டார். துவக்கத்தில் ஓர் எதிர்மறை நடிகராக, வில்லனாக, நடித்து வந்தவர் பின்னாளில் சிறந்த நகைச்சுவை நடிகராக மலையாளத் திரையுலகிலும் தமிழ்த் திரையுலகிலும் வெற்றி பெற்றார். தமிழ், மலையாளம் மற்றும் இந்தித் திரைப்படங்களில் 300க்கும் கூடுதலான திரைப்படங்களில் நடித்துள்ளார். ஓர் திரைப்படத் தயாரிப்பாளராக அவரது வால்த்சல்யம் (1993) மூலம் அறிமுகமானார். கொச்சி ஹனீபா, மகாநதி, லேசா லேசா, வேட்டைக்காரன், பாசப்பறவைகள்,வானமே எல்லை உள்ளிட்ட பல்வேறு தமிழ் படங்களிலும் நகைச்சுவை மற்றும் குணசித்ர வேடங்களிலும் நடித்திருக்கிறார். அவர் கல்லீரல் புற்றுநோயால் அவதிப்பட்டு ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் மருத்துவமனையில் பெப்ரவரி 2, 2010 அன்று மாலை 3 மணி அளவில் இறந்தார்.[1][2]

கொச்சி ஹனீஃபா (வி. எம். சி. ஹனீஃபா)
கொச்சி அனீபா 2008இல்
பிறப்பு ஏப்ரல் 22, 1948(1948-04-22)
கொச்சி, கேரளா, இந்தியா
இறப்பு பெப்ரவரி 2, 2010(2010-02-02) (அகவை 61)
சென்னை, இந்தியா
துணைவர் ஃபாசிலா
பிள்ளைகள் சரீ்பா, மார்வா

மேற்கோள்கள்

  1. http://thatstamil.oneindia.in/movies/news/2010/02/02-malayalam-actor-cochin-haneefa-passes.html
  2. http://www.manoramaonline.com/cgi-bin/MMOnline.dll/portal/ep/contentView.do?contentId=6678535&tabId=1&channelId=-1073865030&programId=1080132912&BV_ID=@@@

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.