காதல் (திரைப்படம்)

காதல் திரைப்படம் 2004 ஆம் ஆண்டில் வந்த தமிழ்த் திரைப்படமாகும்.பாலாஜி சக்திவேலின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பரத், சந்தியா, சுகுமார் மற்றும் பலர் நடித்துள்ளனர். குறைந்த செலவில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் அதிக வசூலையும் அதே சமயம் மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது. மேலும் இத்திரைப்படம் தென்னிந்தியத் திரைப்படங்களிற்கு வழங்கப்படும் விருதான பில்ம்பேரின் 2004 ஆம் ஆண்டின் சிறந்த திரைப்படம் என விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.

காதல்
இயக்கம்பாலாஜி சக்திவேல்
தயாரிப்புஷங்கர்
கதைபாலாஜி சக்திவேல்
இசைஜோஷ்வா ஸ்ரீதர்
நடிப்புபரத்
சந்தியா
சுகுமார்
விநியோகம்எஸ். பிக்சர்ஸ்
வெளியீடு2004
மொழிதமிழ்

வகை

உண்மைப்படம் / காதல்படம்

கதை

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

மோட்டார் வண்டிகள் திருத்தும் கடையினை வைத்திருப்பவர் முருகன் (பரத்). எப்பொழுதும் தன் வேலையினைக் கவனிப்பது அவரது குறிக்கோள். ஆனால் திடீரென அவர் சந்திக்கும் அப்பகுதியில் வசிக்கும் ஐஸ்வர்யா (சந்தியா) முருகன் மீது காதல் கொள்கின்றார். ஆரம்ப காலங்களில் இதனைப் பொருட்படுத்தாது இருக்கும் முருகன் சிறிது காலத்தில் ஐஸ்வர்யா மீது காதல் கொள்கின்றார். இதற்கிடையில் ஐஸ்வர்யாவின் வீட்டில் அவருக்கு மாப்பிள்ளை பார்க்கின்றனர். கவலையில் இருக்கும் காதலர்களான முருகனும் ஐஸ்வர்யாயும் அவ்வூரை விட்டே தலைமறைவாக முடிவு செய்கின்றனர். இவர்கள் தங்குவதற்காக முருகனின் நண்பனான ஸ்டீபன் (சுகுமார்) அனைத்து வசதிகளையும் செய்கின்றான்.

திடீரென ஐஸ்வர்யாவைத் தேடிவரும் அவர் பெற்றோர் இவர்கள் காதல் கொண்டிருப்பதை அறிகின்றனர். ஆரம்பத்தில் இருவரையும் சேர்த்து வைப்பதாகக் கூறிக்கொள்ளும் அவர்கள் பின்னர் முருகனை அடித்து சித்திரவதை செய்கின்றனர். சிறிது காலங்கள் கழித்து முருகன் பைத்தியமாக தெருக்களில் அலைந்து திரிவதனைக் கண்டு கொள்ளும் ஐஸ்வர்யா மற்றும் அவரது பெற்றோர்களின் வற்புறுத்தலுக்கு ஏற்ப அவரும் அவர் மணம் செய்த கணவர் இருவரும் முருகனைத் தம் இல்லத்திற்கே அழைத்துச் செல்கின்றனர்.

பாடல்கள்

யோசுவா ஸ்ரீதர் இசையமைத்த இப்படத்தில் எட்டு பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இப்பாடல்களை கவிஞர் நா. முத்துக்குமார் எழுதியுள்ளார்.

எண் தலைப்புபாடகர்(கள்) நீளம்
1. "பூவும் புடிக்குது"  கிரிஷ், பாப் ஷாலினி, திப்பு 3:29
2. "இவன்தான்"  சுனிதா சாரதி 2:09
3. "தன்டாத்தி கருப்பாயி"  பாப் ஷாலினி, வித்யா, மலர், மாலையம்மா 5:45
4. "தொட்டுத் தொட்டு"  ஹரிசரண், ஹரிணி சுதாகர் 5:41
5. "புறா கூண்டு"  சுரேஷ் பீட்டர்ஸ், ஹரிஷ் ராகவேந்திரா, திப்பு, பிரேம்ஜி, கருணாஸ் 5:31
6. "கிறு கிறு"  கார்த்திக், பாப் ஷாலினி 4:32
7. "உனக்கென இருப்பேன்"  ஹரிசரண் 6:16
8. "காதல்"  ஹரிசரண் 4:03

மேற்கோள்கள்

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.