அப்போலோ மருத்துவமனை

அப்போலோ மருத்துவமனை (ஆங்கிலம்:Apollo Hospitals) இந்தியாவின் சென்னையில் அமைந்துள்ள ஒரு பெரிய மருத்துவமனை ஆகும். இது பிப்ரவரி 5, 1986 ஆம் ஆண்டு அன்று பிரதாப் சந்திர ரெட்டியால் நிறுவப்பட்டது.[1] மேலும் அப்போலோ மருத்துவமனை அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்தியா முழுவதும் இன்னும் 2,955 க்கும் கூடுதலான படுக்கை வசதிகள் கூடிய மருத்துவமனைகளைத் திறக்க திட்டமிட்டுள்ளது.[2]

அப்போலோ மருத்துவமனை
Apollo Hospitals
வகைபொது
நிறுவுகைபிப்ரவரி 5, 1986
தலைமையகம்சென்னை,  இந்தியா
முக்கிய நபர்கள்பிரதாப் சி. ரெட்டி, நிறுவனர் மற்றும் தலைவர்
பிரீத்தா ரெட்டி, மேலாண் இயக்குனர்
சுனிதா ரெட்டி, இயக்குனர்
சங்கீதா ரெட்டி, இயக்குனர்
சங்கீதா ரெட்டி, இயக்குனர்
சோபனா காமினேனி, இயக்குநர்
கே. ஹரி பிரசாத், சீஇஓ – மத்திய மண்டலம்
சத்யநாராயனா, சீஇஓ – சென்னை
தொழில்துறைசுகாதார பராமரிப்பு
வருமானம்31.73 பில்லியன்
(US$447.53 மில்லியன்)
(2012)
பணியாளர்10,000 +
இணையத்தளம்www.apollohospitals.com

நினைவு தபால் தலை

இந்திய அரசு அப்போலோ மருத்துவமனையின் 30 ஆண்டு சேவையைப் பாராட்டி செப்டம்பர் 18, 2013 அன்று நினைவு தபால் தலை ஒன்றை வெளியிட்டு கவுரவித்தது. மருத்துவ சிகிச்சை அளிக்கும் நிறுவனம் ஒன்றுக்கு இவ்விதமான பெருமை கிடைத்தது இந்தியாவில் இதுவே முதல்முறையாகும்.

ஆதாரங்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.