பாப் ஷாலினி
பாப் ஷாலினி என பிரபலமாக அழைக்கப்படும் ஷாலினி சிங் , இந்தியாவிலுள்ள தமிழ்நாட்டின் பாடகர் ஆவார்.[1] ஷாலினி என்ற ஒரு இசைட்தொகுப்பை அவர்தனது பதின்மூன்றாம் வயதிலேயே வெளியிட்டார். அவர் இந்திய திரைப்படங்கள் மற்றும் இசைத் தொகுப்புகளுக்கான பல்வேறு இந்திய மொழிகளில் 5000 க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடினார். ஏ. ஆர். ரகுமான் , ஹாரிஸ் ஜெயராஜ் , இளையராஜா , யுவன் ஷங்கர் ராஜா , வித்யாசாகர் மற்றும் பலரின் இசையில் பாடியுள்ளார்.
ஷாலினி சிங் | |
---|---|
பிறப்பு | 4 நவம்பர் 1984 சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
இசை வடிவங்கள் | இந்திய இசை, பின்னணிப் பாடகர் |
தொழில்(கள்) | பாடகி |
இசைக்கருவி(கள்) | பாடுதல் |
இசைத்துறையில் | 1997 முதல் தற்போது வரை |
இணையதளம் | singershalini.blogspot.com |
ஷாலின் ஒரு பாடகர், நடிகர், பதிவர் மற்றும் எழுத்தாளர் ஆவார். அவர் 1984 இல் பிறந்தார். அவர் தின்செல் ரங்கி தயாரிப்பு நிறுவனத்தின் முதன்மை அதிகாரி ஆவார்.[2] அவர் பாலாஜி என்பவரைத் திருமணம் செய்து கொண்டார், அவருக்கு ஆதித்யா என்கிற மகன் இருக்கிறார். தற்போது அவர் சென்னையில் வசிக்கிறார். அவரது கணவர் ஸ்வீடன் சார்ந்த நிறுவனத்தில் பொது மேலாளராகப் பணியாற்றுகிறார்.[3]
ஆரம்ப வாழ்க்கை
தமிழ்நாட்டில் பிறந்தவர் ஷாலினி, இவருடைய பெற்றோரின் ஒரே மகளாவார் அதனால் அவர்களின் கவனத்தை முழுவதும் பெற்றார். இவர் புனித ஏஞ்சல்ஸ் கான்வெண்ட் பள்ளியில் படித்தார். மேலும் ஆல்பா முதல் ஒமேகா வரையிலான இசை பயிற்சியினை முடித்தார். இவர் தனது மூன்றாம் வயதுமுதல் பாடத்தொடங்கினார்.
புனித ஏஞ்சல்ஸ் கான்வென்ட் பள்ளியில் முதல் வகுப்பில் படிக்கும்போது தூர்தர்ஷனுக்காக அவர் பாடினார். இது 1980 களில் லிட்டில் ஸ்டார்ஸ் பிரிவில் 10 நிமிட நிகழ்ச்சியாக இருந்தது. சென்னையில் உள்ள பிரையன் மற்றும் கிறிஸ்டின் பால் ஆகியோர் உள்ளிட்ட குழுமத்தின் ஒரு பகுதியாக அழைக்கப்பட்டார். இவரது ஐந்தாவது வயதில் முதல் ஜிங்கிளை பாட தாயன்பன் ஒரு வாய்ப்பு வழங்கினார்.
தொழில்
13 வயதில் 'ஷாலினி' என்ற பெயரில் அவரது முதல் இசைத்தொகுப்பு வெளியிடப்பட்டது. இது தமிழ் மொழியில் எட்டு பாடல்களின் கலவையாகும். ஹரிஸ் ஜெயராஜால் எழுதப்பட்ட காக்க காக்க என்கிற படத்தில் இடம்பெற்ற என்னைக் கொஞ்சம் மற்றும் முதல் நாள் ஆகிய பாடல்களில் பெரும்பங்காற்றியுள்ளார். பல இந்தி இசைத்தொகுப்புகளிலும் அவர் பாடியுள்ளார். மேற்கத்திய இசையை பதினொரு ஆண்டுகள் கற்றுத் தேர்ந்தபின், கர்நாடக இசையை இரண்டு ஆண்டுகளாகக் கற்றுக்கொண்டார். பின்னர் அவர் ஹிந்துஸ்தானி இசையை ஆறு ஆண்டுகளாகக் கற்றுக்கொண்டார். 2014 ஆம் ஆண்டில் தனது எட்டாவதுவது பியானோ பாடங்கள் தேர்வை முடித்தார்.