ஆஃபினியம் நாற்புரோமைடு

ஆஃபினியம் நாற்புரோமைடு (Hafnium tetrabromide) என்பது HfBr4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். ஆஃபினியத்தின் சேர்மங்களில் பரவலாகக் காணப்படும் புரோமைடு ஆஃபினியம் நாற்புரோமைடு ஆகும். நிறமற்று எதிர்காந்தப் பண்புடன் காணப்படும் இச்சேர்மம் ஈரப்பதத்தால் பாதிக்கப்படும் தன்மை கொண்ட திண்மமாக உள்ளது மற்றும் வெற்றிடத்தில்[1] பதங்கமாகிறது. சிர்க்கோனியம் நாற்புரோமைடின் மூலக்கூறு வடிவமைப்பையே இதுவும் கொண்டுள்ளது. ஆஃபினியம் நாற்குளோரைடின் பலபடியாகும் தன்மை அமைப்பிலிருந்து வேறுபட்டு நான்முக ஆஃபினியம் மையங்களுடன் தோற்றமளிக்கிறது[2].

ஆஃபினியம் நாற்புரோமைடு
இனங்காட்டிகள்
13777-22-5
பண்புகள்
Br4Hf
தோற்றம் நிறமற்ற திண்மம்
அடர்த்தி 5.094 கி/செ.மீ3
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

மேற்கோள்கள்

  1. W. Thomas, H. Elias "Darstellung von HfCl4 und HfBr4 durch Umsetzung von Hafnium mit Geschmolzenen Metallhalogeniden" Journal of Inorganic and Nuclear Chemistry 1976, Volume 38, Pages 2227–2229. எஆசு:10.1016/0022-1902(76)80199-6
  2. Berdonosov, S. S.; Berdonosova, D. G.; Lapitskii, A. V.; Vlasov, L. G. "X-ray study of hafnium tetrabromide" Zhurnal Neorganicheskoi Khimii, 1963, vol. 8, 531-2.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.