விழி வெண்படல அழற்சி
விழி வெண்படல அழற்சி (Conjunctivitis) என்பது விழிச் சவ்வில் (கண்ணின் வெளிப்புறச் சவ்வு, கண்ணிமைகளின் உட்புறச் சவ்வு) ஏற்படும் அழற்சியாகும்[1]. இது, வடஅமெரிக்காவில் இளம் சிவப்புக்கண் (Pink eye)[1] என்றும், இந்தியாவில் சென்னைக் கண் நோய் (Madras eye)[2] என்றும் அழைக்கப்படுகிறது. பொதுவாக, விழி வெண்படல அழற்சி நோய்த்தொற்று (வழக்கமாக தீ நுண்மம், சிலவேளைகளில் பாக்டீரியா[3]) அல்லது ஒவ்வாமை ஆகியவற்றால் ஏற்படுகின்றது.
விழி வெண்படல அழற்சி | |
---|---|
![]() | |
தீநுண்ம அழற்சியால் பாதிப்படைந்த கண் | |
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள் | |
சிறப்பு | ophthalmology |
ஐ.சி.டி.-10 | H10. |
ஐ.சி.டி.-9 | 372.0 |
நோய்களின் தரவுத்தளம் | 3067 |
MedlinePlus | 001010 |
ஈமெடிசின் | emerg/110 |
Patient UK | விழி வெண்படல அழற்சி |
MeSH | D003231 |
வகைப்பாடு
உருவாக்கும் காரணிகள், அழற்சியடைந்த பரப்பின் அளவு ஆகியவற்றின் அடிப்படையில் விழி வெண்படல அழற்சி வகைப்படுத்தப்படுகிறது.
உருவாக்கும் காரணிகள்
- ஒவ்வாமை விழி வெண்படல அழற்சி, ஒவ்வாமையூக்கிகளான மகரந்தம், வாசனைத் திரவியங்கள், ஒப்பனைப் பொருட்கள், புகை,[4] அகத்தூசிக் கிருமிகள் (dust mites), பெரூ நாட்டு வாசனைப் பிசின்,[5], கண்சொட்டு மருந்துகள்[6] ஆகியவற்றால் ஏற்படலாம். தோல்திட்டுச் சோதனையின் (skin patch test) மூலம் ஒவ்வாமை விழி வெண்படல அழற்சிக்குக் காரணமான ஒவ்வாமையூக்கி கண்டறியப்படுகிறது[7].
- தீநுண்ம விழி வெண்படல அழற்சி
- பாக்டீரிய விழி வெண்படல அழற்சி
- புனிற்றுக்கண் சவ்வழற்சி (Neonatal conjunctivitis)
- வேதியிய விழி வெண்படல அழற்சி
- தன்னுடல் தாக்குமை
மேற்கோள்கள்
- Richards A, Guzman-Cottrill JA (May 2010). "Conjunctivitis". Pediatr Rev 31 (5): 196–208. doi:10.1542/pir.31-5-196. பப்மெட்:20435711.
- "Beware, 'Madras eye' is here!". The Hindu. 12 October 2001. http://www.hinduonnet.com/2001/10/12/stories/0412402c.htm. பார்த்த நாள்: 30 October 2008.
- Langley JM (July 2005). "Adenoviruses". Pediatr Rev 26 (7): 244–9. பப்மெட்:15994994.
- "Allergic Conjunctivitis". familydoctor.org. பார்த்த நாள் 2010-04-06.
- Pamela Brooks – (2012-10-25). The Daily Telegraph: Complete Guide to Allergies. http://books.google.com/books?id=eReGG6UtxbcC&pg=PT413&lpg=PT413&dq=conjunctivitis+%22balsam+of+peru%22&source=bl&ots=S2Ig2AaO8N&sig=Tjcn0xQNqdrDzSyPrq-NRPHv7hU&hl=en&sa=X&ei=JXVNU9y4O9DUsASz-4CwBQ&ved=0CDEQ6AEwAQ#v=onepage&q=conjunctivitis%20%22balsam%20of%20peru%22&f=false. பார்த்த நாள்: 2014-04-15.
- "What Is Allergic Conjunctivitis? What Causes Allergic Conjunctivitis?". medicalnewstoday.com. பார்த்த நாள் 2010-04-06.
- Mark J. Mannis, Marian S. Macsai, Arthur C. Huntley (1996). Eye and skin disease. Lippincott-Raven. http://books.google.com/books?id=FtlsAAAAMAAJ&q=Conjunctivitis+%22patch+test%22&dq=Conjunctivitis+%22patch+test%22&hl=en&sa=X&ei=oY9UU932MMPjsAT5j4KYCg&ved=0CF8Q6AEwBg. பார்த்த நாள்: 2014-04-23.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.